Category: Daily Manna

இறையாட்சி – நம்பிக்கையின் செயல்வடிவம்

இயேசுகிறிஸ்து இறையரசை ஒப்பீட்டுப்பேசுகிற நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து தனது பணியைத் தொடங்கும்போது “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது”(மாற்கு 1: 15) என்று கூறுகிறார். இறையாட்சி என்றால் என்ன? யூதர்களைப்பொறுத்தவரை, இந்த உலகத்தைப்பற்றிய அவர்களுடைய பார்வை இதுதான்: இந்த உலகத்தில் தீய ஆவிகளுக்கும், கடவுளுக்கும் இடையே போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. மெசியா வந்து தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்று, தன்னுடைய அரசை நிலைநாட்டுவார் என அவர்கள் நம்பினர். மெசியா வரக்கூடிய காலத்தில் ஒருசில அருங்குறிகள் தோன்றும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. இத்தகைய நம்பிக்கையைத்தான் இயேசு அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறார். இறையரசு எப்படி இருக்கும் என்பதை உவமைகளால் அவர் எடுத்துரைக்கிறார். இறையரசு என்பது நம்பிக்கை செயல்வடிவம் பெறுகிற நிகழ்வு. இயேசுவின் வாழ்வு, துவண்டுபோயிருந்த மக்களுக்கு, காத்திருந்து காத்திருந்து அழுது வீங்கிய விழிகளோடு ‘தங்கள் பிரச்சனைகளுக்கு கடவுள் ஒரு முடிவு தரமாட்டாரா?’ என்ற நம்பிக்கையோடு காத்திருந்த ஏழை, எளியவர்களுக்கு கடவுளின் அன்பை உணரச்செய்வதாக இருந்தது....

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...

மனவுறுதியுடன் வாழ இறைவல்லமை வேண்டுவோம்!

வாழ்வு என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த வாழ்வை நாம் வாழ ஆரம்பிக்கின்றபோது நெருக்கடிகள், இன்னல்கள், சோதனைகள், இடர்பாடுகள் வருவது இயல்பு. இவை அனைத்தும் இருந்தாலும், துணிவோடு முன்னேறிச்சென்று வாழ்வில் வெற்றி வாகை சூடுவதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. நமது வாழ்க்கையே சோகமயமாவதற்கு முக்கியக்காரணம், துன்பமே இல்லாத வாழ்வை வாழ நாம் ஆசைப்படுகிறோம். எனவேதான், சிறிய கஷ்டம் வந்தாலும், நம்முடைய வாழ்வே முடிந்துவிட்டது போன்று நாம் வேதனைப்படுகிறோம். துவண்டுவிடுகிறோம். ஆனால், துன்பம் வாழ்வின் அங்கம் என்பதை உணர்ந்து வாழ்கிறவர்களின் வாழ்வு நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்வாக இருக்க முடியும். அதற்காக கடவுள்தான் துன்பத்தைத்தருகிறார் என நாம் நினைத்துவிடக்கூடாது. காரணம் கடவுள் நமக்கு துன்பத்தைத்தருவதற்காக இந்த உலகத்தை படைக்கவில்லை. நாம் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம். யாக்கோபு 1: 13 சொல்கிறது: “சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும்...

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்!

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகிறவரே என் தாயும், சகோதரியும், சகோதரரும் ஆவார் என்று இயேசு சொல்கிறார். இந்த உலகத்திலே நாம் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம், நம்முடைய பெற்றோரும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். கடவுளும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை அறிந்து செயல்படுத்துவதுதான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது ஆகும். தாயின் கருவறையில் உருவாவதற்கு முன்பே நம்மை முன்குறித்து வைத்திருக்கிற நமது இறைவன், நாம் செய்ய வேண்டிய பணி என்று ஒன்றை, நமக்காக வைத்திருக்கிறார். நம்முடைய வாழ்வின் நோக்கம் அந்தப்பணியைச்செய்து முடிப்பது தான். நம்மைத்தவிர, வேறு யாரும் அந்தப்பணியைச்செய்ய முடியாது. ஆனால், அதே வேளையிலே, கடவுள் யாரையும் வற்புறுத்துவதில்லை. முழுச்சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நமக்காக கடவுள் வைத்திருக்கிற அந்தப்பணியை அடையாளம் கண்டுகொண்டு, அதைத்திறமையாக செய்து முடிக்கும்போது, இறைத்ருவுளத்திற்கு பணிந்து நடக்கிறவர்களாக நாம் வாழ்கிறோம். இயேசுவின் குடும்பத்தில் ஒருவராக நாம் மாறுகிறோம். கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள நமக்கு உதவி செய்வது, நம்முடைய செபம்....

பொறுமை – வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம்

எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வேட்கை, மறைநூல் அறிஞர்களின் அறிவுக்கண்களை மறைத்துவிடுகிறது. அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மேல் சுமத்துகிறார்கள். இயேசு இதை அறியாதவரல்ல. அதற்காக, நிதானம் இழந்து அவர்கள் மீது கோபப்படுகிறவரும் அல்ல. நிதானம் இழக்காமல் பொறுமையோடு, அதேநேரம் துணிவோடு அவர்களின் கூற்றைப்பொய்யாக்குகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில் பேய்களை ஓட்டக்கூடிய மந்திரவாதிகள் எத்தனையோ பேர் இருந்தனர். பேய் பிடித்திருந்தால் இவர்களை மக்கள் நாடிச்செல்வது சாதாரணமான செயல். இயேசுவிடமும் அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் பேய்பிடித்தவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், அவர் மீது சமத்தப்பட்ட ‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இயேசுவின் பதில் மக்களுக்கு அவர்மீதுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒரு அரசன் தன்னுடைய வீரர்களைப்பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக்கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப்புரியாதவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த...