அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்
திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5 ”அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக்...