தூக்கி எறிபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்
மாற்கு 11: 27-33 ஒரு அருமையான பொன்வரி இப்படி ஆரம்பமாகிறது, ”தூக்கி எறிபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவர்களே உங்களை முளைக்கவைப்பர்கள்”. நம்முடைய மனது நம்மை தூக்கி எறிபவர்களை தூரே வைக்க வேண்டும் என துடியாய்த் துடிக்கிறது. அவர்களை விரோதியாய் பார்க்கிறது. பகைமையை போகும் இடமெல்லாம் வளர்க்கிறது. இதனால் பல பகைவர்கள் நம் வாழ்க்கையின் வட்டத்திற்குள் வருகிறார்கள். இதனால் வாழ்க்கையின் வசந்தக்காற்று நம் பக்கம் வீசாமலேயே போகிறது. இப்படி வாழ்க்கையை களிக்கிற நமக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கனிவான பாடத்தை புகட்டுகிறார் நம் ஆண்டவர் இயேசு. தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் இயேசுவை தங்கள் அதிகாரத்தால் விரோதியாக பார்த்தனர். பல தொல்லைகளை கொடுத்துக்கொண்டே இருந்தனர். விரோதியாய் பார்த்து வாழ்கையை அனுபவிக்காமலேயே இந்த உலகத்தை விட்டு காணாமல் போய்விட்டனர். ஆனால் இயேசு விரோதியாய் வந்தவர்களை தன் கனிவால் உருக வைத்தார். தன் அன்புக் கலந்த அதிகாரத்தால் தன் ஊழியர் ஆக்கினார். தூக்கி...