Category: Daily Manna

வாய் திறந்தது, வாழ்த்தியது

லூக்கா 1:67-79 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவரின் தூதர் சொன்னப்படியே திருமுழுக்கு யோவான் பிறந்ததும் பேச்சிழந்த செக்கரியா சத்தமாக பேசுகிறார். பேச முடியாமல் இருந்த நிலையில் அவர் பலவற்றை பேச முடியவில்லை. ஆகவே அனைத்தையும் சேர்த்து மொத்தமாக இப்போது பேசுகிறார், பாடுகிறார். வாழ்த்துகிறார். அவருடைய வாழ்த்திலிருந்து நாம் இரண்டு செய்திகளை நம் வாழ்க்கை பாடமாக பெற முடிகிறது. 1. நம்பிக்கைக்குரியவர் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர் என்பதை செக்கரியாவின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே அவநம்பிக்கை இல்லாமல் கடவுளின் வரத்திற்காக காத்திருந்து ஜெபிக்க வேண்டும் என்றும் செக்கரியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவநம்பிக்கை கொள்ளும்போது நாம் கடவுளை பரிசோதிக்கிறோம். அது மிகவும் தவறானது என்பது நமக்கு தெரிகிறது. அவர் என்றும்...

அமைதியே அனைத்தையும் சாதிக்கும்

லூக்கா 1:39-45 இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு அமைதியின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மெசியாவின் பிறப்பிற்கு நம்மையே தயாரிக்கும் நம் மனதில் அமைதி மலர வேண்டும், அமைதிதான் அனைத்தையும் சாதிக்கும், அமைதியின் ஆட்சி அகிலத்தில் நடக்க உழைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கங்களோடு திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு வந்திருக்கிறது. மனசு அமைதியாயில்லன்னா… ரொம்ப கஷ்டம். மனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும். மனஅமைதி இல்லையென்றால் நாம் அனுபவிக்கும் பாதிப்புகளின் பட்டியல் நீளமாகும். மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது....

நல்லா பாடுங்க! சத்தமா பாடுங்க!

லூக்கா 1:46-56 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாள் ஆண்டவரிடமிருந்து அளப்பெரிய நன்மைகளை பெற்று அவரின் அன்பை ஒரு பாடலாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் பாடுகிறார். அவருடைய பாடலில் போற்றுதல், நன்றி, கடவுளின் சிறப்பான பண்புகள் ஆகியவற்றை அடுக்கி வைத்து இந்த பாடலை அவர் இசைத்திருக்கிறார். அன்னையைப் போன்று நாமும் பல அளப்பெரிய நன்மைகளை நம் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அப்படி பெறுகின்ற நாம் என்ன செய்ய வேண்டும்? இறைவனைப் பற்றிய இசையை வெளியிட வேண்டும். 1. ஆலயத்தில் பாடுங்க… ஆண்டவரின் அதிசயமான நன்மைகளைப் பற்றிய புத்தகங்களை நாம் படைக்க வேண்டும். அந்த புத்தகங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து புறப்பட்டு...

இகழ்ச்சி இன்றிலிருந்து இருக்காது…

லூக்கா 1:5-25 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். செக்கரியா – எலிசபெத்து தம்பதியினர் பிள்ளை இல்லாமல் மிகவும் இகழ்ச்சிக்குள்ளாயிருந்தனர். அக்கம் பக்கத்தார் அவர்களை அதிகம் வார்த்தைகளால் குத்தினர். அவர்கள் மனம் பாரமாக இருந்தது. அந்த பாரத்தை, அந்த இகழ்ச்சியை ஆண்டவர் நீக்குவதை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன் வைக்கிறது. அவர்களின் இகழ்ச்சியை நீக்கிய ஆண்டவர் நம் இகழ்ச்சியையும் நீக்குவார் என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது இன்றைய வழிபாடு. அதற்காக நாம் மனதில் நிறுத்த வேண்டிவைகள் இரண்டு: 1. கடவுள் மறப்பதில்லை பல நாட்கள் கடந்திருக்கலாம். ஆனால் நாம் கேட்டது கண்டிப்பாக நடக்கும். நாட்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கிறதே கிடைக்குமா? என்று நினைக்க வேண்டியதில்லை. செக்கரியா – எலிசபெத்து தம்பதியனர் ஏற்கனெவே...

தவறுகளை தனியே திருத்து…

மத்தேயு 1:18-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிலர் தவறுகள் செய்யும்போது உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு நாம் பொது இடத்திலே திருத்த விழைகிறோம். இதனால் தவறு செய்தவரின் மனம் உடைகிறது. இப்படி செய்வதனால் அவருக்குள் இருக்கும் மகிழ்ச்சியும் மறைகிறது. தவறு செய்தவரை எப்படி திருத்த வேண்டும் என்பது பற்றி யோசேப்பு இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லித் தருகிறார். அன்னை மரியாள் அவரோடு கூடி வாழும் முன் அவர் கருவுற்றிருந்தது அவருக்கு தெரியவந்தது. இருப்பினும் அவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிடத் திட்டமிட்டார். நாமும் மறைவாக தனியே அழைத்து தவறுகளை திருத்தினால் இரண்டு ஆச்சரியங்கள் நடக்கும். 1. அடுத்தவருக்கு உயர்வு தவறுகளை பொதுவில் சுட்டிக்காட்டும்போது அந்த...