Category: Daily Manna

மற்றவர்களை மதித்து நடப்போம்

”உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு, உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம் ”உன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?” என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நிச்சயமாக அவர் புன்முறுவல் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், பழத்திலே ஊசி ஏற்றுவது போல, இயேசு புன்முறுவலோடு, ஒரு செய்தியை அங்கே சொல்கிறார். இயேசு சொல்ல வருகிற செய்தி, இந்த உலகத்தில் யாரும் எவரையும் குற்றப்படுத்திப் பேசுவதோ, தீர்ப்பிடுவதோ, குற்றம் கண்டுபிடிப்பதோ கூடாது. அதற்கு ஒருவரும் தகுதியானவர்கள் கிடையாது. அப்படியே குற்றப்படுத்த விரும்பினாலும், குற்றம் இல்லாதவர்கள் குறைகூறலாம் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் குற்றம் இல்லாதவர்கள் எவருமே கிடையாது. எனவே, யாரும் மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதுதான் இயேசு சொல்கிற செய்தி. ஆனால், நாம் ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை நமது வார்த்தைகளால், செயல்பாடுகளால் காயப்படுத்துகிறோம். உண்மையிலே நாம் நேர்மையாளர்கள் என்றால், நிச்சயம் மற்றவர்களை நாம் குற்றப்படுத்த மாட்டோம். அவர்களை ஏற்றுக்கொண்டு தான் வாழ்வோம். நாம்...

பகைவரை அன்பு செய்வோம்

பகைவர்களை அன்பு செய்வது என்கிற சிந்தனையின் பொருள் பற்றி பல்வேறு விவாதங்கள், சந்தேகங்கள் அனைவரின் உள்ளத்திலும் எழுவது இயல்பு. அன்பு என்பதற்கு கிரேக்க மொழியில் பல அர்த்தங்கள் தரப்படுகிறது. பகைவருக்கு அன்பு என்பதன் பொருள், உள்ளத்திலிருந்து சுரக்கின்ற இரக்கம், நன்மைத்தனம். அதாவது, அடுத்தவர் எனக்கு என்ன தீங்கு இழைத்தாலும் பரவாயில்லை, நான் அவர்களின் நலம் மட்டுமே நாடுவேன் என்கிற உணர்வுதான் பகைவருக்கு காட்டுகின்ற அன்பு. நமது பெற்றோரை அன்பு செய்வது போலவோ, நமது உடன்பிறந்தவர்களை அன்பு செய்வது போலவோ, நமது உறவினர்களை அன்பு செய்வதுபோலவோ நாம் நமது பகைவரை அன்பு செய்ய முடியாது. இதுதான் உண்மை. நமது பெற்றோரை அன்பு செய்வதைப்போல நான் எனது பகைவரை அன்பு செய்யவே முடியாது. இது இயல்பானது. ஆனால், நமது பகைவரின் நலனை நாம் எப்போதும் நாட முடியும். நம்மை மற்றவர்கள் அவமானப்படுத்தலாம், நமக்கு தீங்கு செய்யலாம், நமது பெயரைக்கெடுக்கலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது, அவர்களின் நலன்...

கடவுளின் மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது

திருப்பாடல் 145: 2 – 3, 10 – 11, 12 – 13 நம்முடைய அன்றாட உரையாடலில் நாம் பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துகிற வார்த்தைகளை ஒரே பொருளோடு பயன்படுத்துகிறோமா? என்றால், நிச்சயம் இல்லை. நமக்கு உதவி செய்கிறவர்களை “அவர் மிகவும் நல்லவர்” என்று சொல்கிறோம். கடவுளையும் நல்லவர் என்று சொல்கிறோம். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கக்கூடியதா? என்றால், நிச்சயம் இல்லை. கடவுளுக்கு பயன்படுத்துகிற வார்த்தையின் அர்த்தம் பல மடங்கு, நம்முடைய அறிவுக்கு எட்டாத வகையில் போற்றுதற்குரியது. இன்றைய திருப்பாடலில் ஆசிரியர், ஆண்டவரை ”மாண்புமிக்கவர்” என்று சொல்கிறார். மாண்பு என்பது உயர்ந்த மதிப்பீட்டைக் குறிக்கக்கூடியது. தாராள உள்ளத்தோடு, மன்னிக்கக்கூடிய மனப்பான்மையோடு, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தாழ்ச்சியான மனப்பாங்கோடு, பொறுமையைக் கடைப்பிடிக்கிற ஒருவரை, மாண்புமிக்கவர் என்று சொல்கிறோம். கடவுளுக்கு இந்த வார்த்தையோடு ஒப்பிடுகிறபோது, மனிதர்களுக்கு பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை விட, பல மடங்கு உயர்வானது. அது நம் அறிவுக்கு எட்டாதது என்பதைத்தான்...

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

திருப்படல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11, ”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல...

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

திருப்படல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11 ”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல...