Category: Daily Manna

குழந்தை இயேசுவின் புனித தெரசா – விழா

வாழ்வை மாற்றுங்கள் சீடர்கள் இயேசுவிடத்திலே யார் பெரியவர்? என்ற கேள்வி கேட்கிறார். இயேசு அவர்களிடத்தில் ”நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் சொல்கிறார். சீடர்கள் நிச்சயம் இந்த பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதை, இதை எல்லாம் செய்யுங்கள், நீங்கள் விண்ணரசிற்குள் நுழைய முடியும் என்ற பாணியில், இயேசுவின் பதில் அமைந்திருக்கும் என்று சீடர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இயேசு முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலைத் தருகிறார். அவர்களை மனம் மாறுவதற்கு, மாற்றம் பெறுவதற்கு அழைப்புவிடுக்கின்றார். இதனுடைய அர்த்தம் என்ன? இயேசு எதற்காக மனமாற்றத்தைப் பற்றி இங்கு பேசுகிறார்? அப்படி மனமாற்றம் இல்லையென்றால், விண்ணரசிற்கான வாய்ப்பே இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்கிறார். ஏன்? இயேசுவோடு இருந்து, அவருக்குப் பின்னால் அவருடைய பணி செய்யக்கூடிய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சாதாணமானவர்கள் கேட்கக்கூடிய கேள்வியை கேட்டு, தங்களுக்குள் சண்டையிடுவது இயேசுவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள்...

பின்பற்றுவேன், ஆனால்… !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, இயேசுவிடம் வந்து அவரது சீடராய் வாழ விருப்பம் தெரிவித்த மூன்று மனிதர்களைப் பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். இவர்கள் மூவரும் நம்மையே பிரதிபலிக்கின்றார்கள் என்பதை உணர வேண்டும். நாமும் இயேசுவின் சிறந்த சீடர்களாய் வாழ விரும்புகிறோம். நமக்கும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால், பல தடைகள் நம்மை ஈர்க்கின்றன. சீடராய் வாழவிடாமல் தடுக்கின்றன. எனவே, நாமும் அந்த மூன்று மனிதர்களைப் போல சாக்குபோக்குகளைக் கண்டுபிடிக்கிறோம். முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகள் முடியட்டும், அல்லது இந்தப் பணிகளை ஆற்றிவிட்டு அதன்பின் நான் முழு நேரமாக இறைபணியில் ஈடுபடுவேன் என்றெல்லாம் எண்ணுகின்ற நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன. ஆனால், இயேசு ஒரு தெளிவைத் தருகின்றார்: அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுங்கள். அவருக்குப் பணி புரியுங்கள். மற்ற அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். எனவே, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இயேசுவின் சீடராய் வாழ விரும்புவோர்...

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா

உடனிருக்கும் தூதர்களாவோம்! யோவான் 1:47-51 இறையேசுவில் இனியவா்களே! அதிதூதர்கள் திருவிழாவிற்கு ஆனந்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் இன்று நாம் கொண்டாடுகிறோம். அதிதூதர்களின் சிறப்பு என்ன? கீழே பார்க்கலாம். தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல், மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், நலம் நல்கும் இரபேல் என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர். நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில். தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர். இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள். கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள். நிறைய நாள்கள் நாம் கடவுளையும், புனிதர்களையும் நினைத்துப் பார்க்கிறோம்....

பேசக் கற்றுக்கொள்பவரே பெரியவர்

லூக்கா 9:46-50 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம். பலவற்றை ஆர்வமாக தெரிந்துக்கொள்ளும் நாம் எப்படி பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள தவறிவிடுகிறோம். குழந்தைகள் இனிய குரல் எல்லோரையும் ஈர்க்கிறது. அந்த இனிய குரலில் பேசுபவர் தான் பெரியவர். என்வே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறு குழந்தையை உதாரணமாகத் தருகின்றார். அவர்களைப் போல இனிமையாக பேசி நம்மோடிப்பவர்களை இழுக்க, ஈர்க்க அழைக்கின்றார். நாம் சரியாக பேசவில்லை என்றால் அதனால் பல விதமான தீமைகள் விளைகின்றன. கோபமாக பேசினால் குணத்தை இழக்க நேரிடும். வேகமாக பேசினால் அர்த்த்ததை இழக்க நேரிடும். வெட்டியாக பேசினால் நம் வேலை இல்லாமல்...

பிறர் இயேசுவை தேடி வரும்படி செய்வோம்!

லூக்கா 9:7-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இயேசுவின் நற்செயல்களால் மயங்கிப்போன மக்கள் பல இடங்களில் நன்றி மறவாமல் இயேசுவைப் பற்றி துல்லியமாக அறிவித்தனர். எல்லா இடங்களிலும் இயேசுவின் புகழ்மணம் கமழ்ந்தது. எங்கும் இயேசு என்ற பெயர் ஒலித்தது. ஆகவே இயேசு என்ற பெயரின் அதிர்வலைகளில் பாதிக்கப்பட்ட ஏரோது, இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான். இயேசு என்ற பெயர் எவ்வளவு வல்லமை மிக்கது என்பதை நாம் பிறருக்கு அறிவிக்கவும், நம்முடைய செயல்பாடுகளால் பலர் இயேசுவை தேடி வரும்படி செய்யவும் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கிறது. இரண்டு விதத்தில் இயேசுவை பிறர் தேடி வரும்படி செய்யலாம். 1. பழக்கம் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த நாம் நம்முடைய...