உணவா? உள்ளமா?
புதன் மாற்கு 7:14-23 பாவம் தன்னகத்தே தீமையானது. இது வெளியிலிருந்து வருவதல்ல. மாறாக நம்முள்ளிருந்து வருகின்றது. ஆனால் இறைவன் படைத்த உணவும், பிறவும் தன்னிலே தூயது. அதனைத் தீயதாக கருதுவது நம் எண்ணத்திலும,; பயன்படுத்துகின்ற விதத்திலும் தான் இருக்கின்றது. இஸ்லாமியர்கள் பன்றியைத் தீட்டு எனக் கருதி உண்ணமாட்டார்கள். இந்துக்கள் மாட்டுக்கறியை உண்ணமாட்டார்கள். உண்ணுகின்ற இந்துக்களை கீழ்சாதியினர்; என ஒதுக்கி வைத்து தீண்டத்தகாதவர்கள் என கருதுகிறார்கள். ஆனால் கிருத்தவர்கள் நாம் மட்டும் இந்த வானிற்கு கீழ் உள்ள அனைத்தையும் உண்டு களிக்கிறோம். காரணம் இயேசுவின் இவ்வாக்கு உணவுப் பொருட்களில் தீட்டு என்பதே இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சம் தொடக்கக்காலத் திருஅவைத் தொட்டே நாம் அனைத்தையும் உண்ண ஆரம்பித்து விட்டோம். காண்க 1திமோ 4: 4,5. “கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே, நன்றி உணர்வுடன் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை, கடவுளின் வார்த்தையும் நமது மன்றாட்டும் அதைத் தூயதாகும்” தூய பேதுருவும் இதை ஒத்தக்...