பரிசேயர் பரம்பரை

செவ்வாய் மாற்கு 7: 1- 13
பரிசேயர் பரம்பரை

எது சுத்தம்? எது தீட்டு? எருசலேம் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் ஒன்றுகூடி, இயேசுவில் குற்றம் காண முயல்கின்றனர். உணவருந்தும் முன் சீடர்களில் சிலர் கை கழுவவில்லை. இச்சடங்கு ஒரு சமயச்சடங்கு, இதை மீறினால் குற்றம், தீட்டு என பரிசேயர் கருதினார்கள். (காண்க லேவியர் 11-15) ஆனால் இயேசு இதனை மிகவும் கண்டிக்கிறார். காரணம் இவர்கள் தன் சீடர்களிடம் மரபுகள் பற்றி கேள்வி கேட்டதற்காக அல்ல. ஆனால் மரபுகளை மட்டும் பிடித்துக் கொண்டு இறைவார்த்தையையும் கடவுளின் கட்டளைகளையும் புறக்கணித்து விட்டீர்களே என்று கடிந்துகொண்டு “கொர்பான்” பற்றி பேசுகிறார். நமக்கும் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்பதைவிட கைகளைத் தூய்மையாக வைத்திருப்பது எளிதல்லவா.

பரிசேயர்களை விட்டு விடுவோம், இன்று நாமும் நம் கிறித்தவ விசுவாசத்தில் பலமுறை நமக்கு தேவையானதை, எளிதானவை, எல்லார்க்கும் எது கவர்ச்சிக்கரமாக இருக்கின்றதோ அதை மட்டும்தான் கடைப்பிடிக்கிறோம். அவைகளை மட்டுமே உயர்த்திப் பிடிக்கிறோம்.

இதுதான் இன்று நம் குடும்பத்திலும், அன்பியத்திலும், பங்குப்பேரவைகளிலும், குமுகத்திலும் நடக்கின்றன. கைகள் சுத்தமாயிருப்பதை விட நம் உள்ளங்கள் சுத்தமாயிருப்பதையே நம் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். (காண்க மத் 5: 8, யாக் 4:8)
பரிசேய பரம்பரைத் தொடர்கின்றதோ?

– திருத்தொண்டர்.வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.