ஆண்டவர் எப்பொழுதும் சினம் கொள்பவரல்லர்
திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8 – 9, 11 – 12 கோபப்படக்கூடிய மனிதர்களை பல வகைகளாக நாம் பிரிக்கலாம். எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தொட்டதெற்கெல்லாம் கோபப்படக்கூடியவர்கள். இது ஒரு வகையான உளவியல் நோய். அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, இந்த உளவியல் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். இரண்டாவது வகையான மனிதர்கள், தங்களை மறந்து கோபப்படக்கூடியவர்கள். அவர்களை அறியாமலேயே, இயல்பாகவே கோபத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். தாங்கள் செய்வது சரியா, தவறா என்கிற சிந்திக்கிற திறன் இல்லாமல், கோபப்படக்கூடியவர்கள். இதுவும் ஓர் உளவியல் சிக்கல் தான். என்றாலும், விழிப்புணர்வோடு இருந்து முயற்சி எடுக்கிறபோது, இந்த சிக்கலிலிருந்து நாம் மீள முடியும். கடவுள் சினம் கொள்கிறார் என்பது இதுபோன்ற மனிதர்களோடு ஒப்பிட்டுக்கூறக்கூடியது அல்ல. அது நீதி அவமதிக்கப்படுகிறபோது எழுகிற கோபம். நேர்மையாளர்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறபோது உண்டாகிற கோபம். வலியவன் எளியவனை சுரண்டுகிறபோது...