உம்மையே நம்பும் எங்கள் மீது உம் பேரன்பு இருப்பதாக
திருப்பாடல் 33: 2 – 3, 10 – 11, 18 – 19 கடவுளைப் போற்றுவதும், புகழ்வதுமே இந்த திருப்பாடலின் நோக்கம். இந்த திருப்பாடல் “யாவே“ இறைவனை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள பாடல். யாவே இறைவனை நேர்மையாளர்கள் அனைவரும் புகழ வேண்டும் என்கிற விண்ணப்பத்தோடு இந்த பாடல் தொடங்குகிறது. கடவுள் மக்களால் மகிமைப்படுத்துவதற்குரியவர். ஏனென்றால் பரந்து விரிந்திருக்கிற இந்த உலகத்தை அவர் தன்னுடைய வல்லமையினால் படைத்தார். இந்த உலகத்திலிருக்கிற அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் கொடுத்தவர் கடவுளே. எனவே, நாம் எப்போதும் கடவுளைப் போற்றுதற்கு தயாராக இருக்க வேண்டும். தன் மக்களின் எதிரிகளுக்கு எதிரான சதித்திட்டங்களை ஆண்டவர் முறியடித்து எப்போதும் வெற்றியை நிலைநாட்டக்கூடியவராக இருக்கிறார். இறைவன் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும், அவர்களை வழிநடத்த அவர் மேற்கொள்ளக்கூடிய எல்லாவகை திட்டங்களையும் இந்த திருப்பாடல் வெளிப்படுத்துகிறது. இதே சிந்தனை இன்றைய நற்செய்தியிலும் வெளிப்படுகிறது. இயேசு தன்னுடைய பணியை தொடர, திருத்தூதர்களை அழைக்கிறார். இந்த...