Category: Daily Manna

திருச்சிலுவையின் மகிமை விழா

உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள்...

தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்

திருப்பாடல் 28: 2, 7 – 8a, 8b – 9 ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இன்றைய திருப்பாடல் ஒரு விளக்கத்தைத் தருகிறது. தூய்மையான உள்ளம் தான், வாழ்க்கைக்கான அடிப்படை என்கிற உயர்ந்த மதிப்பீட்டையும் அது கற்றுத்தருகிறது. தூய உள்ளத்தோடு வாழ வேண்டும் என்பது எளிதான காரியமல்ல. தூய உள்ளத்தோடு வாழ்வதற்கு நமக்குள்ளாக இருக்கிற தீய எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும். இருள் என்று எதுவும் கிடையாது. ஒளியில்லாத நிலை தான் இருள். கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, அனைத்தும் நல்லதெனக் கண்டார். எனவே, இந்த உலகத்தில் தீயது என்று எதையுமே அவர் படைக்கவில்லை. நன்மை இல்லாத நிலை வருகிறபோது, அது நமக்கு தீமையாகத் தோன்றுகிறது. இந்த தீய எண்ணம் நம்முடைய வாழ்வையே மாற்றிவிடுகிறது. இது நம்முடைய மகிழ்ச்சியையும், அமைதியையும் சிதைத்துவிடுகிறது. அடுத்தவரைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ளச்செய்கிறது. நன்மை செய்கிறவர்களைப் பழித்துரைக்கச் செய்கிறது....

துன்பத்திற்கே துன்பம் கொடு…

மாற்கு 8:27-35 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 24ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் துன்பம் வரும் நேரத்தில் கலங்காதிருக்க வேண்டும். துன்பமே வராத வாழ்வு என ஒன்றில்லை. துன்பத் தருணங்களில் அமைதியோடு, வந்த துன்பத்தை எதிர்கொண்டால், வாழ்வை எளிதாக வென்றுவிடலாம் எனவும் துன்பத்திற்கே துன்பம் கொடுத்து அதை விரட்டும் விறுவிறுப்பான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறது பொதுக்காலம் 24ம் ஞாயிறு. துன்பம் வரும் நேரத்தில் நாம் எப்படி நடக்க வேண்டும். எப்படி நம் செயல்பாடு அமைய வேண்டும் என்பதை நாம் மூன்று விதங்களில் பார்க்கலாம். 1. துரத்த கற்றுக்கொள்ளுங்கள் விவேகானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம். காசியில் ஒரு குறுகலான சந்து வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென அவரைப் பத்துப் பதினைந்து குரங்குகள்...

ஆண்டவர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவாராக

திருப்பாடல் 113: 1 – 2, 3 – 4, 5 – 7 இன்றைய திருப்பாடல் வரிகள் அற்புதமான சிந்தனையைத் தூண்டக்கூடிய வரிகள். கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை ஆழப்படுத்துகிற வார்த்தைகள். ஆண்டவரின் ஊழியர்களை கடவுளைப் புகழ்ந்து பாடுவதற்கு ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். ஆண்டவரின் ஊழியா்கள் யார்? கடவுள் பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களே கடவுளின் ஊழியா்கள். அந்த கடவுளின் ஊழியர்கள் சுயநலம் இல்லாதவர்கள். ஆண்டவருக்காகவே வாழ்கிறவர்கள். கடவுளின் ஊழியர்கள் இப்போது போற்றிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே போற்றுதலை கடவுளுக்கு கொடுப்பார்களா? தெரியாது. சூழ்நிலைகள் அவர்களுடைய விசுவாசத்தை ஆட்டம் காணச் செய்யலாம். ஆனாலும், அவர்கள் எல்லா காலத்திலும் கடவுளைப் போற்ற வேண்டும் என்பதுதான் ஆசிரியரின் வேண்டுகோள். இப்போது மட்டுமல்ல, எல்லா காலத்திலும், வேளையிலும் கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை ஆசிரியர் வைக்கிறார். நம்முடைய விசுவாசத்தை சூழ்நிலைகள் மாற்ற விடக்கூடாது. நாம் சூழ்நிலைக் கைதிகளாகவே இருக்கக்கூடாது என்பதுதான் இங்கே நமக்கு விடுக்கப்படுகிற...

கடமையே கண் !

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2,12-14) நற்செய்தி அறிவிக்க வேண்டிய தன் கடமையைப் பற்றிப் பேசும்போது, பவுலடியார் நம் இதயத்தைத் தொடுகின்றார். நற்;செய்தி அறிவிப்பைப் பற்றிப் பேசும்போது, அவர் மூன்று செய்திகளைத் தருகின்றார்: நற்செய்தி அறிவிப்பது அவர்மேல் சுமத்தப்பட்ட கடமை. அதை அவர் நிறைவேற்றியே தீர வேண்டும். அது தன்னார்வத் தொண்டு அல்ல, மாறாக சுமத்தப்பட்ட கடமை. நற்செய்தி அறிவிப்பு என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. அதில் பங்கேற்பவர் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓட வேண்டும். நற்செய்தி அறிவிப்பு என்பது குத்துச் சண்டை போன்றது. அதில் பங்கேற்போர் பலவிதமான பயிற்சிகளைச் செய்து தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். பவுலடியார் தன்னைப் பற்றிப் பேசியது திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் பொருந்தும். நற்செய்தி அறிவிக்கும் கடமை நம் அனைவருக்கும் உரியது. அதை நாம் சுமக்க வேண்டும். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடவேண்டும். அதற்கான பல்வேறு...