உலகில் உள்ள மரங்களை எல்லாம் பேனாவாக்கி, பரந்து விரிந்திருக்கும் வானத்தை தாளாக்கி, மேகத்தில் இருந்து பொழியும் மழைநீரை மையாக்கி, ஜொலிக்கும் நட்சத்திரத்தை எல்லாம் என் கற்பனையாக்கி, இப்பூமி முழுவதையும் எழுத்தாக்கி, கடல் அலையின் சீற்றத்தை என் சிந்தனையாக்கி, பூக்களை எல்லாம் வார்த்தையாக்கி, மெதுவாய் தவழும் தென்றலை வரிகளாக்கி, இதயம் என்னும் குளத்தில் என் ஆண்டவரை நினைவாக்கி, இயேசுவின் சிலுவை பாதையை உருக்கமாக்கி, ஆதிமுதல் அவர்செய்த செய்கைகளை ஆச்சரியமாக்கி, இஸ்ரவேல் ஜனங்களின் வழிநடத்தலை சாட்சியாக்கி, எனக்கு நீர் கொடுத்த ஆவியை தீபமாக்கி, என் தலை தண்ணீரும்,என் கண்களை நீரூற்றுக்களாக்கி, அவர் கடந்த பாதையை கண்களால் காணாத, நம்புகிற நிச்சயமாக்கி, அவர் செய்த நன்மைகளுக்கெல்லாம் என்னையே காணிக்கையாக்கி, அவர் செய்த தியாகத்தை எல்லாம் பெருமையாக்கி, இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தை உண்மையாக்கி, மண்ணான என் சரீரத்தை ஆலயமாக்கி, அவருக்காக என் வாழ்க்கையை தியாகமாக்கி, கிறிஸ்துவின் பாடுகளை எல்லாம் தியானமாக்கி, என் உள்ளத்தில் அவரை உயர்ந்தவராக்கி,...