உள்ளத்தில் உள்ள அன்பினால் குடும்பத்தை ஆதாயப்படுத்தலாம்
ஒரு ஊரில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த பெற்றோருக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களின் மூத்த மகளுக்கு வரன் தேடி வந்தார்கள். அப்பொழுது பக்கத்து ஊரில் இருந்த ஒரு குடும்பம் இவர்களை அறிந்துக்கொண்டு அந்த மூத்த மகளை பெண் கேட்டு வந்தார்கள். அந்த பெண்ணின் தகப்பனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவர் விசாரித்த வரைக்கும் அந்த குடும்பமும் மிகவும் நல்ல குடும்பம் தான் என்று கேள்விப்பட்டார். அதனால் அந்த குடும்பத்துக்கு தன் மகளை கொடுக்க சம்மதித்தார். ஆனால் பெண்ணின் அம்மாவுக்கோ அதில் கொஞ்சம் விருப்பம் இல்லை ஏனென்றால் அந்த மாப்பிள்ளையோடு பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் கள்.அதனால் பெரிய குடும்பமாக இருக்கிறது. நம் மகள் அங்கு வாழ்க்கை பட்டு போனால் நிறைய வேலை இருக்கும், எல்லோரையும் கவனிக்கும் கூடுதலான பொறுப்பு இருக்கும், மகளுக்கு ஓய்வே கிடைக்காது என்று பல சிந்தனைகளால் பயந்தார்கள். ஆனால் அந்த பெண்ணின் தகப்பனோ இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களும் ஒரு கிறிஸ்துவ குடும்பம், கடவுளுக்கு பயந்து நடப்பவர்கள்....