Tagged: Daily manna

இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 6 – 7அ, 7ஆ – 8, 9, 16 ”இதோ வருகின்றேன்” கடவுளின் அழைப்பைக் கேட்டு, இதோ வருகின்றேன் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுள் விரும்புவது எது? கடவுளின் உண்மையான அழைப்பு எது? கடவுளின் திருவுளம் எது? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டுப்பார்த்தால், “வழிபாடு“ என்று நாம் செய்து கொண்டிருக்கிற பலவற்றை நிறுத்த வேண்டிவரும். மாதாவுக்கு, புனிதர்களுக்கும் தங்க நகைகள் போட்டு அழகுபார்க்கிறோம். இதை மாதாவோ, புனிதர்களோ விரும்புவார்களா? அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, ஏழ்மையையும், ஒறுத்தலையும் நேசித்தவர்கள். ஆனால், இன்றைக்கு நம்முடைய வழிபாடு? இன்றைக்கு நாம் செய்கிற பல தவறுகளை விசுவாசத்தின் பெயரால் சமரசம் செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளை விசுவாசத்தின் பெயரால் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆலயம் கட்டுவதற்கும், ஆலயப்பொருட்களை வாங்குவதற்கும் ஆயிரமாயிரம் தாராளமாக நன்கொடை வழங்கும் நம் மக்கள், ஏழைகளின் துயர் துடைக்க என்று அவர்களை அணுகினால், உதவி செய்ய மனமில்லாத நிலையைப்...

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா

மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி லூக்கா 10:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார். “அன்புமிக்க மருத்துவர் லூக்கா” என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார். நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில் உள்ள...

இறைவனின் மீட்புத்திட்டம்

எசாயா 53: 10 – 11 மீட்பரைப் பற்றிய செய்தி, இன்றைய வாசகத்தில் நமக்கு அருளப்படுகிறது. இறைவன் இஸ்ரயேல் மக்களை மீட்பதற்காக, விரைவில் ஒரு மீட்பரை அனுப்புவதாக இறைவாக்கினர்கள் வழியாக மக்களுக்கு அறிவிக்கிறார். அந்த மீட்பர் எப்படிப்பட்டவராக இருப்பார்? எப்படி மக்களின் பாவங்களைப் போக்குவார் என்பது, வெளிப்படைச்செய்தியாக, இறைவாக்கினர் எசாயாவால் அறிவிக்கப்படுகிறது. பொதுவாக, கடவுள் இந்த உலகத்திலிருக்கிற பாவங்களை அழிக்க வேண்டுமென்றால், அவதாரம் எடுத்து, தன்னுடைய வல்லமையால் அழித்தொழிப்பார். இதுதான் பல்வேறு மதங்களில் காணப்படுகிற செய்தி. ஆனால், யாவே இறைவன், புதுமையான செய்தியை இறைவாக்கினர் வழியாக சொல்கிறார். அந்த செய்தி என்ன? இஸ்ரயேல் மக்களை மீட்பதற்காக அனுப்பப்படுகிறவர், தன்னுடைய துன்பத்தின் வழியாக, மக்களை விடுவிக்க இருக்கிறார் என்பதாகும். இது கேட்பதற்கு சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. ஒருவேளை நகைப்பாகக்கூட இருக்கலாம். ஆனால், இதுதான் கடவுள் தேர்ந்து கொண்ட வழியாக இருக்கிறது. மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக, தன்னையே பழியாகவும், வரவிருக்கிற மீட்பர் தரவிருக்கிறார். அவருடைய...

ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை கடவுள் நினைவுகூர்ந்தார்

திருப்பாடல் 105: 6, 7, 8, 9, 42 – 43 (8அ) கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு உண்மையாக இருக்கிறவர். அவர்களோடு உடன் பயணிக்கிறவர். அதற்கு அடித்தளமாக இருப்பது கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதி. கடவுள் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறார்? யாரோடு வாக்குறுதி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்? தொடக்கநூல் 12 வது அதிகாரத்தில் கடவுள் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வாசிக்கிறோம்: ”உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியா விளங்குவாய்”. ஆக, கடவுள் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து கொண்டு, இந்த உலகத்திற்கு அவரிலிருந்து தோன்றுகிற இனம் ஆசீர்வாதமாக இருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் கொடுத்த வாக்குறுதிக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறார். அவரது வாக்குறுதியின்படியே அவர் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துகிறார். அவர்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்கிறார். அவர்களுக்கு நாட்டை வழங்குகிறார். எதிரிகளை அடிபணியச் செய்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள். அவரை...

எவரது மனதில் வஞ்சம் இல்லையோ அவர் பேறுபெற்றவர்

திருப்பாடல் 32: 1 – 2, 5, 11, (7) குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கு எதை கடவுள் அளவுகோலாக வைத்திருக்கிறார்? ஒருவன் வாழ்நாள் முழுவதும் தவறு செய்திருக்கிறான். தன்னுடைய கடைசி தருணத்தில் அவன் தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறான். அப்படியென்றால், இவ்வளவு நாட்கள் அவன் செய்த பாவத்திற்கு என்ன தண்டனை? அவற்றையெல்லாம் கடவுள் பொருட்படுத்த மாட்டாரா? என்கிற எண்ணங்கள் நமக்குள்ளாக எழலாம். இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்வன் வாழ்நாள் முழுவதும் திருடுவதிலும், கொலைக் குற்றத்திலும் ஈடுபட்டவன். அவன் செய்த பாவங்களை ஒரு நொடியில் இயேசு மன்னித்தார் என்றால், அவன் செய்த தவறுக்கான தண்டனை தான் என்ன? இன்றைய திருப்பாடல் அதற்கான பதிலைத் தருகிறது. குற்றமுள்ள நெஞ்சத்தோடு ஒருவனால் கடவுளிடத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. ஒருவேளை அவன் மனிதர்களிடத்தில் நடித்துவிடலாம். ஆனால், கடவுளிடத்தில் ஒரேநாளில் ஒருவனால் நிச்சயம் திருந்திவிட முடியாது. திருப்பாடல் சொல்கிறது: எவரது மனத்தில் வஞ்சம் இல்லையே அவன் பேறுபெற்றவன். வஞ்சத்தோடு கடவுளிடத்தில்...