Tagged: Daily manna

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா? அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா? இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா? கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்பி, கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றிய செய்தியை, சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன். கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, ஏராளமான பணத்தை நாம் தேவையில்லாமல் வாரி இறைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு பல நல்ல செயல்பாடுகளும் நல்ல உள்ளங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு பல நல்ல மக்கள் சிறப்பான உதவிகளைச் செய்து, இந்த திருவிழாக்களின் நோக்கத்தை இன்னும் உரக்க, இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒருபுறம் கொண்டாட்டம் என்கிற பெயரில் தேவையில்லாமல் பணத்தை வீண், ஆடம்பர செலவு செய்துகொண்டிருந்தாலும், மறுபுறம் உதவிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. நாம் கொண்டாடக்கூடிய கிறிஸ்து பிறப்பு விழா...

இறைவனே எப்போதும் உயர்ந்தவர்

2சாமுவேல் 7: 1 – 5, 8 – 12, 16 கடவுளை விடவும் மேலானவர்களாக ஒரு சில தருணங்களில் நம்மையே நாம் நினைத்துக் கொள்கிறோம். கடவுளை விட அதிகம் சிந்திப்பவர்களாகவும், அறிவாளிகளாகவும் நினைத்துக் கொள்கிறோம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம். தாவீது ஆண்டவர்க்கு ஓர் இல்லம் கட்ட வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை இறைவாக்கினர் நாத்தானிடம் வெளிப்படுத்துகிறார். இது ஓர் அருமையான சிந்தனை என்று, இறைவாக்கினரும், ஆண்டவருடைய திருவுளம் எது? என்பதை அறிய நினைக்காமல், அவர் என்ன நினைக்கிறாரோ, அதை பதிலாக தருகிறார். தாவீதை உற்சாகப்படுத்துகிறார். ஆனால், அன்றிரவே ஆண்டவருடைய வார்த்தை நாத்தானுக்கு அருளப்படுகிறது. தாவீது அவருடைய நிலையை அறிந்து கொள்வதற்காக, அவருடைய தொடக்கநிலையிலிருந்து கடவுள் பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார். சாதாரண ஆடு மேய்க்கிற சிறுவனாக இருந்த அவரை, கடவுள் யாரும் நினையாத அளவுக்கு உயர்த்தினார். அந்த உயர்ந்த நிலைக்குச் சென்றவுடன், தன் பழைய நிலையை தாவீது...

தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது

திருப்பாடல் 25: 4 – 5ஆ, 8 – 9, 10 & 14 யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின் வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு சில துன்பங்கள் வருகிறபோது, துவண்டு போகிறார்கள். வாழ்வின் வேதனையான...

நன்றியுணர்வு

1சாமுவேல் 1: 24 – 28 நன்றியுணர்வு என்பது மனித வாழ்க்கையின் முக்கியமான உணர்வுகளுள் ஒன்று. அது மனித இயல்பை உயர்த்திக் காட்டக்கூடிய பண்பாக விளங்குகிறது. ஆனால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகம், தேவையென்றால் பயன்படுத்தவும், பயன்படுத்தியபின் தூக்கியெறியும் நுகர்வுக்கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நுகர்வுக்கலாச்சாரம் நம்முடை ஆன்மீக வாழ்விலும் எதிரொலிப்பது வேதனையிலும் வேதனை. இறைவனிடமிருந்து நாம் ஏராளமானவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால், நம்முடைய தேவை முடிந்தவுடன், நாம் வேண்டியது பெற்றுக்கொண்டவுடன், கடவுளை உதறித்தள்ளி விடுகிறோம். இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், எப்படிப்பட்ட வாழ்வை தங்களின் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, இன்றைய முதல் வாசகம் சிறந்த எடுத்துக்காட்டு. இறைவனின் முன்னிலையில், பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல், மற்றவர்களின் ஏளனப்பேச்சுக்கு மத்தியிலும் நம்பிக்கை கொண்டிருந்த அன்னாவின் நேர்ச்சைக் கடன் பற்றிய நிகழ்வு நமக்கு இந்த வாசகத்தில் தரப்படுகிறது. எல்கானாவுக்கு இரண்டு மனைவியர். அன்னா, பெனின்னா. குழந்தை இல்லாத காரணத்தினால்,...

சொந்தக்காரர்களின் சுகம் விசாரியுங்கள்…

லூக்கா 1:39-45 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பழைய காலம் நாம் சோ்ந்தே வாழ்ந்தோம். நம் உறவினர்களை தினமும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் தனித்தீவுகளாக வாழ்கிறோம். நம் சொந்தக்காரர்கள் பெரும்பாரும் நம் அருகில் இருப்பதில்லை. தொழில், படிப்பு காரணமாக வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இப்படி வாழும் நாம் நம் சொந்தங்களின் சுகம் பற்றி விசாரிக்க நேரம் ஒதுக்குவதில்லை. இன்றைய வாசகத்தில் அன்னை மரியாள் நமக்கு மாதிரியாக திகழ்கிறாள். சொந்தங்களை நாடி தேடி போகச் சொல்கிறார். நலம் விசாரிக்க சொல்கிறார். செய்வோம் இரண்டு வழிகளில்: 1. பரிசோடு பார்ப்போம் நாம் நம்முடைய சொந்தங்களோடு நல்ல உறவில் இருப்பது மிகவும் சிறந்தது. அவர்கள் நமக்கு...