Tagged: Daily manna

திக்கற்றவர்களுக்கும்,அனாதைக்கும்,நீரே துணை. தி.பாடல்கள் 10 : 14

கடவுளாகிய ஆண்டவர் தாயின் கருவிலே தெரிந்துக்கொண்டு நம் பிறப்பை அறிந்தவராக இருக்கிறார். அவரின் நீதி வானம் வரைக்கும் எட்டுகிறது. அவர் மாபெரும் செயல்களை செய்கிறார்.அவருக்கு நிகரானவர் யார்? நாம் இன்னல்களையும், தீங்குகளையும்,காணும்படி செய்தாலும் பாதாளத்திலிருந்து தூக்கி விடுவித்து மீண்டும் உயிர் அளிப்பவர் அவரே! திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையாகவும்,காப்பாளராகவும், இருப்பவர் அவரே! தனித்திருப்போருக்கு உறைவிடமானவரும் அவரே! ஒரு அழகிய கிராமம் ஒன்றில் மலர்விழி தனது தாய், தந்தையுடன் ஒரே செல்லப்பிள்ளையாக வசித்து வந்தாள். கஷ்டம்,கவலை என்றால் என்ன என்று தெரியாமல் அவள் பெற்றோர் அவளை கண்ணின் மணியைப்போல் காத்து அவள் கேட்கும் யாவற்றையும் வாங்கிக்கொடுத்து அவளை மிகவும் நேசித்து வளர்த்து வந்தனர். எப்போதும் போல அன்றும் அந்த கிராமத்தில் உள்ள அவள் படித்த பள்ளிக்கு காலை கிளம்பி போய்விட்டாள்.அவள் 6 ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் போன சிறிது நேரத்தில் அவள் தந்தைக்கு நெஞ்சு வலி வந்தது. உடனே அருகில் உள்ள ஒரு நகரத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கே மருவத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர்...

எல்லா மனிதர்களின் செயல்களும் ஆண்டவர் திருமுன் இருக்கின்றன

தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த நாள் முதல் நிலம் என்னும் தாயிடம் எல்லோரும் அடக்கமாகும் நாள்வரை நம்முடைய செயல்கள் யாவும் ஆண்டவரின் திருமுன் உள்ளது.அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.ஆண்டவரின் செயல்கள் யாவும் நல்லவையே.நம்முடைய ஒவ்வொரு தேவையும் குறித்த காலத்தில் அவர் நிறைவேற்றுகிறார்.’ இது அதைவிடக் கெட்டது ‘ என்று யாரும் சொல்ல முடியாது.அவரின் செயல்கள் அனைத்தும் அதனதன் காலத்தில் நல்லவை என விளங்கும்.ஆகையால் நாம் எந்த சூழ்நிலையிலும் நம்முடைய முழு உள்ளத்தோடு, எண்ணத்தோடு,பெலத்தோடு அவருக்கு வாயாரப் புகழ் பாடவேண்டும்.அவரின் பெயரை எப்பொழுதும் போற்றி துதிக்க வேண்டும். ஆண்டவரை நாம் எப்போதும் துதிக்க வேண்டும் என்று விரும்பியே அவர் நம்மை உருவாக்கி இந்த மண்ணுலகை ஆண்டுக்கொள்ளும்படி கொடுத்தார்.ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவர் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.அவர் உருவாக்கிய எல்லாவற்றிக்கும் மனிதன் என்ன பெயர் எப்படி வைக்கிறான் என்று பார்க்கவே அவனிடம் கொண்டுவந்தார்.உயிருள்ள ஒவ்வொன்றிக்கும் அவன் என்ன பெயர் வைத்தானோ அதுவே...

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக!!!

உலகெங்கும் வாழ்பவரே!ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்!பிற இனத்தார்களுக்கு அவரின் மாட்சியையும், வியத்தகு செயல்களையும் அறிவிப்பது நமது கடமை ஆகும். ஏனெனில் அவரே தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர். அஞ்சுதற்கு உரியவர் அவர் ஒருவரே.மற்ற தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே!நமது ஆண்டவரோ! விண்ணுலகையும்,மண்ணுலகையும் படைத்தவர். ஒவ்வொருநாளும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவருக்கு பாடல் பாடுங்கள்; அவரை புகழ்ந்தேத்துங்கள்;அவரது ஆற்றலைத் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! அப்பொழுது அவரைத் தேடுவோரின் ஒவ்வொரு இதயமும் மகிழ்ந்து பெருமகிழ்ச்சிக் கொள்ளும். ஏனென்றால் நம்முடைய ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கிறவர். அவர் நம்முடைய துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறவர். நாம் போற்றித்துதிக்கும் பொழுது அவரும் நம்மில் பிரியமாய் இருந்து நமது வேண்டுதல் யாவற்றையும் நிறைவேற்றித் தருகிறார். சில சமயம் கஷ்டமான சூழ்நிலையை கடக்க நேர்ந்தாலும் அவர் கரம் நம்மை வழிநடத்தும்.அந்த கஷ்டத்தின் மத்தியிலும் நம்மை சந்தோஷத்தால் சமாதானத்தால் நிறைத்துக் காத்துக்கொள்வார். துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்;உங்களைக் காத்திடுவேன் அப்போது நீங்கள் என்னை மேன்மைபடுத்துவீர்கள், என்று திருப்பாடல்கள் 50 : 15 ல் வாசிக்கிறோம்.மனிதர்களாகிய நம்மேல்...

ஆண்டவரின் திருவுளப்படியே அனைத்தும் படைக்கப்பட்டன.தி.வெ 4:11

எங்கள் ஆண்டவரே,எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படி அவை உண்டாயின, படைக்கப்பட்டன என்று திருவெளிப்பாடு 4 : 11 ல் படிக்கிறோம். ஆம் அவரது விருப்பப்படி தான் உலகத்தை படைத்து நம்மிடம் கொடுத்து அவற்றை ஆண்டுக்கொள்ளும் படி செய்தார். ஆனால் நாமோ அதை சாத்தானுக்கு கொடுத்துவிட்டு இப்போது பயந்து,பயந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். விண்ணையும், மண்ணையும் உருவாக்கியவர் அவரே, விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கினார் என்று திருப்பாடல்கள் 115 : 16 ல் படிக்கிறோம். இந்த பூமி நமக்குரியது. அவரின் திருவுளப்படி நடந்தால் நாமும் இந்த பூமியை சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்போது மானிடர், உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு; மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொல்வார்கள். மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் ஆண்டவரின் சித்தம் அறிந்து செயல்பட்டால் நம்மை ஆசீர்வதித்து காத்தருள்வார். அவரால் படைக்கப்பட்ட நாம் எல்லோரும் சந்தோஷமாக , சமாதானமாக...

காலைதோறும் ஆண்டவரது இரக்கம் புதுபிக்கப்படுகின்றன.

இன்றைய சிந்தனை இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவரின் இரக்கம் தினந்தோறும் புதுப்பிக்கப்பட்டு அவரின் தயவால் நம்மை ஆட்கொண்டு வழிநடத்துகிறார். அவரின் அன்பும்,இரக்கமும்,இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம்? என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.? எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.நீதிமொழிகள் 8 : 17. ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை!அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன!நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்! புலம்பல் 3 : 22,23.தினமும் அவரே நம்முடைய பங்காகவும்,நம்பிக்கையாகவும் வைத்து அவர் அருளும் மீட்புக்கு அமைதியுடன் காத்திருந்து நமது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம். இந்த ஜூலை மாதம் முழுதும் நம்மை கண்மணியைப்போல் காத்துக்கொண்ட தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி பலியை ஏறெடுப்போம். எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் நம்மை ஒரு பொல்லாப்பும் தொடாத வகையில் காத்துக்கொண்ட அவரின் எல்லையில்லா அன்புக்கு அடிபணிவோம். கடன் பிரச்சனை, நோய்களின் போராட்டம், வேலையில்லா கஷ்டம் என எத்தனையோ தேவைகளையும்,நமக்கு தந்து இம்மட்டும் காத்து நடத்திய கடவுளுக்கு நன்றி பலியை ஏறெடுப்போம். நம்முடைய...