லாத்தரன் பேராலய அர்ச்சிப்பு விழா
தொடக்க கால திருச்சபையில், ஆலயங்களின் நேர்ந்தளிப்பு நாளையும், விழாவாகவே கொண்டாடினர். ஆலயங்களின் நேர்ந்தளிக்கும் நாள் என்பது, பேராலயத்தின் பிறந்த நாள் என்றழைக்கும் வழக்கமும் இருந்தது. உரோமை திருவழிபாட்டு மரபில், அர்ப்பணிக்கப்பட்ட பேராலயத்திற்கான நான்கு விழாக்களை திருச்சபை முழுவதும் கொண்டாடுகிறோம். லாத்தரன் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம் மற்றும் புனித மரியாள் பேராலயம். இதில், லாத்தரன் ஆலயத்தின் அர்ப்பணிப்பு விழாவை இன்று கொண்டாடுகிறோம். முதல் நூற்றாண்டில், நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை வதைத்து, பலபேரை கொன்றொழித்தது வரலாறு. அப்படி அவன் கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, அவனுக்கு எதிராக சதிசெய்தவர் என்று, லாத்தரன் என்னும் உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த பிளவுத்துஸ் லாத்தரன் என்பவர் கொல்லப்பட்டார். கொன்ற பிறகு, அந்த குடும்பத்திற்குச் சொந்தமான மாளிகை, உடைமைகள் என்று, அவனுடைய சொத்துக்களையும் அபகரித்துக்கொண்டான். பின்னர் வந்த உரோமை அரசனான கான்ஸ்டன்டைன் அரசர், கி.பி.313 ம் ஆண்டு, கிறிஸ்தவத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக மாற்றினார். அப்போது,...