Tagged: Daily manna

நாம் கடவுளின் படைப்புக்கள்

கடவுளுக்கு நாம் அனைவரும் எந்த அளவுக்கு கடன்பட்டிருக்கிறோம், என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கிறது. கடவுள் நமக்கு இந்த அழகான உலகத்தைத் தந்திருக்கிறார். இந்த உலகத்தில் வாழ நல்ல வாழ்வைத் தந்திருக்கிறார். இந்த உலகத்தில், நமது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ, தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவர் இல்லையென்றால், நாம் யாருமே இல்லை. அவர் தான் நமக்கு எல்லாமே. அப்படியிருக்கிறபோது, நாம் தான், அவருக்கு கடன்பட்டிருக்கிறவர்களாக இருக்கிறோம். நாம் பணிவிடை செய்வது தான், நியாயமானதாக இருக்க முடியும். பணிவிடை என்றால் என்ன? நாம் எப்படி பணிவிடை கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியும்? அதற்கு இயேசு இந்த உவமை வழியாக விளக்கம் கொடுக்கிறார். பணியாளர் என்பவர், தலைவருக்குச் சொந்தமானவர். அவர் ஒன்றைச் செய்கிறபோது, அதை அவர் செய்தாலும், அதனால் விளையக்கூடிய புகழும், பெருமையும் தலைவருக்கேச் சேரும். ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்த நபருக்குத்தான், அந்த இயந்திரத்தினால் விளையும் அனைத்தும் பெருமையும் சேரும். அதுபோலதத்தான், நாம்...

வழிகாட்டலும், வழிநடத்தலும்

பாவச்சோதனை வருவதை தடுக்க முடியாது என்று இயேசு சொல்கிறார். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகைப்படைத்தபோது அனைத்தும் நன்றாக இருந்தது எனக்கண்டார். ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன” (தொடக்கநூல் 1: 31). ஆனால், அலகை பாம்பின் வடிவில் முதல் பெற்றோரை தனது நயவஞ்சகப்பேச்சினால் மயக்கி, இந்த உலகத்தில் பாவத்தை நுழைத்தது. அதுவரை நன்றாக இருந்த இந்த உலகம், முதல் மனிதனின் கீழ்ப்படியாமையால் பாவத்திற்கு இரையானது. இந்த உலகத்தில் சோதனை, தீமை இருப்பதை தவிர்க்க முடியாது. நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக, நாமே தீமையாக மாறிவிட முடியாது. நாமும் பாவத்திற்கு பலியாகி, மற்றவர்களையும் பலியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகப்பெரிய தண்டனைக்குள்ளாக்கக்கூடிய பாவம். மற்றவர்களை இடறிவிழச்செய்வதும், மற்றவர்கள் இடறி விழ காரணமாவதும் மிகப்பெரிய குற்றம். . இந்தப்போதனை மக்களை வழிநடத்துகிற தலைவர்களுக்கு மிக மிகப்பொருந்தும். வழிநடத்துகின்ற பணி என்பது எளிதான பணி அல்ல. ஒவ்வொரு முடிவு எடுக்கின்றபோதும்,...

வாழ்வின் முக்கிய தருணங்கள்

ஒரு சில தருணங்கள் வாழ்வில் முக்கியமானவை, திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த தருணங்களை இழந்துவிட்டால், அது மீண்டும் கிடைக்காது. நமது வாழ்வில் நாம் உயர்வடைய கொடுக்கப்பட்ட வாய்ப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்ததால், நமது வாழ்க்கை துன்பங்களோடு முடிந்துவிட்ட ஒன்றாகக்கூட மாறலாம். எனவே, வாழ்வைப் பற்றிய அக்கறை, உயர வேண்டும் என்கிற எண்ணம், எப்போதும் நமது சிந்தனைகளை கூர்மையாக வைத்திருக்கக்கூடிய உணர்வு நமக்கு இருப்பதற்கு இன்றைய வாசகம் அழைப்புவிடுக்கிறது. மனிதர்களில் இரண்டுவிதமானவர்கள் இருப்பதை இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது. கிடைக்கிற சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கிறவர்கள். பெரிதாக வாய்ப்பு கிடைத்தாலும் வீணடிக்கிறவர்கள். இரண்டுவிதமான மணமகளின் தோழியர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். மணமகன் வருகிறபோது, அவர்கள் தயாராக இருக்க வேண்டும், எண்ணெய் குறைவில்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும், விழிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல. நிச்சயம் தெரியும். நிச்சயம் மணமகன் வந்தே தீருவார். ஆனால், விரைவில்...

மூன்று அறிவுரைகள் !

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15) வழியாக மூன்று அறிவுரைகளை நமக்குத் தருகிறார் இயேசு. 1. நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். நம்மிடத்தில் உள்ள திறமைகள், ஆற்றல்கள், குறிப்பாக பணம்… இவற்றைக் கொண்டு நல்ல நண்பர்களை, குறிப்பாக மறுவுலக வாழ்வுக்கான நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவே, செல்வம் சேர்த்து வைப்பதற்கல்ல. மாறாக, இறைவனுக்காகப் பயன்படத்துவதற்காக. அதை மனதில் கொள்வோம். 2. நேர்மையற்ற செல்வத்தைக் கையாள்வதிலேயே நம்பத்தகாதவராய் இருந்தால், உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார்? எனவே, நிதியை, குறிப்பாக பொது நிதியைக் கையாள்வதில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நிதியை நேர்மையோடு கையாள்பவர் மற்ற அனைத்தையும் கையாள்வதில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார். 3.ஒரு வேலையாள் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. நாம் இரு கடவுள்களை வழிபட முடியாது. கடவுளையும், காசையும் நாம் வழிபட முடியாது. செல்வத்தின்மீது அதிகப் பற்று சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. எனவே, செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக்காமல்...

செல்வம் என்னும் பொறுப்பு

லூக்கா நற்செய்தியாளரின் பல நல்ல சிந்தனைகளுள், முக்கியமானது செல்வத்தைப் பற்றிய அவரது கருத்தாக இருக்கிறது. செல்வத்தைப்பற்றியும், செல்வந்தர்களைப் பற்றியும், அதிகமாகச் சொல்கிறவர் லூக்கா நற்செய்தியாளர் என்றால், அது மிகையாகாது. லூக்கா நற்செய்தியை அனைவரையும் அனைத்துச் செல்கின்ற நற்செய்தி. ஏழைகளுக்கு ஆதரவு சொல்லும் அவர், செல்வந்தர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களின் குற்றங்களை, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதே வேளையில், அவர்களின் வாழ்வுக்கான வழியையும் காட்டுகிறார். அதன் ஒரு பகுதிதான் நாம், இன்று வாசிக்கக்கேட்ட நற்செய்திப் பகுதி. செல்வத்தைப் பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம். நமக்கும் பயன்படுத்தலாம். மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையிலும் பயன்படுத்தலாம். எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான், நமது மீட்பு அடங்கியிருக்கிறது என்பதை, நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார். செல்வம் என்பது கடவுளால் கொடுக்கப்படுகிற வெறும் ஆசீர்வாதம் மட்டுமல்ல, மாறாக, அது மிகப்பெரிய பொறுப்பு. செல்வந்தர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது, என்பது நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்....