Tagged: Daily manna

ஏன் இப்படி இருக்கீங்க? இது வேண்டாம்!!!

லூக்கா 7:31-35 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்க்கையில் ஒருசிலரை நாம் புரிந்துக்கொள்வதே மிகக் கடினம். அவர்களோடு பயணிப்பதே மிகவும் சிரமம். அப்படிப்பட்டவர்கள் நம் அருகில் இருந்துவிட்டால் நாம் அவ்வளவுதான். யார் அவர்கள்? என்பதை நற்செய்தி வாசகம் வெளிப்படையாக எடுத்துயம்புகிறது. எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பவர்கள் தான் அவர்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்குமிடம் இருக்கின்ற இன்பத்தையும் இழந்துவிடும், ஆண்டவர் இயேசுவை கூட இன்பமாய் இருக்க விடாமல் இவர்களின் வார்ததைகள் தடுத்திருக்கின்றன. இவர்கள் கண்டிப்பாக மாறனும். இந்த நிலை வேண்டாம் என அவர்களை இன்றைய வழிபாடு வளமையான மாற்றத்திற்கு வரவேற்கிறது. இரண்டு விதமான அழைப்புக்கள். 1. உயர் எண்ணத்திற்கு வருக! எதற்கெடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் மனநிலை கொண்டவர்கள் உயர் எண்ணத்திற்கு வர...

எழுந்திடு! எல்லாம் படைத்திடு!

லூக்கா 7:11-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருச்சபையில் நிறைய வளங்கள் இருக்கின்றன. அந்த வளங்கள் அனைத்தும் முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று கேள்வியெழுப்பிப் பார்த்தால் இல்லை என்பதே நாம் பெறும் பதில். மிகவும் குறிப்பாக பயன்படுத்தப்படாத வளம் என்றால் அது இளைஞரின் வளம் என்றே சொல்லலாம். இளைஞர்கள் தங்கள் திறமைகளை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்தும்போது திருச்சபை உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லும் “இளைஞனே, எழுந்திடு” என்ற வார்த்தைதைகள் ஒவ்வொரு இளைஞருக்கும் சொல்வதாக அமைகிறது. இளைஞர்கள் எழுந்தால் தான் எல்லாவற்றிலும் மாற்றம் வரும். எங்கும் உண்மை கிடைக்கும். மாற்றமிக்க வளர்ச்சிகள் உதயமாகும். ஆகவே இளைஞர்களே எழும்பி...

இயேசுவின் இதயத்தில் இடம் பிடியுங்கள்…

லூக்கா 7:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் கடவுளின் செல்லப்பிள்ளைகளாக வாழ வேண்டும், அவருக்கு உகந்தததைச் செய்ய வேண்டும், மிகவும் குறிப்பாக அவரின் இதயத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு எப்போதும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த ஆசை, ஆவல் அனைத்தும் இந்த அருமையான நாளில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நிறைவுக்கு வருகிறது. என்ன செய்தால் அந்த ஆசைகள் நமக்கு நிறைவுபெறும்? 1. நூறு சதவிகித நம்பிக்கை இன்றைய நற்செய்தியில் வருகின்ற நூற்றுவர் தலைவர் என்றாலே நூறு சதவிகித நம்பிக்கை கொண்டவர் என நாம் சொல்லி விடலாம். இயேசுவின் மீது ஆழமான, அடர்த்தியான, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதுதான் இயேசுவின் இதயத்தில்...

துளைத்த வாள்கள் மிரண்டு போனது…

வியாகுல அன்னையின் திருவிழா யோவான் 19:25-27 இறையேசுவில் இனியவா்களே! வியாகுல மாதா திருவிழா திருப்பலியில் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் பங்கெடுக்க வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம், வியாகுலத் தாயிடமும் மன்றாடுகிறேன். பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த ஏழு வணிகர்களுக்கு அன்னை மரியாள் தனித்தனியே காட்சி தந்து செனாரியோ என்ற மலைக்கு வரும்படி அழைத்தார். அங்கே ஒன்று கூடிய எழுவரும் ஜெபிப்பதையும், வியாகுலங்களின் பக்தியைப் பரப்புவதையும், மக்களைப் பாவம், தீமையிலிருந்து விடுவிப்பதையும் தங்களது முதற்கடமையாகக் கொண்டிருந்தனர் . அவர்களது வாழ்வு ஊழியக்காரியாகிய மரியன்னைக்கு ஊழியம் புரிவதாக இருந்ததால் அன்னை தாமே வெளிப்படுத்திய “மரியின் ஊழியர் ” என்ற பெயரையே அவர்கள் முழுவிருப்பத்துடன் தமதாக்கிக் கொண்டனர். இவ்வாறு துவங்கிய வியாகுல அன்னையின் பக்தி கி.பி.1814 இல் திருத்தந்தை 7ஆம் பத்திநாதர், நாடு...

திருச்சிலுவை மகிமைப் பெருவிழா

உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள்...