திறமையானவர்களே தோற்காதீர்கள்…
மாற்கு 9:38-43,45,47-48 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 26ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் நம்மூர் ஆண்மகன்களோ, பார் இல்லாத ஊரில் குடியிருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு குடிப் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. காலையில் 10 மணிக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. காலையிலேயே இவர்கள் இப்படி என்றால், மாலையும், அதையும் தாண்டி இரவிலும் இவர்கள் எப்படி இருப்பார்கள். இது நமது உடலுக்கும் கேடு, நமது வீட்டிற்கும் கேடு என்பதை எப்போது உணர்வார்கள். ஒரு கதை உள்ளது, அதாவது ஒரு தேவதை தனது கையில் ஒரு குழந்தையையும், ஒரு மதுபானப் பாட்டிலையும் வைத்துக் கொண்டு ஒருவனிடம் சென்று, ஒன்று இந்த...