ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்லுங்க…
லூக்கா 11:1-4 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம் மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த ஜெபம் நம் நாடி நரம்பு அனைத்திலும் துடிப்பை உருவாக்க கூடியது. உயிரிழந்த செல்களுக்கு புத்துயிர் அளிக்க வல்லது. நம் ஆன்மாவிற்கான ஆனந்த ராகம் அது. அதை உணா்ந்து தினமும் ஜெபிக்கும் போது எப்பொதும் வெற்றி உண்டு என்ற அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அடிக்கடி இந்த ஜெபத்தை சொல்வது மிக நல்லது. அடிக்கடி சொல்ல வாய்ப்பு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்வது அந்த நாளை இனிய நாளாக்கும். 1. காலை சொல்லுங்க… காலை எழுந்ததும் ஆண்டவரை இந்த ஜெபத்தின் வழியாக...