Tagged: Daily manna

தன்னிலன்பு, பிறரன்பு, இறையன்பு

மத்தேயு 6:1-6, 16-18 தவக்காலத்தைத் துவங்கும் இந்தப் புனிதமான நாளிலே, நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கத் திரு அவை அழைக்கின்றது. இந்த அருளின் காலத்தைக் கடவுளின் கொடையாகவும், அவரின் பேரிரக்கத்தின் பரிசாகவும் ஏற்றுக் கொள்வோம். கிறித்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து, நம் பாவங்களுக்கு மன்னிப்பையும், பரிகாரத்தையும் செய்ய முயற்சிப்போம். அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள நாம் மூன்று பண்புகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். 1. ஈதல் : தருமம் சாவினின்று நம்மைக் காப்பாற்றும், எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை நிறைவுள்ளதாக்கும். (தோபி – 12:9) ஈதல் நாம் பிறரன்பில் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றது. ஈயென்று கேட்பவனுக்குக் கொடுப்பது மட்டுமன்று நாமே வலியச் சென்று வறியவரைத் தேடிக் கொடுப்பதினால் மட்டுமே இது முழுமை பெறும். 2. செபித்தல் : இன்று முதல் நாற்பது நாள் நாம் செபத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு இருப்பது இயேசு அதிக நேரம்...

பற்றுக பற்றற்றானை!

மாற்கு 10:28-31 நேற்றைய நற்செய்தியின் தொடக்கம் இன்றைய நற்செய்தி என்பதால் நேற்று முடித்த வரிகளில் இன்றைய சிந்தனையை தொடங்குவோம். நிலை வாழ்வு என்பது தான் மட்டும் வாழ்வதல்ல, பிறர் வாழ்வதற்கும் உதவுவது. நாம் மிகப்பெரிய இலக்கினை நம் வாழ்வில் அடைய வேண்டுமானால் கண்டிப்பாக சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது அல்லது விட்டுவிடவேண்டியிருக்கிறது. உதாரணமாக நான் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வரவேண்டுமென்று எண்ணினால், அவ்வெண்ணத்தை நிறைவேற்ற இரவு பகலாக கடுமையான பயிற்சியும், முயற்சியும் செய்ய வேண்டியிருக்கிறது. தேர்வில் நான் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால் என் தூக்கத்தை அதிக நேரம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சாதாரணமான நமது வாழ்வில் வெற்றிபெற இத்தனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், மறுவாழ்வில் நாம் அடையும் பேரின்பத்திற்காக எவ்வளவு விட்டுக் கொடுத்தலையும் தியாகங்களையும் செய்ய வேண்டியதிருக்கும். சாதாரண வாழ்விலேயே நாம் நினைத்ததை உடனடியாக அடைய முடிவதில்லை, அப்படியிருக்க எப்படி நமது மறுவாழ்வில்; நாம் பங்கெடுக்க முடியும். செபித்தால் மட்டும் போதுமா?...

வாழு! வாழ வை!

மாற்கு 10:17-27 செல்வர்களுக்கு எதிரான சங்கினை இன்றைய நற்செய்தியில் கேட்க முடிகின்றது. செல்வர்களின் மனநிலையை மிக அழகாக இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். நற்செய்தியாளர் மாற்கு. தன்னிடம் வந்த செல்வந்தரை நிலைவாழ்வினை நோக்கி படிப்படியாகக் கூட்டிச் செல்கின்றார் இயேசு. உண்மையாக நமக்குத்தான் இந்தப் படிகள் ஒரு பாடம். நிலை வாழ்வினைப் பெருவதற்கு முதல் படிநிலை கட்டுப்பாடற்ற, ஏனோதானோமாக, தன் விருப்பபடியெல்லாம் வாழாமல் கட்டளைகளைக் கடைபிடித்து நிலை வாழ்விற்குக் கடந்து செல்ல வேண்டும். இது ஒரு குமுகக் கடமை என்பதோடு நிறைவு பெறுகின்றது. இந்த முதல்படியில் தன்னால் பிறருக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை என்பதோடு முடிகின்றது.ஆனால் இது நிறைவன்று. நிறைவு என்பது தன்னால் பிறருக்கு என்ன நன்மை என்பதில்தான் அடங்கியிருக்கிறது. இதைத்தான் இயேசு அந்த செல்வரிடம் கேட்கிறார். “உன்னால் யாருக்கும் பிரச்சனை இல்லை, நன்று. ஆனால் உன்னால் யாருக்கு என்ன நன்மை?” என்கிறார். இந்தக் கேள்வியை நாம் இன்று பலதளத்தில் கேட்க முடியும். நாம்...

அவரா(லா)கிட…

சீ.ஞா. 27 : 4-7, 1கொரி.15: 54-58, லூக்.6: 39-45. ஒருவர் தன் மகளுக்குத் திருமணம் செய்து அவரைத் தன் மருமகனிடம் ஒப்படைத்து “மாப்பிள்ளை என் மகளுக்கு கொஞ்சம் வாய் நீளம் அவளைக் கவனிச்சுக்கோங்க” என்றார். அதற்கு மருமகன் மாமனாரிடம், கவலைப்படாதீர்கள், நான் அவளை நன்றாகக்கவனித்துக் கொள்வேன் எனக்குக் கொஞ்சம் கை நீளம்” என்றாராம். ஆம், அன்பானவர்களே இன்றைய வாசகங்கள் மூன்றும் நம் வார்த்தைகள் எப்படியிருக்க வேண்டும்? நம் வார்த்தைகள் நன்றாக இருக்க நம் உள்ளம் எப்படியிருக்க வேண்டும்? என்பதைப்பற்றி நமக்கு எடுத்துரைக்கிறது. நாவடக்கம் மிகவும் முக்கியம் என்பதால்தான் வள்ளுவப் பெருந்தகை இதற்கெனத் தனி அதிகாரத்தையே உருவாக்கியுள்ளார். எடுத்துகாட்டாக, இனியவை கூறல், புறங்கூறாமை, சொல்வன்மை. இதில் முத்தாய்ப்பாக பயனில்லாத சொற்களைப் பேசுபவரை மனிதரில் பதர் என்று முத்திரைக் குத்துகிறார் நம் பாட்டன். “பயன்இல் சொல்பாராட்டுவானை மகன் எனல் மக்கள் பதடி எனல்” (குறள் – 196) ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒரு சக்தி...

ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போருக்கு பேரன்பு நிலைத்திருக்கும்

திருப்பாடல் 103: 13 – 14, 15 – 16, 17 – 18 பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களோடு ஏழு உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். கடவுள் நமது முதல் பெற்றோரோடு செய்து கொண்டது முதல் உடன்படிக்கை. தொடக்கநூல் முதல் அதிகாரத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்து, இந்த உலகத்தை அவர்களது பராமரிப்பில் விட்டுவிடுகிறார். இரண்டாவதாக, நோவாவோடு கடவுள் உடன்படிக்கைச் செய்துகொள்கிறார். இனிமேல் இந்த மண்ணகத்தை நீரால் அழிக்க மாட்டேன் என்று உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். மூன்றாவதாக, ஆபிரகாமோடு கடவுள் உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். ஆபிரகாமுக்கு பல வாக்குறுதிகளைக் கடவுள் கொடுக்கிறார். ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கும் அவா் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார். நான்காவதாக, அவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை ”பாலஸ்தீன அல்லது நில உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது இணைச்சட்டம் 30: 3 – 4 ல், தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடவுள் உலகின் அனைத்து மூலைகளிலும்...