Tagged: Daily manna

ஆண்டவரே உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூறும்

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23 இந்த திருப்பாடல் “அல்லேலூயா” என்கிற வார்த்தையோடு தொடங்கி, அதே வார்த்தையோடு முடிவுறுகிறது. அதாவது, கடவுள் போற்றப்படுவாராக என்பது, இதனுடைய பொருளாக இருக்கிறது. புகழ்ச்சிக்குரிய இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே, இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்கள், கடவுளின் பொறுமை தெளிவாக விளக்கப்படுகிறது. மனிதர்களின் பாவங்களும், கடவுளின் அளவுகடந்த இரக்கமும் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருந்தனர். நன்மைகளைப் பெற்றதற்கு மாறாக, அவர்கள் கடவுளுக்கு எதிராக பாவச்செயல்களில் ஈடுபட்டனர். படைத்தவரை மறந்தனர். படைக்கப்பட்ட பொருளை வணங்க ஆரம்பித்தனர். அதாவது, உண்மையான தெய்வத்தை விட்டுவிட்டு, தாங்களாகவே படைத்த தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். இறைவன் எகிப்திலிருந்து அவர்களை விடுவித்த அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். ஆனாலும், கடவுள் அவர்கள் மட்டில் பொறுமையாக இருந்தார். அவர்களுக்கு இன்னும் அதிக உதவிகளைச் செய்தார்....

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்

திருப்பாடல் 145: 8 – 9, 13c – 14, 17 – 18 திருப்பாடல் 145 கடவுளைப் புகழக்கூடிய திருப்பாடல். திருப்பாடல்கள் வரிசையில் கடைசியாக வரக்கூடிய அதிகாரங்கள், கடவுளைப் போற்றுவதாக, புகழ்வதாக அமைந்துள்ளது. திருப்பாடல் 144: 9 ல், தாவீது கூறுகிறார்: ”இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன். பதின் நரம்பு வீணையால், உமக்குப் புகழ் பாடுவேன்”. இந்த வாக்குறுதியை, இந்த அதிகாரத்திற்குப் பிறகு வரக்கூடிய திருப்பாடல்கள் அவர் வெளிப்படுத்துகிறார். அதுதான், தொடர்ச்சியான கடவுள் புகழ்ச்சிப்பாடல்கள். எப்படி திருப்பாடல்களின் இறுதி அதிகாரங்கள், கடவுளைப் போற்றுவதாகவும், அவருடைய பண்புகளை எண்ணிப்பார்த்து, மகிமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறதோ, அதேபோல நமது வாழ்க்கையின் கடைசி நாட்களில் நாம், ஆண்டவரின் திருப்பெயரைப் போற்றுவதற்கு செலவிட வேண்டும். அது நமது விண்ணகப் பயணத்திற்கான, சிறப்பான தயாரிப்பாக இருக்கும். கடவுளைப் போற்றுவது நமது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைய வேண்டும். திருப்பாடல்களின் ஒரு சில அதிகாரங்களைப்போல (25, 34…)...

ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்

திருப்பாடல் 46: 1 – 2, 4 – 5, 7 – 8 இறைவன் தான் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருக்கிறவர். அவரின்றி அணுவும் அசையாது. எனவே, வாழ்க்கையில் பயம் இல்லை, என்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் தான், இன்றைய திருப்பாடல் நமக்குத்தரக்கூடிய வார்த்தைகள். கடவுள் எல்லா நேரத்திலும், தான் தேர்ந்து கொண்ட மக்களோடு இருக்கிறார். குறிப்பாக, அவர்களது துன்பநேரத்தில் அவர்களோடு தங்கியிருக்கிறார். இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு தான் பயமுறுத்தினாலும், கடவுளின் பாதுகாப்பு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எனவே, எவற்றிற்கும் பயப்படுவது கிடையாது. கடவுள் தான் எல்லாமுமாக இருக்கிறார். எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். எதிரிகளை வெற்றி பெறச் செய்கிறார். எல்லாவித நெருக்கடிகளிலிருந்தும் ஆண்டவர், கடவுளின் பிள்ளைகளை விடுவிக்கிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவர் உடன் இருப்பதால், எத்தீங்கும் நெருங்கப்போவதில்லை. வாழ்க்கையில் பலவீனத்தில் தவறுகள் செய்தாலும், கடவுள் மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். இன்றைய நற்செய்தியிலும் 38 ஆண்டுகளாக,...

தாழ்ச்சி + இடைவிடாத நம்பிக்கை = அருளடையாளம்

யோவான் 4: 43-54 இன்றைய நற்செய்தி நம்மை இறையன்பில் குறிப்பாக அவர் மீது நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையே நமக்கு வாழ்வளிக்கும் என்பதை நமக்க வலியுறுத்துகிறது. அரச அலுவலன் இவன் ஏரோது மன்னன் அரண்மனையில் பெரிய பதவியில் இருந்தவன். பல மைல் தூரம் கடந்து இயேசுவினைச் சந்தித்து உயிர்ப்பிச்சைக் கேட்பது அவனின் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை எடுத்துரைக்கிறது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் சிறு பதவிகளும், பொறுப்புகளும் கொடுக்கப்பட்டாலே நாம் ஆடுகிற ஆட்டம் அனைவரையும் ஆட்டிவிடுகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லஇ இறைவனுக்கு அடிபணிய மறந்து விடுகிறோம். பதவியை விடுங்கள். இன்று கைநிறைய சம்பாதித்தாலே நான் ஏன் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் மிக அதிகம். பொருளாதாரம் உயர உயர கடவுளுக்கும் மனிதனுக்குமான தூரம் அதிகரிக்கின்றது. மேலும் குணம் தேடி வந்தவரை ஏமாற்றக் கூடிய நிலையில் இயேசுவின் பதில் கூறுகின்றது. இயேசுவின் எரிச்சல் மிகுந்த தொனி அவரை, மனம்,...

மனமாற்றம்

உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம். தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான். தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான்....