இயேசுவின் தலைமைப்பண்பு
இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் தன்னைப்பற்றி மக்கள் யார்? என்று சொல்வதாகக் கேட்கிறார். சீடர்கள் அனைவருமே அவர்கள் மக்களிடமிருந்து கேட்ட பதில்களை, இயேசுவிடத்தில் சொல்கிறார். இங்கே சீடர்களின் திறந்த மனநிலையைப் பார்க்கிறோம். தெளிந்த மனநிலையைப்பார்க்கிறோம். திறந்த மனநிலை என்பது, வெளிப்படையாகப் பேசுவதைக் குறிக்கிறது. சீடர்கள், இப்படிச்சொன்னால் இயேசு என்ன நினைப்பார்? என்று நினைக்கவில்லை. மாறாக, தாங்கள் கேட்டதை அவர்கள் இயேசுவிடத்தில் சொல்கிறார்கள். தெளிந்த மனநிலை என்பது, துணிவோடு சொல்கிறார்கள். குற்ற உணர்வு இருக்கிறபோது, இறுகிய உள்ளத்தோடு இருக்கிறபோது, நமக்கு நாவில் வார்த்தைகள் வராது. ஆனால், உள்ளம் தெளிந்த சிந்தனையோடு இருக்கிறபோது, நம்மால் சிறப்பாக, நாம் நினைத்ததைப் பேச முடியும். இதில் இயேசுவின் பங்கும் இருக்கிறது. இயேசு இப்படியான சூழ்நிலையை தன்னுடைய சீடர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒரு அடக்குமுறையான சூழலாக இல்லாமல், அனைவருடைய கருத்துக்களுக்கும் இடங்கொடுக்கக்கூடிய, ஒரு ஆரோக்யமான சூழல் அங்கே நிலவுவதற்கு காரணம், இயேசு தான். இன்றைக்கு நாம் ஒரு குழுவின் தலைவராகவோ,...