Tagged: Daily manna

வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்தும்

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 மனிதர்களுக்காக கடவுள் தரும் செய்தி என்ன? கடவுள் மனிதர்களை எதற்காகப் படைத்தார்? கடவுள் மனிதர்களை தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னை மாட்சிமைப்படுத்தி கடவுள் மனிதர்களைப் படைத்தார். மனிதன் தன்னுடைய சுயநலத்தால் கடவுளோடு இருக்கிற தொடர்பை இழந்துவிட்டான். பாவத்திற்கு ஆளாகிவிடுகிறான். கடவுள் மனிதனை கைவிட்டுவிடவில்லை. அவனை மீட்பதற்காக தன்னுடைய ஒரே மகனையே கையளிக்கிறார். இயேசு இந்த உலகத்தில் மனிதராக பிறந்து, தன்னையே பலியாக்கி விண்ணகம் செல்கிறபோது, ”படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். படைப்பிற்கு நற்செய்தி அறிவிப்பதை அவர் இலக்காக மானிட சமுதாயத்திற்கு தருகிறார். ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கடமையாக இருக்கிறது. இன்றைய திருப்பாடலின் மையச்செய்தியும் இதுதான். படைப்பு அனைத்துமே கடவுளின் மாட்சிமையை தங்களது பிரசன்னத்தின் மூலமாக அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ”ஒவ்வொரு பகலும்...

கடவுளே என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு

திருப்பாடல் 119: 89 – 90, 91 & 130, 135 & 175 கடவுளின் வாக்கு என்றென்றும் இந்த உலகத்தில் உள்ளது என்று இந்த திருப்படல் நமக்கு சொல்கிறது. வாக்கு என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம்? வாக்கு என்பதை நாம் வார்த்தை என்கிற பொருளில் அர்த்தப்படுத்தலாம். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, ”ஒளி உண்டாகுக” என்று சொல்கிறார். உடனே அங்கு ஒளி தோன்றிற்று. ஆக, ஆண்டவரது வார்த்தை புதிய உலகத்தைத் தோற்றுவித்தது. இந்த உலகமே கடவுளின் வார்த்தையால் உருவானது. இயேசுவின் பிறப்பைப்பற்றி யோவான் சொல்கிறபோது, “வாக்கு மனுவுருவானார்” என்று சொல்கிறார். கடவுளின் வார்த்தை இயேசுவில் மனித உருவம் எடுக்கிறது. ஆக, கடவுளின் வாக்கு என்பது, இறைவனோடு ஒப்பிடப்படுகிற வார்த்தையாக இருக்கிறது. ”என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு” என்பது, இறைவன் நம்மில் ஒருவராக, நம்மோடு இயற்கையின் வடிவத்திலும், இறைவார்த்தையின் வடிவத்திலும், கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களின் வடிவத்திலும் இருக்கிறார்...

கடவுளே! உலகில் எழுந்தருளும். நீதியை நிலைநாட்டும்

திருப்பாடல் 82: 3 – 4, 6 – 7 உலகில் நடக்கும் அநீதிகளையும், தீங்கு செய்வோரையும் கண்டு மனம் வெதும்பிப்பாடும் ஓர் ஆன்மாவின் குரல் தான் இன்றைய திருப்பாடல். இந்த உலகம் இரண்டு வகையானது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்கிற எண்ணம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் ஒருபுறம். தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சாதாரண மக்கள் மீது வரிகளையும், பாரங்களையும் சுமத்தி, அவர்களைச் சிந்திக்க விடாது செய்துகொண்டிருக்கிறவர்கள். மற்றொரு பக்கத்தில், வேறு வழியில்லாமல் அதிகாரவர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு பலியாகிக்கொண்டிருக்கும் ஏழை, எளிய வர்க்கத்தினர். இந்த இரண்டு வகையினர்க்கும் இடையே மறைமுக போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில், அதிகாரவர்க்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏழை, எளியவர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஏழைகளும் மீள முடியாமல் இந்த அடிமைத்தனத்தை சகித்துக்கொண்டு, தாங்கள் மீண்டு எழுவதற்கு ஏதாவது வாய்ப்பு அமைந்துவிடாதா? என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், திருப்பாடல் ஆசிரியர், கடவுளை...

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்

திருப்பாடல் 34: 1 – 2, 15 – 16, 17 – 18 ஆண்டவரை எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் புகழ்வதாக திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். இது ஒரு முதிர்ச்சியான மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஆண்டவரை எக்காலமும் போற்றுவது என்பதன் பொருள் என்ன? மனித மனம் வித்தியாசமானது. நம்மிடத்தில் நன்றாக இருக்கிறவர்களிடம் நன்றாக இருப்பதும், நம்மிடம் ஒரு தூரத்தை விரும்புகிறவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் மனித மனமாக இருக்கிறது. இந்த பார்வை கடவுளுடன் நாம் கொண்டிருக்கிற உறவிலும் செயல்படுகிறது. கடவுளிடமிருந்து நாம் நிறைவாகப் பெற்றுக்கொண்டிருக்கிறபோது, நாம் கடவுளிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். கடவுளைப் போற்றுகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், கடவுளிடத்தில் நாம் கேட்டது கிடைக்கவில்லை என்றாலோ, நாம் நினைத்தது போல வாழ்க்கை அமையவில்லை என்றாலோ, கடவுளை விட்டு விலகிச்செல்கிறோம். கடவுளைப் போற்றுவதற்கோ, புகழ்வதற்கோ நமக்கு மனம் வருவதில்லை. இது சாதாரண மனித இயல்பு. இதனைக் கடந்து வாழக்கூடிய வாழ்வை, இந்த...

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கிறீர்

திருப்பாடல் 139: 1 – 3அ, 3ஆ – 6, 7 – 8, 9 – 10 கடவுள் ஒருவர் தான் மனிதர்களை முழுமையாக அறிந்திருக்கிறார். அவர் ஒருவர் தான், நம்முடைய உள்ளத்திற்குள்ளாக சென்று, நம்மை முற்றிலும் தெரிந்தவராக இருக்கிறார். நம்முடைய பலம், நம்முடைய பலவீனம் இரண்டையும் ஆண்டவர் அறிந்திருக்கிறார். இந்த ஞானத்தை திருப்பாடல் ஆசிரியர் இங்கு பாடலாக வெளிப்படுத்துகிறார். கடவுள் எப்போதும் நம்மை அறிந்து அன்பு செய்கிறவராக இருக்கிறார். அவரிடத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதுதான், இந்த திருப்பாடல் நமக்கு தரும் செய்தியாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரிடம் கேட்பது என்ன? திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். ஆண்டவர் அவரை முற்றிலும் அறிந்தவராயிருக்கிறதால், ஆண்டவரே அவரை வழிநடத்த வேண்டும் என்று, ஆசிரியர் விரும்புகிறார். ஆண்டவர் அவருடைய குறைகளை அறிந்திருக்கிறதனால், அவரை தீமையின் பக்கம் நெருங்கவிடாமல் பாதுகாத்துக் கொள்வார் என்பது, அவருடைய ஆழமான நம்பிக்கையாக...