Tagged: Daily manna

என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை

திருப்பாடல் 17: 1, 5 – 6, 8 & 15 கடவுளிடம் உதவிக்காக ஆசிரியர் மன்றாடுகிறார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ”என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்” என்கிற வார்த்தைகள், மற்றவர்கள் அவருக்கு எதிராக இருப்பதையும், யாருமே அவருக்கு ஆதரவாக இல்லை என்பதையும் வெளிப்படுத்துககிறது. ஆனாலும், அவர் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு தன் மீது நம்பிக்கை இருக்கிறது. தான் வாழும் வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்கிறது. கடவுள் முன்னிலையில் தான் மாசற்ற வாழ்க்கை வாழ்வதால், தன்னால் கடவுளிமிருந்து உதவியைப் பெற முடியும் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் இங்கே வெளிப்படுகிறது. கடவுள் நமக்கு உடனிருந்து உதவி செய்யக்கூடியவராக இருக்கிறார். எப்போது என்றால், நாம் அவருடைய வழிகளில் நடந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறபோது. கடவுளின் ஒழுங்குமுறைகளின்படி நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்கிறபோது, கடவுள் நமக்கு எப்போதும் உதவக்கூடியவராக இருக்கிறார். நம்மை துன்பங்களில் தாங்கிப்பிடிக்கிறவராக...

ஆண்டவரே என் ஆதரவு

திருப்பாடல் 3: 1 – 2, 3 – 4, 5 – 7ஆ இந்த உலகம் தீமைகள் நிறைந்த உலகம். இங்கே விழுமியங்களுக்கும், நல்ல மதிப்பீடுகளுக்கும் மதிப்பில்லை. நல்லவர்கள் மதிக்கப்படுவதில்லை. கெட்டவர்களுக்குத்தான் வாழ்வு இருக்கிறது. அவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்கிற தோற்றமும் இருக்கிறது. இத்தகைய உலகத்தில் நல்லவர்கள் வாழ முடியுமா? இந்த உலகத்தை எதிர்த்து அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடியுமா? எதிர்ப்புக்களுக்கு நடுவில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? முடியும் என்பதை இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது. ”என் எதிரிகள் பெருகிவிட்டனர்” என்கிற வார்த்தை, நல்ல மதிப்பீடுகளுக்காக திருப்பாடல் ஆசிரியர் துணிந்து நிற்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. திருப்பாடல் ஆசிரியர் விழுமியங்களுக்கு குரல் கொடுக்கிறவராக இருக்கிறார். அதனால் அவருக்கு பல எதிரிகள் வந்துவிட்டனர். அவர்களை எதிர்த்து நிற்பது எளிதல்ல. ஆனாலும், கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும், உற்சாகத்தையும் தருகிறது. கடவுள் இருக்கிறார் என்கிற...

ஆண்டவரே! உமது ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்

திருப்பாடல் 119: 53 & 61, 134 & 150, 155 & 158 திருச்சட்டத்தின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதரின் பாடல் தான் இன்றைய திருப்பாடல். திருச்சட்டம் என்பது இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய சட்டம். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வாழ்வை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒழுங்குமுறைகளின் தொகுப்பு தான் திருச்சட்டம். இந்த சட்டத்தை அனைத்து இஸ்ரயேல் மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அதனைப்பற்றிய சிந்தனையைத் தருவதுதான் திருப்பாடல் ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது. திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போருக்கு ஏற்படும் துன்பங்களையும் இந்த திருப்பாடல் கோடிட்டுக் காட்டுகிறது. திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், அதே வேளையில் அதனை துன்பங்களுக்கு மத்தியில் கடைப்பிடிப்போருக்கு வரும் இடர்களும் சாதாரணமானவை அல்ல. அது மிகவும் கடினமானது. அதனை நாம் எதிர்கொள்வது கடினம் என்றாலும், இறைவல்லமையில் நாம் நம்பிக்கை வைத்து முன்னேறுகிறபோது, அது நிச்சயம் சாத்தியமாகவே இருக்கும். அந்த நம்பிக்கையை...

விழிப்பாயிருப்போம்

”நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று இயேசு நமக்கு அழைப்புவிடுக்கின்றார். யாரிடமிருந்து ஏமாறக்கூடாது? எப்படி ஏமாற்றுகிறவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வது? ஏமாறுகிறவர்களை தீர்ப்பிட முடியாதா? அவர்களின் தவறான செயல்களுக்கு, ஏமாந்து விட்டோம் என்று சொல்லி, தப்பிக்க முடியுமா?இன்றைக்கு தவறு செய்கிறவர்கள், நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று சொல்லி, தப்பிக்க நினைக்கிறார்கள். அல்லது வெகு எளிதாக தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், தவறு செய்கிறவர்கள் எந்த வழியிலும் தாங்கள் செய்த தவறான செயல்களுக்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதோடு, எப்போதும் மற்றவர்கள் தங்களை ஏமாற்றாமல் விழிப்பாயிருந்து, நமது ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும். இன்றைய உலகில் ஏராளமான இளைஞர்கள், தவறான வழிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். மற்றவர்களின் தவறான போதனைக்கு பலியாட்களாக மாறிவிடுகிறார்கள். குறிப்பாக, தீவிரவாதத்தை ஊக்குவிக்கக்கூடியவர்களின் நயவஞ்சகப்பேச்சுக்கு மயங்கி தங்களது வாழ்வைத் தொலைத்துவிடுகிறார்கள். அதற்கான தண்டனை வருகிறபோது, அவா்கள் தாங்கள் செய்த தவறை நினைத்து வருத்தமடைகிறார்கள். தவறான பேச்சுகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஆளாகாமல், நமது ஆன்மாவை காத்துக்கொள்ளக்கூடிய கடமை, ஒவ்வொரு மனிதனுக்கும்...

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக

திருப்பாடல் 105: 2 – 3, 36 – 37, 42 – 43 இந்த பாடல் எகிப்தில் இறைவன் செய்த ஆச்சரியங்களை மீண்டும் நினைவுபடுத்துகிற பாடல். எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்கள் பட்ட துன்பங்கள் மக்களின் அழுகுரல் வழியாக கடவுளைச் சென்று அடைந்தது. மக்கள் கடவுளைத் தேடினார்கள். தங்களை அவருடைய சொந்த இனமாக தேர்ந்து கொண்ட கடவுள் எங்கே? என்று தேட ஆரம்பித்தார்கள். அவர்களின் தேடல் கடவுளை, அவருடைய வல்லமையை அவர்களுக்குக் காட்டியது. அவர்கள் கடவுளின் வல்லமையை உணர ஆரம்பித்தார்கள். கடவுளை நாம் தேடுகிறபோது, நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியடைகிறவிதத்தில் கடவுள் செயல்படுகிறார். மீட்பின் வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கிறபோது, யாரெல்லாம் துன்பங்களில் கடவுளின் துணையை நாடினார்களோ, அவர்கள் அனைவருமே கடவுளின் அளப்பரிய வல்லமையைப் பெற்று மகிழ்ச்சியடைந்தார்கள். பாவங்களைச் செய்தபோது அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்கள், கடவுளைத் தேடியபோது, அதற்கான பலனையும் மகிழ்ச்சியாக அவர்கள் அனுபவித்தார்கள். நம்முடைய வாழ்விலும்...