Tagged: Daily manna

தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது

திருப்பாடல் 25: 4 – 5ஆ, 8 – 9, 10 & 14 யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின் வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு சில துன்பங்கள் வருகிறபோது, துவண்டு போகிறார்கள். வாழ்வின் வேதனையான...

ஏற்றுக்கொள்ளுதல்

யோசேப்பு கனவில் தனக்கு சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மரியாவை ஏற்றுக்கொண்டார் என்று நற்செய்தி சொல்கிறது. “ஏற்றுக்கொள்ளுதல்” என்பது நமது வாழ்வின் முக்கியமான பண்பு என்றால் அது மிகையாகாது. யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? சூழ்நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்வி இது. உதாரணமாக, யோசேப்பின் வாழ்வில் நாம் நடந்ததைப் பார்ப்போம். யோசேப்புவிற்கு மரியா திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர்கள் கூடிவாழும் முன் மரியா கருவுற்றிருக்கிறார். இதனை நமது வாழ்வோடு நாம் தொடர்புபடுத்திப் பார்ப்போம். நமக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கிற ஒரு பெண், திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருக்கிறாள் என்கிற செய்தி கேள்விப்பட்டால், நாம் செய்வது என்னவாக இருக்கும்? உடனடியாக திருமணத்தை நிறுத்துவோம். பெண் வீட்டாரை ஏளனம் செய்வோம். மற்ற ஒன்றுமே நமது எண்ணத்திற்குள் வராது. ஆனால், யோசேப்பு அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அது அவரது பெருந்தன்மை அல்ல, மாறாக, நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய திறன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாம் ஒன்றை...

சொந்தக்காரர்களின் சுகம் விசாரியுங்கள்…

லூக்கா 1:39-45 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பழைய காலம் நாம் சோ்ந்தே வாழ்ந்தோம். நம் உறவினர்களை தினமும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் தனித்தீவுகளாக வாழ்கிறோம். நம் சொந்தக்காரர்கள் பெரும்பாரும் நம் அருகில் இருப்பதில்லை. தொழில், படிப்பு காரணமாக வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இப்படி வாழும் நாம் நம் சொந்தங்களின் சுகம் பற்றி விசாரிக்க நேரம் ஒதுக்குவதில்லை. இன்றைய வாசகத்தில் அன்னை மரியாள் நமக்கு மாதிரியாக திகழ்கிறாள். சொந்தங்களை நாடி தேடி போகச் சொல்கிறார். நலம் விசாரிக்க சொல்கிறார். செய்வோம் இரண்டு வழிகளில்: 1. பரிசோடு பார்ப்போம் நாம் நம்முடைய சொந்தங்களோடு நல்ல உறவில் இருப்பது மிகவும் சிறந்தது. அவர்கள் நமக்கு...

வானதூதரே! வாழ்த்த வருவாரே…

லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாள் வாழ்க்கை பரிசுத்தமானது. அவர் வாழ்ந்த குடும்பத்தில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றார். ஆகவே உலகில் உள்ள இருளின் வசம் தன் வாழ்வை ஒப்படைக்காமல் ஒளியின் மகளாக பிரகாசித்து வந்தார். சுடர்ஒளியாய் வாழ்ந்து வந்தார். அவர் தன் மிகச் சிறப்பான வாழ்வால் வானதூதரை மண்ணகம் இறங்க வைத்தார். வானதூதரே அவருடைய வாழ்வால் அவரை இம்மானுவேலின் தாயாக மாறும் பாக்கியத்திற்காக தோ்ந்தெடுத்தார். இவையனைத்தும் கடவுளின் திட்டமே!. இது கிடைத்தது மரியாள் செய்த பாக்கியமே! நாமும் வானதூதரை சந்திக்க இரு செயல்களை செய்தால் போதும். 1. அமைதி மிகவும் அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். அதிகமாக குதிக்க கூடாது. பெருமை...

இகழ்ச்சி இன்றிலிருந்து இருக்காது…

டிசம்பர் – 19 லூக்கா 1:5-25 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். செக்கரியா – எலிசபெத்து தம்பதியினர் பிள்ளை இல்லாமல் மிகவும் இகழ்ச்சிக்குள்ளாயிருந்தனர். அக்கம் பக்கத்தார் அவர்களை அதிகம் வார்த்தைகளால் குத்தினர். அவர்கள் மனம் பாரமாக இருந்தது. அந்த பாரத்தை, அந்த இகழ்ச்சியை ஆண்டவர் நீக்குவதை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன் வைக்கிறது. அவர்களின் இகழ்ச்சியை நீக்கிய ஆண்டவர் நம் இகழ்ச்சியையும் நீக்குவார் என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது இன்றைய வழிபாடு. அதற்காக நாம் மனதில் நிறுத்த வேண்டிவைகள் இரண்டு: 1. கடவுள் மறப்பதில்லை பல நாட்கள் கடந்திருக்கலாம். ஆனால் நாம் கேட்டது கண்டிப்பாக நடக்கும். நாட்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கிறதே கிடைக்குமா? என்று நினைக்க வேண்டியதில்லை. செக்கரியா –...