Tagged: Daily manna

புனித மாசில்லாக் குழந்தைகள் – மறைச்சாட்சியர் விழா

மாசற்ற குழந்தைகள் திருவிழா மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்? ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத...

இறைத்தந்தையின் இரக்கம்

1யோவான் 1: 1 – 4 யோவானின் நற்செய்தியில், முதல் அதிகாரம் ஒட்டுமொத்த புத்தகத்தின் சுருக்கமாக இருப்பது போல, இந்த கடிதத்தின் முதல் நான்கு இறைவார்த்தைகள், ஒட்டுமொத்த நூலின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது. கடவுள் தான் நிலைவாழ்வை அருள்கிறவர். அந்த நிலைவாழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக இந்த உலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நம்முடைய பாவங்களை மறைத்து விட்டு, கடவுள் முன் நிற்போமேயானால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அதே வேளையில், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய மன்னிப்பிற்காக நாம் காத்திருப்போமே என்றால், நாம் மீட்கப்படுவோம். அதுதான் இங்கு நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. கடவுள் யாரையும் நிர்கதியாக விட்டு விட வேண்டும் என நினைத்ததில்லை. இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் குழந்தையே. அனைவரையும் மீட்க வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எப்படி நிறைவேற்றினார்? நமக்காக சிலுவையில் அறையப்பட்டு,...

நீதிக்காக குரல் கொடுப்போம்

திருத்தூதர் பணி 6: 8 – 10, 7: 54 – 60 திருச்சபையின் முதல் மறைசாட்சி என்று அழைக்கப்படும் ஸ்தேவானின் இறப்பு இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு கொடுக்கப்படுகிறது. அவருடைய இறப்பு கொடூரமானது, கொடுமையானது. கல்லெறிந்து கொலை செய்யப்படுகிறார். அதே வேளையில், அவருடைய இறப்பு ஒருபுறத்தில் இயேசுவின் இறப்பை ஒட்டியதாக இருக்கிறது. இயேசு கொடுமையாக சிலுவையில் அறையப்பட்டார். அந்த தருணத்திலும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காக விண்ணகத்தந்தையிடத்தில் பரிந்து பேசுகிறார். அதே போல ஸ்தேவானும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காக, விண்ணகத்தை நோக்கி மன்றாடுகிறார். இந்த நிகழ்வு, ஒரு சவாலான பாடத்தையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆண்டவராகிய இயேசு இறந்து உயிர்த்தெழுந்து விட்டார். சாவை எதிர்த்து வெற்றி கொண்டுவிட்டார். ஆனாலும், பாவம் தொடர்கிறது. சாவுக்கும் வாழ்வுக்கும் இடையேயான போராட்டம் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. இந்த போராட்டத்தில் ஒவ்வொருவரும் கடவுளின் பக்கம் நின்று போராட வேண்டும் என்பது தான் நம் முன்னால்...

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள் !!!! கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக! 25.12.2017 – லூக்கா 2: 1 – 14 திருப்பாடல் 96: 1 – 2, 2 – 3, 11 – 12, 13 ”ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்” ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுவதற்கு திருப்பாடல் ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். கடவுளுக்கு ஏன் புதிய பாடலை பாட வேண்டும்? பாடல்கள் என்பது இறைவனின் மகிமையையும், வல்ல செயல்களையும், நம்முடைய நன்றியுணர்வையும் வெளிப்படுத்தக்கூடியவை. அவை ஏற்கெனவே பெற்ற இறையனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பெற்றவை. இப்போது, புதிய இறையனுபவத்தைப் பெற இருக்கிறோம். எனவே, இந்த புதிய இறையனுபவத்தின் அடிப்படையில் எழுத, ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இப்போது பெறுகிற புதிய இறையனுபவம் என்ன? அது தான், கடவுள் மீட்பரை, மெசியாவை நமக்கு அனுப்புகிற அனுபவம். கடவுளே தன் மக்களை மீட்பதற்காக மண்ணுலகிற்கு...

வாய் திறந்தது, வாழ்த்தியது

லூக்கா 1:67-79 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவரின் தூதர் சொன்னப்படியே திருமுழுக்கு யோவான் பிறந்ததும் பேச்சிழந்த செக்கரியா சத்தமாக பேசுகிறார். பேச முடியாமல் இருந்த நிலையில் அவர் பலவற்றை பேச முடியவில்லை. ஆகவே அனைத்தையும் சேர்த்து மொத்தமாக இப்போது பேசுகிறார், பாடுகிறார். வாழ்த்துகிறார். அவருடைய வாழ்த்திலிருந்து நாம் இரண்டு செய்திகளை நம் வாழ்க்கை பாடமாக பெற முடிகிறது. 1. நம்பிக்கைக்குரியவர் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர் என்பதை செக்கரியாவின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே அவநம்பிக்கை இல்லாமல் கடவுளின் வரத்திற்காக காத்திருந்து ஜெபிக்க வேண்டும் என்றும் செக்கரியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவநம்பிக்கை கொள்ளும்போது நாம் கடவுளை பரிசோதிக்கிறோம். அது மிகவும் தவறானது என்பது நமக்கு தெரிகிறது. அவர் என்றும்...