என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது
திருப்பாடல் 42: 1 – 2, 43: 3, 4 விசுவாச வாழ்விற்கும், உலக வாழ்விற்கும் இடையேயான போராட்டத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டுவதுதான் இன்றைய திருப்பாடல். இந்த உலக வாழ்க்கையின் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்தி, பயம் விசுவாச வாழ்விற்கான சவாலாக தென்படுகிறது. ஆனால், இவையனைத்தையும், விசுவாசம் என்கிற ஆன்மீக ஆற்றல் ஒன்றுமில்லாததாக மாற்றிவிடுகிறது. பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலையும், அதனை பொருட்படுத்தாமல் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது எப்போது நமக்கு ஈடுபாடு, ஆர்வம், தாகம் ஏற்படுகிறதோ, அப்போதுதான் விசுவாசம் நமக்குள்ளாக தோன்ற ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் வரக்கூடிய எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கு இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது நமக்கு ஈடுபாடே இந்த பிரச்சனைகளோடு தான், தோன்ற ஆரம்பிக்கிறது. பிரச்சனைகளின் தொடக்கத்தில், எதையும் நம்மால், தனி ஆளாக எதிர்கொள்ள முடியும் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய பலத்தில்...