Tagged: Daily manna

இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம்

திருத்தூதர் பணி 8: 1 – 8 அழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன? ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்தேவானின் இறப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள்? என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு முடிந்து விடுவதில்லை....

உண்மை – தூய ஆவியாரின் உறைவிடம்

திருத்தூதர் பணி 7: 51 – 8: 1 ஸ்தேவான் கடுமையான வார்த்தைகளால் மக்களையும், மூப்பர்களையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகிறார். அவருடைய கடுமையான வார்த்தைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் அனைவரும் மாசற்ற இயேசுவைக் கொலை செய்துவிட்டார்கள் என்பது தான். ஸ்தேவானின் பார்வையில், இயேசுவைக் கொலை செய்தது தற்செயலாக நடந்திருக்கவில்லை. இவர்கள் அனைவருமே குற்றப்பிண்ணனியோடு தான் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால், இயேசுவுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களைக் கொன்றார்கள். இறைவாக்கினர்க்கெல்லாம் இறைவாக்கினராக இருந்த இயேசுவையும் கொன்றார்கள். ஆக, கொலை செய்வது என்பது அவர்களுக்கு புதிதானது அல்ல. அது மட்டுமல்ல, அத்தோடு அவர்கள் நிற்கப்போவதில்லை. இவற்றை எடுத்துரைக்கின்ற தன்னையும் கொலை செய்ய இருக்கிறார்கள், என்று தன்னுடைய சாவை ஸ்தேவான் முன்னறிவிக்கின்றார். ஸ்தேவானின் போதனையைக் கேட்டவர்களின் பதில்மொழி என்ன? ”அவரைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தார்கள். இவ்வளவுக்கு வஞ்சக எண்ணமும், பகைமை உணர்வும் அவர்களது உள்ளத்தில் எழக்காரணம் என்ன? தூய ஆவி இல்லாத நிலை தான், அவர்களின் பழிவாங்கும்...

அற்ப அற்புதங்களா?

(யோவான் 6 : 22-29) உணவினை உண்ட மக்கள் மறுநாளும் இயேசுவுக்காகக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி, இயேசுவைத் தேடி படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு வருகின்றனர். ஆனால் இயேசு இதனை விரும்பவில்லை, கண்டிக்கின்றார். காரணம் மக்கள் இயேசுவைத் தேடியது அவருக்காக அன்று, தங்களது வயிறுகளை நிரப்பும் அப்பத்திற்காகவே. உண்மையான வாஞ்சை என்பது அவர்மேல் இருந்ததைக் காட்டிலும், அவர் செய்த புதுமைகள் மேலும் அற்புதங்கள் மேலும் தான் இருந்தன. இந்தத் தேடலை இயேசுவே மிக அற்பமாக நினைக்கின்றார். காரணம் அவர்கள் நிலையற்ற ஒன்றிற்காக நிலையான ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டனர். இன்றும் இது தொடர்கின்றதா என்றால் நம்மால் உறுதியாகக் கூற முடியும் ‘ஆம்’ என்று. காரணம் இன்றும் நம்மில் பலர் ஆண்டவரைத் தேடுவது அப்பம் என்ற அற்புதத்திற்காகவே. அவரைவிட அற்புதங்களும் புதுமைகளுமே இன்று நம்மில் பலருக்கு முக்கியமான தேவையாகத் தெரிகின்றது. இன்று, பலபேர் பிற சபைகளுக்கு, எந்தவொரு அடிப்படைத் தகுதியுமில்லாத போதகர்களிடம் செல்வது இப்படிப்பட்ட அற்ப அற்புதங்களுக்காகவே....

ஆண்டவரே! வாழ்வின் வழியை நான் அறியச் செய்தருளும்

திருப்பாடல் 16: 1 – 2, 5, 7 – 8, 9 – 10, 11 இந்த உலகத்தில் வாழ்கிற மக்கள் அனைவரும் தங்களது பெயர்கள் வாழ்வின் ஏட்டில் எழுதப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகத்தான் தங்கள் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்வை தாங்கள் வாழ, சிறப்பான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி வாழ்வது எளிதல்ல. கடவுளுக்குரிய வாழ்வை நாம் வாழ ஆரம்பிக்கிறபோது, பல்வேறுவிதமான குழப்பங்கள் நம்மை ஆட்கொள்ளும். நாம் வாழக்கூடிய வாழ்க்கை சரியானதுதானா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழத்தொடங்கும். ஏனென்றால், இந்த உலகம் பல தவறான எண்ணங்களை, மதிப்பீடுகளாக புகுத்திக்கொண்டிருக்கிறது. எது சரி? எது தவறு? என்று அறிய முடியாத அளவிற்கு நமக்குள்ளாக குழப்பங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக, திருப்பாடல் ஆசிரியர் கடவுளின் உதவியை நாடுகிறார். நாம் குழப்ப மனநிலையில் இருக்கிறபோது, கடவுள் நமக்கு வழிகாட்டுவதற்கு தயாராக இருக்கிறார். ஆகவே கடவுளின் உதவியை நாம்...

உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்

திருப்பாடல் 89: 1 – 2, 5 – 6, 15 – 16 கடவுள் நீதியுள்ளவர் என்று விவிலியம் முழுமைக்குமாக பார்க்கிறோம். கடவுளுடைய நீதி இந்த உலக நீதி போன்றது அல்ல. ஏனென்றால், கடவுள் உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கக்கூடியவர். ஆராய்ந்து அறிந்து செயல்படக்கூடியவர். மனிதரைப்போன்று வெளித்தோற்றத்தை வைத்து, ஒருவரை தீர்ப்பிடக்கூடியவர் அல்ல.கடவுளுடைய நீதிக்கும் மனிதர்களுடைய நீதிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மனிதர்கள் பதவிக்காக, பணசுகத்திற்காக, நீதி என்கிற பெயரில் அநீதியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே யார் பணபலத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நீதியை தங்களுக்கு ஏற்ப வளைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுளிடத்தில் அப்படி செய்ய முடியாது. இந்த உலகத்தின் பார்வையில் இஸ்ரயேல் மக்களுக்கு நீதி என்பது கிடைக்க முடியாத ஒன்று. அவர்கள் நீதிக்காக போராட வலிமை படைத்தவர்களாகவும் இல்லை. நீதியைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை. அவர்களுக்கு நீதி வழங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் சாதாரணமான மக்கள். எளிய மக்கள். அடித்தட்டு மக்கள். பாமர...