Tagged: Daily manna

இறைவனோடு கொண்டிருக்கிற உறவு

திருத்தூதர் பணி 13: 44 – 52 யூதர்களில் பெரும்பாலானவர்கள் பவுலையும், திருத்தூதர்களின் போதனையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் மனந்திரும்பி, இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டாலும், அதிகாரவர்க்கத்தினர் அவர்களை நம்பவில்லை. எந்தெந்த வழியில் அவர்களுக்கு இன்னல்களை தர முடியுமோ, அத்தனை வழிகளிலும் அவர்கள் முயற்சி எடுத்து, அவர்களை தடை செய்ய பார்த்தார்கள். அதிகாரவர்க்கத்தினரின் இந்த மிரட்டல்களைக் கண்டு, சீடர்கள் பயப்படவில்லை. ஒளிந்து ஓடவுமில்லை. அதிகாரவர்க்கத்தினரை துணிவோடு எதிர்த்து நின்றனர். ”கடவுளின் வார்த்தையை உதறித்தள்ளி, நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்” என்று பவுல், யூதர்கள் முன்னிலையில் துணிவோடு பேசுகிறார். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும், சீடர்கள் கலக்கமுறவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். ”சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்”. அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க எவ்வளவோ இன்னல்களை அனுபவித்தபோதிலும், மிகுந்த மகிழ்ச்சியோ வாழ்ந்தனர். இறைவன் அவர்களோ இருக்கிறார் என்கிற ஆழமான விசுவாசம் தான், அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியைத் தந்தது. கவலை வருகிறபோது...

வாக்கு மாறாத இறைவன்

திருத்தூதர் பணி 13: 26 – 33 கடவுள் வாக்கு மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர் என்பது தான், தூய பவுலடியார் நமக்கு சொல்ல வருகிற செய்தியாகும். கடவுள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்திருந்தார். அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க மீட்பரை அனுப்புவேன் என்று, இறைவாக்கினர்கள் வாயிலாக முன்னறிவித்திருந்தார். இஸ்ரயேல் மக்களும், இறைவன் தங்களுக்கு கொடுக்கவிருந்த மீட்பருக்காக காத்திருந்தனர். அந்த மீட்பர் தான் இயேசு என்று, பவுலடியார் சொல்கிறார். இயேசுவின் வருகை, இறைவனுடைய வாக்குறுதி முழுமையாக நிறைவேறியிருப்பதை உணர்த்துகிறது என்பதுதான், அவருடைய செய்தியாக இருக்கிறது. மனிதர்கள் கடவுளிடத்தில் பல உடன்படிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். ஆனால், வெகு எளிதாக கடவுளோடு செய்து கொண்ட உடன்படிக்கையை உடைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவரல்ல. கடவுள் வல்லமையுள்ளவராக இருந்தாலும், வாக்குறுதி மாறாதவராக இருக்கிறார். பொதுவாக, வலிமை படைத்தவர்கள் தான், உடன்படிக்கையை மீறுகிறவர்களாக இருப்பார்கள். தங்களின் அதிகாரத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவரல்ல....

இறைவனின் பணிக்காக நம்மையே கொடுப்போம்

திருத்தூதர் பணி 13: 13 – 25 உயிர்த்த கிறிஸ்துவின் அடையாளமாக பவுல் விளங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இயேசு யார்? இயேசுவுக்கும் யூதர்கள் வழிபடக்கூடிய “யாவே“ இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? இயேசு மீது எதற்காக நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்? என்று, மீட்பின் வரலாற்றை, தான் பெற்ற அறிவாற்றலைக் கொண்டு விளக்குகிறார். வரலாறு என்பது முக்கியமானது. நம்மைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, நம்முடைய வரலாற்றைப் படிக்க வேண்டும். அது ஓர் இனமாக இருக்கலாம் அல்லது தனி மனிதனாக இருக்கலாம். இயேசுவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, அதிலும் சிறப்பாக அவரை நம்பி ஏற்றுக் கொள்வதற்கு, அவருடைய வரலாற்றை அறிந்து கொள்வது முக்கியமானது. யூதர்கள் அனைவருமே தங்களது மறையை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். எனவே தான், பவுல் அவர்களுக்கு மீட்பின் வரலாற்றைப் பற்றி சொன்னபோது, அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிறிஸ்துவின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் மீது நம்பிக்கை...

கடவுளே! எம்மீது இரங்கி, ஆசி வழங்குவீராக!

திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 & 7 கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு, அவரது இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு எதற்கு இரக்கம் தேவைப்படுகிறது? இரக்கத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் என்ன தொடர்பு? கடவுளின் ஆசீரைப் பெற வேண்டுமென்றால், கடவுளின் இரக்கத்தைக் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள். ஆசீர்வாதம் என்பது புனிதத்தன்மை நிறைந்தது. கடவுளிடமிருந்து வருவது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, மனிதர்களாகிய நாம் தகுதியற்றவர்கள். கடவுளின் இரக்கம் நம்மோடு இருக்கிறபோது மட்டும் தான், அவரது அருளை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி,...

இறைவல்லமை

திருத்தூதர் பணி 11: 19 – 26 ஸ்தேவான் கொலை செய்யப்பட்ட பிறகு, நிச்சயம் இயேசுவைப் பற்றி போதிக்கிறவர்கள் தங்களின் உயிருக்குப் பயப்படுவார்கள் என்று அதிகாரவர்க்கத்தினர் நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எவ்வளவுக்கு அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை துன்புறுத்தினார்களோ, அதற்கு மேலாக கிறிஸ்துவைப் பற்றிய போதனை, மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு காரணமாக, இன்றைய முதல் வாசகம் நமக்கு சொல்வது, ”அவர்கள் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றிருந்தனர்”. இயேசுவைப் பற்றி போதித்தவர்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல், தங்கள் உயிரைப் பற்றிய கவலை கொள்ளாமல், மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்தனர் என்றால், அதற்கு காரணம், இறைவனின் வல்லமை தான். இயேசுவின் சீடர்கள் படிக்காத பாமரரர்கள். இயேசு தான் அவர்களை வழிநடத்தினார். இயேசுவைக் கொலை செய்தபோது, அதிகாரவர்க்கத்தினர் சீடர்களை எளிதாக அச்சுறுத்தி சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, இயேசுவின் இறப்பிற்கு பிறகு, சீடர்கள் அறைகளில் தங்கி ஒளிந்து கொண்டிருந்தனர். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு...