உறவே வாழ்வின் ஆணிவேர்
உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து. உறவில்லாமல் வாழ்வு இல்லை என்பதை இயேசு நற்செய்தியிலே சுட்டிக்காட்டுகிறார். உறவிலே விரிசல் ஏற்படுகின்றபோது, அந்த விரிசலை சரிசெய்ய எல்லாவித முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். விரிசலை அதிகப்படுத்துகின்ற செயல்களை நாம் செய்யக்கூடாது எனவும் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். யாராவது நமக்கு எதிராக தவறு செய்தால், முதலில் நமக்குள்ளாகவே அதைப்புரிந்துகொண்டு, நம் உள்ளத்தை காயப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. அதை சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். முதலில் நாமாக சென்று சீர்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், நம்பிக்கைக்குரியவர்களின் துணைகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். எது எப்படியென்றாலும், உறவை சரிசெய்வதில் தாமதிக்கக்சகூடாது என்கிற கருத்து ஆணித்தரமாக வலிறுத்தப்படுகிறது. கடவுளும் நாம் தவறுகள் எவ்வளவு. செய்தாலும், நம்மை மன்னித்து ஏற்றுக்கொண்டு நமக்கு புதுவாழ்வைத்தந்திருக்கிறார். அதற்காக, தன்னுடைய ஒரே மகனின் உயிரையே பலியாகத்தந்திருக்கிறார். கடவுளோடும், சக மனிதர்களோடும் நல்ல உறவோடு வாழக்கூடிய அருளிற்காக மன்றாடுவோம். கடவுள் நாம்...