Tagged: Daily manna

திருச்சிலுவையின் மகிமை விழா

உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள்...

மன்னிக்கும் மனதைப்பெற….

பாவங்களை நாம் மூன்று வகையாகப் பார்க்கலாம். நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்கள் முதல் வகை. கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். ஆனால், நாம் நன்றியுணர்வு இல்லாமல், அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் பலவேளைகளில், அவருக்கு எதிரான காரியங்களில் இறங்கியிருக்கிறோம். அவை கடவுளுக்கு எதிரான பாவங்கள். இரண்டாவது, நம்மோடு வாழக்கூடிய நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடிய பாவங்கள். நாம் மட்டும் தான் வாழ வேண்டும் என்கிற சுயநலத்தோடு நாம் செய்யக்கூடிய பாவங்களை இந்த வகையில் உள்ளடக்கலாம். மற்றவரைப்பற்றி கவலைப்படாமல், நமது வாழ்வு, நமது குடும்பம் என்ற குறுகியமனப்பான்மை நம்மை பாவத்திற்கு அழைத்துச் செல்கிறது. மூன்றாவது வகையான பாவம், மற்றவர்கள் நமக்கு எதிராகச் செய்வது. நாம் சுயநலத்தோடு இருப்பது போல, மற்றவர்களும் சுயநலத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்பொருட்டு, நமக்கு எதிராக பாவம் செய்கிறார்கள். இதிலே, நற்செய்தியில் நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்களையும், மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யக்கூடிய...

இறைவார்த்தை

பாலஸ்தீனப்பகுதியில், கோடைகாலத்தில் ஆறுகள் வறண்டு மணல்மேடுகளாக காட்சியளிக்கும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மழைக்காலம் வருகின்றபோது, தண்ணீர் வெள்ளம் போல, ஆறு பெருக்கெடுத்து ஓடும். புதிதாக வீடு கட்ட இடம் தேடுகிற ஒருவன், ஆறுகள் வறண்டு மணல்திட்டுகளாக இருப்பதைக்கண்டு, கட்டுவதற்கு அது எளிதான இடம் என்பதால், அதைத்தேர்ந்தெடுக்கிறான். மழை வருகிறபோது, வெள்ளம் வந்து அவனுடைய உழைப்பையெல்லாம் வீணாக்கப்போகிறது என்பது தெரியாமல், அந்த வீட்டைக்கட்டுகிறான். இறுதியில் வீடு ஆற்றோடு போய்விடுகிறது. கட்டுவதற்கு கடினமாக இருந்தாலும், அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, பாறை மீது பொறுமையாக வீடுகட்டுகிறவன், வெள்ள நேரத்தில் ஆபத்து இல்லாமல் மகிழச்சியோடு வாழ்கிறான். எதற்காக, ஒரு மனிதர் மண்மீது வீடுகட்டுகிறார்? 1. அது அவரின் சோம்பேறித்தனத்தைக் காட்டுகிறது. பாறைமீது வீடு கட்டுவதைக்காட்டிலும், மணல்மீது எளிதாக வீடுகட்டி விடலாம் என்கிற சோம்பேறித்தனமான எண்ணம் தான் அவரது அழிவுக்குக்காரணமாகி விடுகிறது. 2. எதிர்காலத்தில் அவர் சந்திக்கிற ஆபத்தைப்பற்றி சீராயாத நிலையைக்காட்டுகிறது. எந்தஒரு பணியைச்செய்தாலும் அது சரியான திட்டமிடலோடு இருக்க...

மற்றவர்களை மதித்து நடப்போம்

”உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு, உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம் ”உன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?” என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நிச்சயமாக அவர் புன்முறுவல் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், பழத்திலே ஊசி ஏற்றுவது போல, இயேசு புன்முறுவலோடு, ஒரு செய்தியை அங்கே சொல்கிறார். இயேசு சொல்ல வருகிற செய்தி, இந்த உலகத்தில் யாரும் எவரையும் குற்றப்படுத்திப் பேசுவதோ, தீர்ப்பிடுவதோ, குற்றம் கண்டுபிடிப்பதோ கூடாது. அதற்கு ஒருவரும் தகுதியானவர்கள் கிடையாது. அப்படியே குற்றப்படுத்த விரும்பினாலும், குற்றம் இல்லாதவர்கள் குறைகூறலாம் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் குற்றம் இல்லாதவர்கள் எவருமே கிடையாது. எனவே, யாரும் மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதுதான் இயேசு சொல்கிற செய்தி. ஆனால், நாம் ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை நமது வார்த்தைகளால், செயல்பாடுகளால் காயப்படுத்துகிறோம். உண்மையிலே நாம் நேர்மையாளர்கள் என்றால், நிச்சயம் மற்றவர்களை நாம் குற்றப்படுத்த மாட்டோம். அவர்களை ஏற்றுக்கொண்டு தான் வாழ்வோம். நாம்...

கட்டாயக் கல்வி: திரும்ப கிடைக்காது

லூக்கா 6:27-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் அனைத்தையும் செய்கிறோம். நாம் செய்கிற உதவி, நாம் காட்டுகிற அன்பு என அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் செய்கிறோம். திரும்ப கிடைக்காது என்று தெரிந்தால் நாம் திரும்ப திரும்ப பல முறை யோசிப்போம். அப்படி யோசிக்கும் நமக்கு மிகச் சிறந்த கட்டாயக் கல்வியாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த கட்டாயக் கல்வி என்னவென்றால் நாம் செய்வது திரும்ப கிடைக்காது என்பதை புரிந்துக்கொள்வது தான். 1. செய்ததை மறந்து விடு பிறருக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தற்காக கடவுளுக்கு நன்றி சொல்வது பெருந்தன்மை. செய்த உதவிக்கு...