உயிர்த்த இயேசுவின் சாட்சியமாய் மாறுவோம்
இயேசுவின் உயிர்ப்பு நிகழ்விற்கு பல சான்றுகள் இருந்தாலும், இயேசுவோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள் தான் மிகப்பெரிய சாட்சிகள். இயேசு அவர்களோடு இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கைக்கும், உயிர்த்த இயேசுவைக்கண்டபிறகு அவர்கள் வாழ்ந்த வாழ்விற்கும் இடையேயான வேறுபாடு மிகப்பெரியது. இயேசுவோடு வாழ்ந்தபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக்கொண்டனர். கடலில் பயணம் செய்தபோது, சீறிஎழுகிற அலைகளைப்பார்த்து, கூச்சல்போட்டு மரணபயத்தில் கத்தினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு இயேசுவால் வல்லமை கொடுக்கப்பட்டிருந்தும், விசுவாசமின்மையினால் அந்த ஆற்றலைப்பயன்படுத்த திறனற்றிருந்தனர். இயேசுவுக்கு ஆபத்து என்று வந்தபோது, அவரைவிட்டுவிட்டு ஓடினர். இயேசு இறந்தபிறகு அறைகளில் தங்கள் உயிரைப்பாதுகாத்துக்கொள்ள பதுங்கியிருந்தனர். இந்த அளவுக்கு பயந்த, கோழைத்தனமான வாழ்வு வாழ்ந்த சீடர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வந்தது என்றால், அதற்கு காரணம் இயேசுவின் உயிர்ப்புதான் என்பதை ஆணித்தரமாக நம்மால் கூறமுடியும். இன்றைய நற்செய்தியில் சீடர்களின் வாழ்வு மாற்றம் பெறக்காரணமான உயிர்த்த இயேசுவின் காட்சியை நாம் பார்க்கிறோம். இந்த உயிர்ப்பு அனுபவம் தான் சீடர்களின் வாழ்வில்...