நம்பிக்கை என்னும் நற்பண்பு
பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருப்பதை முழுமையாக நம்பினர். காற்று முழுவதும், ஊசி நுழையாத அளவுக்கு தீய ஆவிகள் இருந்ததாக அவர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த தீய ஆவிகள் சுத்தமில்லாத பகுதிகளில் குறி;ப்பாக கல்லறைகள், பாலைவனம் போன்ற இடங்களில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு இருந்தது. இந்த தீய ஆவிகள் பயணிகளுக்கும், புதிதாக திருமணம் செய்த தம்பதியர்க்கும், குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. தீய ஆவிகளைப்பற்றிய அச்சம் இருந்த அந்த காலச்சூழ்நிலையில் இயேசு துணிவோடு தீய ஆவிகளிடம் பேசுவது அவர் கடவுள் மீது வைத்திருந்த முழுமையான நம்பிக்கையைப்பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய காலத்தில், பேய்களையும், தீய ஆவிகளையும் நம்புகிற அளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாதது மிகப்பெரிய வேதனையைத்தருகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் தீய ஆவிகள் என்று நம்புகிற நமக்கு கடவுள் நம்பிக்கை எங்கே போயிற்று? இயேசு அதனைக் கற்றுத்தருகிறார். கடவுள் நம்பிக்கை இருக்கிறவனுக்குத்தான் துணிவு இருக்கும். கடவுள் மீது...