Tagged: தேவ செய்தி

மனிதம் மலர நம்மால் இயன்றதைச்செய்வோம்

யூத இனம் ஆண் ஆதிக்க சமுதாயச்சிந்தனை கொண்டது. பெண்களும், குழந்தைகளும் வெறும் பொருட்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கென்று எந்தவித உரிமையும் கிடையாது. அப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்த இயேசு நமக்கு புதிய படிப்பினையைத்தருகிறார். தான் ஆணாதி்க்கச்சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அந்த ஆணாதிக்கச்சிந்தனைகள் தன்னை நெருங்குவதற்கு, இயேசு ஒருபோதும் அனுமதித்தது இல்லை. மனிதர்கள் ஒவ்வொருவரும் மதிக்கப்படக்கூடியவர்கள் என்பதுதான் அது. நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடத்திலே கொண்டுவந்தவர்கள் குழந்தைகளின் தாய்மார்களாகத்தான் இருக்க வேண்டும். இயேசு அவர்களை அன்போடு வரவேற்கிறார். அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார். அவர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகள். நம் அனைவருக்கும் அவர்தான் தந்தை. அப்படியிருக்க இந்த சமுதாயப்பாகுபாடுகளில் எப்படி உண்மை இருக்க முடியும்? அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சீடர்கள் ஆணாதிக்கச்சிந்தனையை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இயேசு அந்த சிந்தனையை முற்றிலுமாக எதிக்கிறவராக இருக்கிறார். மற்றவர்களை அடிமைப்படுத்துகிற எந்தவொரு வேறுபாடும், நொறுக்கப்பட வேண்டும். நாமும், இயேசுவைப்பின்பற்றி வேறுபாடுகளைக்களைவோம். மனிதத்தை உயர்த்திப்பிடிப்போம்....

மேன்மை

குருத்துவத்தின் மேன்மை குருத்துவத்தின் மாண்பு இந்த நற்செய்தி (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12) வெளிப்படுகிறது. குருத்துவம் என்பது தேர்ந்து கொள்வது அல்ல. அது கொடுக்கப்படக்கூடிய கொடை. கடவுளின் அருள் இல்லாமல் யாரும் குருத்துவத்தைப் பெற்று, வாழ்ந்துவிட முடியாது. அது ஒரு பெறுதற்கரிய பேறு. இந்த மகிமையை இயேசு நமக்கு தருகிறார். திருமணத்தின் மகிமையை, ஆண், பெண் திருமண உறவு, எந்த அளவுக்கு புனிதமானது என்பதை வலியுறுத்தும் இயேசு, அதோடு கூட, குருத்துவத்தின் புனிதத்தன்மையையும் சொல்வது அற்புதமானது. குருத்துவம் என்பது கடவுளுக்கான முழுமையான அர்ப்பணம். கடவுள் பணிக்காக, கடவுளின் மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, அதற்காக தன் முழு ஆற்றலையும் கொடுப்பது. அந்த குருத்துவப் பணியில் கடவுளின் அளவுகடந்த, அன்பும், அருளும் நிறைவாகக் கிடைக்கிறது. குருத்துவம் என்பது எளிதான பணி அல்ல. அதனை கடவுள் அருளின்றி யாரும் வாழ்ந்துவிடவும் முடியாது. அதன் மகிமை போற்றப்பட வேண்டும். அந்த பணியை ஏற்றிருக்கிறவர்களுக்கு,...

மன்னிப்பின் அர்த்தம்

மன்னிப்பு என்பது பொதுவான சூழ்நிலைகளில் புரிந்து கொள்வதற்கு கடினமான வார்த்தை. இன்றைக்கு செய்யக்கூடாது எல்லாச்செயல்களையும் செய்துவிட்டு, ”இயேசு மன்னிக்கச் சொல்லியிருக்கிறார், நீங்கள் மன்னியுங்கள்” என்று சொல்கிற, தவறான போக்கு தான், மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. இது இயேசு சொல்கிற மன்னிப்பை, களங்கப்படுத்தக்கூடிய வார்த்தைகளாக இருக்கிறது. மன்னிப்பு என்கிற வார்த்தையைப் பேசுவதற்கு முன்னால், “மனமாற்றம்“ என்கிற வார்த்தை, அதிகமாகப் போதிக்கப்பட வேண்டும். மன்னிப்பு என்பது ஏதோ மானியம் அல்ல. அது ஒரு கொடை. பெறுதற்கரிய கொடை. மன்னிப்பு என்பது மலிவுச்சரக்காகப் பெறக்கூடிய அல்ல. அதனை அடைவதற்கு, முழுமையான மனமாற்றம் தேவை. மன்னிப்பை வெகுசொற்பமாக வாங்கிவிடலாம், என்கிற மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அந்த நினைப்பு தான், மக்கள் மன்னிப்பு பற்றிய தவறான சிந்தனைகள் உருவாவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. உண்மையான மனமாற்றம் தான், மன்னிப்பைப் பெறுவதற்கான சரியான தகுதியை நமக்குக் கொடுக்கும். அந்த மனமாற்றத்தைத்தான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். நாம் கடவுளிடமிருந்து...

உறவின் முக்கியத்துவம்

உறவு என்பது எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உறவில் விரிசல் ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்கு நாம் எந்தளவுக்கு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20) இயேசு நமக்குத்தருகிறார். இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் அனைவருமே, தனித்தன்மை வாய்ந்தவர்கள். சிந்திக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவர்கள். பலவிதப் பிண்ணனிகளைக் கொண்டவர்கள். இந்த சூழல், பலவிதமான கருத்துக்கள் வெளிவருவதற்கு காரணமாக இருக்கிறது. அப்படி வருகிறபோது, ஒருவருடைய கருத்தும், மற்றவருடைய கருத்தும் முரண்பாட்டைச் சந்திக்கிறது. அங்கே உறவுச்சிக்கல் உண்டாகிறது. அந்த உறவுச்சிக்கல் பொதுவானது, இயற்கையானது என்பதை நாம் அடிப்படையில் உணர வேண்டும். நம்மில் வேற்றுமை இருப்பது நாம் அறிந்த ஒன்று. அனைவருமே ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. அப்படி நமக்குள்ளாக கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறபோது, அது உறவு விரிசலுக்கு அடிகோலிடுகிறபோது, அதை நாம் எளிதாக விட்டுவிடக்கூடாது. அந்த உறவு விரிசலை சரிசெய்ய நாம்...

மரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் !

மரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் ! இன்று அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவையும், நம் நாட்டின் விடுதலைப் பெருவிழாவையும் ஒருசேரக் கொண்டாடுகிறோம். இந்நாளில் நமது புறவிடுதலை, அகவிடுதலை இரண்டையும் பற்றிச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்று 63 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டாலும்கூட, நமது நாடு போதுமான வளர்ச்சி பெறாததற்குக் காரணம் நமது அகவிடுதலை இன்மையே. அன்னை மரியா நமக்கு அகவிடுதலையின் மாதிரி ஆக இருக்கிறார். அகவிடுதலையின் கூறுகள் யாவை? அச்சத்தினின்று விடுதலை குற்ற உணர்வு, பழி உணர்வு போன்ற தீவிர உணர்வுகளிலிருந்து விடுதலை தீவிர ஆசைகளிலிருந்து விடுதலை பொருள்கள், மனிதர்கள், இடங்களின்மீதுள்ள பற்றுகளிலிருந்து விடுதலை கவலையினின்று விடுதலை யார் அக விடுதலை பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் புற விடுதலையற்ற சூழலிலும்கூடக் கவலையின்றி, அகமகிழ்வுடன் வாழ்வார்கள். எடுத்துக்காட்டாக, நெல்சன் மண்டேலா நிறவெறியின் காரணமாக 27 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்தாலும், அவரது அக விடுதலையை அவர்களால் பறிக்க முடியவில்லை. சிறைக் கம்பிகளுக்கு உள்ளேயும்...