Tagged: தேவ செய்தி

எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புக்கள்

இன்றைய நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்கு ஒரு வினாடி, ஒரு வாய்ப்பு போதும். நாம் எங்கோ சென்றுவிடுவோம். ஆனால், நமது வாய்ப்புகளை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். கிடைக்கிற வாய்ப்புக்களை நல்ல முறையில், முழுமையாக் பயன்படுத்துகிறபோது, நிச்சயம் நமது வாழ்க்கை ஒளிரக்கூடியதாக இருக்கும். அப்படி கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தனது வாழ்வையே மாற்றிய ஒரு மனிதனின், வாழ்க்கை அனுபவத்தைத்தான், இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக அறிய வருகிறோம். பார்வையற்ற மனிதன் வழியோரமாய் உட்கார்ந்திருக்கிறான். தனக்கு பார்வை இல்லை, இனிமேல் நடப்பது நடக்கட்டும் என்று அவன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று வித்தியாசமாக அவன் உணர்ந்தால், உடனே அருகிலிருந்தவர்களிடம் அதுபற்றி விசாரித்துக்கொண்டிருந்தான். அதேபோலத்தான் இயேசுவின் வருகையையும் விசாரித்தான். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்று தேடிக்கொண்டேயிருக்கிறான். வாய்ப்பு கிடைத்ததும் அதனை அவன் பற்றிக்கொண்டான். அதுதான் வாழ்வை மாற்றுவதற்கு, வாழ்வையே புரட்டிப்போடக்கூடிய வாய்ப்பு. அதனை அவன் பயன்படுத்திக் கொண்டான். வாழ்வில் ஒளியைப்...

செய்து பாருங்க.

காலம் பொன்போன்றது. பத்து தோழியர் உவமையிலும் தாலந்து உவமையிலும் காத்திருக்கிறார்கள், மணமகனுக்காக அல்லது தலைவனுக்காக. இந்த உவமையின் சிறப்பு செய்தி, காத்திருக்கும்போதும் உழைக்க வேண்டும் என்பதுதான். தன் வேலை உண்டு, தான் உண்டு என்று வேலையில் கவனம் இருக்கவேண்டும். அடுத்தவனைக் குறை சொல்லுகிறவன், அதிலும் பணம் பொருள் உதவிகள் கொடுக்கும் ஒருவரையே குறை சொல்பவன், வேலையைச் செய்யமாட்டான். குருக்குவழி ஏதாவது உண்டா என்று பார்ப்பான். விதைத்துப் பெருக்கவேண்டிய பணத்தை, பொருளை, திறமையை, மண்ணுக்குள் புதைத்து மக்கிப்போகவைத்தது மா பெருந்தவறு. ஆகவே, உழைக்காதவன், அடுத்தவனைக் குறைசொல்பவன், குருக்குவழியில் சம்பாதிக்க நினைப்பவன், கிடைத்ததையும் பயன்படுத்தத்தெறியாதவன்,கிடைத்ததைக் கெடுப்பவன், உள்ளதையும் இழந்து தண்டனையும் பெருவது சரியானதே. இந்த குறைகள் இல்லாதவன் வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் உயர்வான். எல்லாம் சேர்ந்துகொண்டே இருக்கும்.அவனுக்கு எதுவும் குறையிருக்காது. செய்து பாருங்கரூhநடடip;.. –அருட்திரு ஜோசப் லீயோன்

இடைவிடாத செபம் கேட்கப்படும்

இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8) வருகிற நடுவர் ஏரோதாலோ, அல்லது உரோமையர்களாலோ நியமிக்கப்பட்ட நடுவர். பணம் இருந்தால், எதையும் செய்யலாம் என்பதாகத்தான், இந்த நடுவர்கள் செயல்பட்டனர். நீதிக்கு அங்கே இடமில்லை. எந்த அளவுக்கு பணத்தை வாறி இறைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நாம் விரும்பியபடி நீதி கிடைக்கும். நீதி, நியாயத்தைப்பற்றி அங்கு யாரும் பேசமுடியாது. பணம்தான் எல்லாம் செய்யும். இங்கே நற்செய்தியில் குறிப்பிடப்படுகிற பெண் ஏழைகளை, எளியவர்களை அடையாளப்படுத்தும் பெண். பணத்தினால் நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்காது. ஏனென்றால் அவர்களால் பணம் கொடுக்க முடியாது. ஆனாலும், அந்த பெண் நீதியை பெற்றிட பிடிவாதமாய் இருக்கிறாள். எப்படியாவது, நீதி கிடைத்திட தொடர்ந்து அவள் நச்சரிக்கிறாள். நச்சரிப்பின் காரணமாக, அவள் நீதியைப்பெறுகிறாள். இயேசுவின் செய்தி இதுதான்: பணத்திற்கா விலைபோகிற நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், நம்மைப்படைத்துப்பாதுகாத்துவரும் கடவுள் நம்மை அவ்வளவு எளிதில் கைவிட்டு விடுவாரா? நிச்சயம் நம்மைக்காப்பார். நமது...

இயேசு தரும் எச்சரிக்கை

இயேசுவின் இரண்டாம் வருகைக்காக பலபேர் நிச்சயம் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவரது இரண்டாம் வருகையில் தான், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் அநியாயத்திற்கு, செய்யாத தவறுக்கு, பலபேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக தங்களது வாழ்வையே இழந்திருக்கிறார்கள். ஆற்றோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் சாதாரண மீன்களைப் போல அல்லாமல், நீரோட்டத்தை எதிர்த்து நிற்கும் மீன்கள் போல, அநீதிகளுக்குச் சவால் விடுத்து, தங்கள் வாழ்வையே துறந்திருக்கிறார்கள். நிச்சயம் இவர்களின் நம்பிக்கை, இறைவன் முன்னால், தங்களுக்கு ஒருநாள் நீதி கிடைக்கும் என்பதுதான். திருவெளிப்பாடு 6: 10 ல் பார்க்கிறோம்: ”தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்? எங்களைக் கொலை செய்ததன் பொருட்டு எவ்வளவு காலம் அவர்களைப் பழிவாங்காமல் இருப்பீர்?” என்று கிறிஸ்துவி்ன் பொருட்டு, கிறிஸ்துவுக்காக இறந்தவர்கள் கேட்பதை, அங்கே நாம் வாசிக்கிறோம். இவ்வளவுக்கு பலபேர் ஆவலோடு எதிர்பார்க்கிற, இரண்டாம் வருகை எப்போது, நடக்கும்? இரண்டாம்...

இயேசுவை வரவேற்க ஆயத்தமாயிருப்போம்

இயேசுவிடத்திலே பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை மெசியா என்று நம்புவதற்கு அடையாளங்களையும், அருங்குறிகளையும் கேட்டனர். ஒரு மருத்துவர் நோயைக்கண்டறிவதற்கு உடலின் அருங்குறிகளை வைத்து, முடிவெடுப்பார். அதேபோலத்தான், அருங்குறிகளை வைத்து யூதர்கள் முடிவெடுத்தனர். ஆனால், இயேசு அவர்கள் கேட்பதன் பொருட்டு என்றுமே அருங்குறிகளை செய்து காட்டியதில்லை. அதே முறையைத்தான் இரண்டாம் வருகைக்கும் கையாள்கிறார். அருங்குறிகளையும், அடையாளங்களையும் வைத்து ஏமாற்றுகிறவர்களைக் குறித்து, இயேசு எச்சரிக்கையாகவும் இருக்கச்சொல்கிறார். இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயமாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது எப்போது என்று யாராலும் அறுதியிட்டுக்கூற முடியாது. அதைப்பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு, நம்முடைய நேரத்தையும் வீணாகக்கொண்டிருக்கத் தேவையில்லை. மாறாக, இயேசுவின் வருகையை முன்னிட்டு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். விருந்தினர் நமது வீட்டிற்கு வருகிறபோது, நாம் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, புத்தாடைகள் அணிந்துகொண்டு, அவர்களின் வருகையை எதிர்பார்த்து, ஆவலோடு காத்திருக்கிறோம். அதேபோல இயேசுவின் வருகைக்காக நாம் எல்லாநேரத்திலும் காத்துக்கொண்டிருக்க வேண்டும். இயேசுவின்...