Tagged: தேவ செய்தி

பார்வைகள் பலவிதம்

இணைச்சட்டம் 25: 5 ல் பார்க்கிறோம், ”உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்க்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அன்னியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத்தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும்”. இயேசு வாழ்ந்த காலத்தில், இந்த சட்டத்தை நடைமுறையில் கடைப்பிடித்தார்கள் என்பது சாத்தியமில்லைதான். இருந்தாலும், சதுசேயர்கள் இந்தக்கேள்வியை இயேசுவிடம் கேட்கிறார்கள். பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசுவுக்கு எதிராக இருப்பதில் ஒரே நேர்கோட்டில் இருந்தாலும், அவர்களுக்கிடையே ஏராளமான வேறுபாடுகள் இருந்தது. பரிசேயர்கள் சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடித்தார்கள். மறைநூலையும், வாய்மொழி விளக்கங்களையும் ஏற்றுக்கொண்டார்கள். உயிர்ப்பையும், வானதூதர்களையும் நம்பினர். எல்லாமே தலைவிதிப்படிதான் நடக்கிறது என்று பரிசேயர்கள் உறுதியாக நம்பினர். மீட்பரை எதிர்பார்த்திருந்தும் காத்திருந்தனர். ஆனால், சதுசேயர்கள் சட்டங்களின் காவலானாக இருந்தனர். பழைய ஏற்பாட்டு நூலை மட்டும், அதிலும் முதல் ஐந்து நூல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்வை...

கள்வர் குகையாக்கினீர்கள் !

எருசலேம் கோவிலுக்குள் இயேசு சென்று அங்கு விற்பனை செய்துகொண்டிருந்தோரைத் துரத்திய நிகழ்வு பரபரப்பான ஒன்று. இறைவேண்டலின் வீடாகிய எனது இல்லத்தைக் களவர் குகையாக்கி விட்டீர்கள் என்ற குற்றச்சாட்டுடன்தான் இயேசு அவர்களை வெளியே துரத்தினார். இந்நாட்களில் இயேசு நமது கோவிலுக்கு வந்தால், அதை எப்படிக் காண்பார்? இறைவேண்டலின் வீடாகவா? அல்லது வேடிக்கை, வினோதங்களின் அரங்கமாகவா? நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, திருமணங்கள் நடைபெறும் வேளைகளில் ஆலயம் படுகிற பாட்டை நாம் எப்படிப் பொறுத்துக்கொள்கிறோம் என்பது இறைவனின் இல்லத்தின்மீது நமக்குள்ள ஆர்வத்தின் அல்லது ஆர்வமின்மையின் அடையாளமாகவே அமைந்துவிடுகிறது. புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்கள் கிராதியின்மீது காலைத் தூக்கிப்போட்டுத் தாண்டி வருகிறார்கள், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், பெரியவர்கள் சிரித்து, உரையாடிக்கொண்டிருக்கிறார்கள், மணமக்களோ தங்களின் கனவுலகில் இருக்கிறார்கள், சில வேளைகளில் குருக்களும்கூட பேசிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது இவை எதையுமே கண்டுகொள்ளாதவர்களாக இருந்துவிடுகிறார்கள். சில வேளைகளில் நாயோ, ஆடோ ஆலயத்திற்குள் நுழைந்துவிடுகிறது. யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. நமது ஆலயங்கள் மாசுபடுவதைப்...

தேடி வந்த காலம்

இயேசு கண்ணீர் விட்டு அழுத மூன்று நிகழ்வுகளைப் புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டுகிறது. அவற்றுள் ஒன்றுதான் எருசலேம் நகரையும், கோவிலையும் பார்த்து அவர் அழுதது. அந்த நகரில் வாழ்ந்த மக்கள் இறைவனின் கோவில் அங்கே இருந்தாலும்கூட, இறைவனைவிட்டு வெகு தொலைவில் வாழ்ந்ததற்காக மனம் வருந்தி அவர் அழுதார். அது மட்டுமல்ல, கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை என்ற பரிதாப நிலையையும் மனதில் கொண்டு அவர் அழுதார். ஒருவேளை இன்று இயேசு நமக்காகவும்கூட அழலாம். இறைவன் நம்மைத் தேடிவந்து, அருளாசிகள் பல பொழிந்து, நன்மைகளால் நம் வாழ்வை நிரப்பியிருந்தும்கூட, நாம் அவரைக் கண்டுகொள்ளாமல், புறக்கணித்த காலங்களுக்காக இயேசு அழலாம். நாமே அந்த எருசலேம் என்பதை உணர்வோம். நமது வாழ்வில் பல்வேறு சூழல்களில், பல்வேறு மனிதர்கள் வழியாக இறைவன் நம்மைத் தேடிவருகிறார், அறிவுரைகள் தருகிறார், எச்சரிக்கையும் தருகிறார் என்பதை மறந்துவிட வேண்டாம். மன்றாடுவோம்: தேடிவரும் தெய்வமே இறைவா, நாங்கள் உம்மைத் தேடிவருவதைப்...

இரு மனநிலைகள்

மினாக்களைப் பற்றிய இயேசுவின் உவமை இருவிதமான மனநிலைகளை எடுத்துக்காட்டுகிறது. உயர்குடிமகன் தன் பணியாளர்களுக்கு பத்து மினாக்களைக் கொடுத்து அவற்றைக் கொண்டு வாணிகம் செய்யப் பணிக்கின்றார். சில காலம் கழித்து அவர் திரும்பி வரும்போது அவர்களில் பலரும் வாணிகம் செய்து ஈட்டியதைப் பெருமையுடன் அறிக்கை இடுகின்றனர். உயர் குடிமகன் அவர்களைப் பாராட்டுகிறார். ஈட்டியது எவ்வளவு என்று கணக்குப் பார்க்கவில்லை. அவர்களது நம்பிக்கைக்குரிய பண்பைப் பாராட்டுகிறார். ஒரே ஒரு பணியாளன் மட்டும் பணம் ஈட்டாதது மட்டுமல்ல, தம் தலைவரையே குறைசொல்லவும் துணிகிறார். நீர் கண்டிப்புள்ளவர், வைக்காததை எடுக்கிறவர், விதைக்காததை அறுக்கிறவர் என்று அவரையே தன் உழைப்பின்மைக்குப் பொறுப்பாளியாக்குகிறார். தலைவரோ அவருக்கு அவரது வாய்ச்சொல்லைக் கொண்டே தீர்ப்பளிக்கிறார். இரண்டாவதாக உள்ள மனநிலையைப் பலரிடமும் நாம் பார்க்கிறோம். ஒருவேளை நம்மிடம்கூட அந்த மனநிலை இருக்கலாம். பொறுப்புகளை ஏற்காமல், உழைக்காமல், உழைக்க மனமில்லாமல் வாழ்வதோடு, அதற்கான பொறுப்பையும் பிறர்மேல் சுமத்துகின்ற மனநிலையெ அது. ஆசிரியர் சரியில்லை, பள்ளி சரியில்லை,...

இயேசுவின் தன் முனைப்பு !

பல முறை வாசித்து, மகிழ்ந்த பகுதி சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு. லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடும் இந்த நிகழ்வில் சக்கேயுவின் மனமாற்றத்தையும், அவரது வாழ்வை இயேசு தலைகீழாக மாற்றிப்போட்டதையும் நாம் எண்ணி வியக்கிறோம். ஒரு மாற்றத்துக்காக இன்று இந்த நிகழ்வில் சக்கேயுவைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவின் செயல்பாட்டைச் சிந்திப்போம். சக்கேயுவின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் இயேசு எடுத்த முதல் முயற்சிதான். இயேசு சக்கேயு ஏறியிருந்த அத்திமரத்தை அண்ணாந்து பார்த்து, அவரை விரைவாய் இறங்கிவர அழைத்திருக்காவிட்டால், சக்கேயு மரத்தின்மேலேயே இருந்திருப்பார். இயேசுவைக் கண்களால் கண்டதோடு அவரது ஆவல் நிறைவேறியிருந்திருக்கும். இயேசு தாமாகவே முன்வந்து அவரை அழைத்ததுதான் சக்கேயுவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மனமாற்றத்தைத் தந்தது. இயேசு எடுத்த இந்த முன் முயற்சியைத்தான் தன் முனைப்பு, தன்னார்வம் என்று சொல்கிறோம். இது ஒரு தலைமைப்பண்பு. நல்ல தலைவர்கள் எப்போதும் தன் முனைப்பு, தன்னார்வம் உடையவர்களாகவும், மாற்றங்கள் தாமாகவே விளையும்...