Tagged: தேவ செய்தி

மனிதரைப் பிடிப்பவரான அந்திரேயா !

திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர். மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார். இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம். மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரும்...

இயேசுவின் விழுமியங்கள்

இயேசுவின் இன்றைய நற்செய்தி வார்த்தைகள்(லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19), அவரைப் பின்தொடரக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய துன்பங்களாகச் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்தொடர்கிறவர்கள் இவ்வளவு துன்பங்களைச் சந்திக்க முடியுமா? தங்களது உயிரைக் கொடுக்க முடியுமா? இவ்வளவு வேதனைகளுக்கு நடுவிலும், அவர்கள் தங்களது விசுவாசத்தைக் காத்துக் கொள்ள முடியுமா? நமது மனித வாழ்க்கையில் இவையெல்லாம் சாத்தியக்கூறுகளா? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம் நமது வாழ்க்கையில் எழும். ஏனென்றால், இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்ற வார்த்தைகள் கேட்பதற்கே பயங்கரமாக இருக்கின்றன. ஆனால், இயேசுவின் வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள். அவை சாத்தியமே என்பதை வரலாறு கூறுகிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்கள். அவர்களது உடல் விலங்குகளுக்கும், தீச்சுவாலைகளுக்கும் இரையாகப்போகிற சந்தர்ப்பத்திலும், கொடூரமான உடல் உபாதைகளால், காயப்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கவில்லை. அதற்காக உயிரை விடுவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். ஒரு மனித நிலையில், இது கடினமான ஒன்றுதான். ஆனால், துன்புறுத்தப்படுகிறபோது, நாம் மட்டும் துன்புறுத்தப்படுவதில்லை. கிறிஸ்துவும்...

யெருசலேமின் மேன்மை

யெருசலேம் தேவாலயம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மையமாக இருந்தது. அது ஏதோ வானுயர்ந்த, மகிமைக்குரிய கட்டிடம் மட்டும் அல்ல. மாறாக, அது கடவுளின் பிரசன்னம் நிறைந்த இடம். கடவுள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. பகைவர் முதலில் கைப்பற்ற விரும்பும் இடமாகவும், அது கருதப்பட்டது. அப்படிப்பட்ட யெருசலேமையும், அதன் மையத்தில் அமைந்திருந்த தேவாலயத்தையும் பார்த்து, இயேசு இறைவாக்கு உரைக்கிறார். இயேசுவின் இறைவாக்கு அவரின் உயிர்ப்பிற்கு பிறகு வரலாற்றில் நிறைவேறியது. கி.பி. 70 ம் ஆண்டில், உரோமைப்படைகள் யெருசலேமிற்குள் நுழைந்தன. கற்கள் மேல் கற்கள் இராதபடி, அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான பேர் நாடு கடத்தப்பட்டனர். தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. யெருசலேம் கடவுளுக்கு பிரியமான இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான், அங்கு அவருடைய பிரசன்னத்தைக் காட்டினார். ஆனாலும், இடம் மட்டும் கடவுள் வாழ்வதற்கான காரணமாகிவிடாது. மனிதர்களும் விசாலமானவர்களாக இருக்க வேண்டும். யெருசலேம் கள்வர்களின் குகையாகிப்போனது. ஏழை, எளியவர்களை...

கடவுளின் பராமரிப்பில் வாழ்வோம்

ஆலயத்தின் பெண்களுக்கான இடத்தினருகே, 13 காணிக்கைப்பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. எக்காளம் போன்ற அமைப்பில் அவைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனுடைய மேற்புறம் குறுகியும், கீழ்ப்புறம் அகன்றும் காணப்பட்டிருந்தன. ஒவ்வொரு காணிக்கைப்பெட்டிகளும் ஒவ்வொரு நோக்கத்திற்கானவை. ஆலயத்தில் பலிபொருட்களை எரிப்பதற்குப் பயன்படும் விறகுகளை வாங்க, ஆலயப்பொருட்களை பராமரிக்க, நறுமணப்பொருட்கள் வாங்க என்று பல தேவைகள் ஆலயத்திற்கு இருந்தன. அவற்றை நிறைவேற்ற, இந்தக்காணிக்கைப் பயன்படுத்தினர். இயேசு இந்தக்காணிக்கைப்பெட்டிகள் இருந்த இடத்திற்கு அருகே அமர்ந்திருக்கிறார். செல்வந்தர்களும் காணிக்கைப் போடுகின்றனர், ஏழைக்கைம்பெண்ணும் காணிக்கைப் போடுகின்றார். செல்வந்தர்கள் அதிக பணத்தைக் காணிக்கையாக செலுத்துகின்றனர். ஏழைக்கைம்பெண்ணோ, தன் பிழைப்பிற்காக வைத்திருந்த அனைத்தையுமே போட்டு விடுகிறாள். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப்போகிறேன்? என்பது தெரியாது. யாராவது எனக்கு உதவுவார்களா? அவளுக்கு தெரியாது. ஆனால், கடவுளின் பராமரிப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் அவளின் அந்தக்காணிக்கை. அவளின் நம்பிக்கை பணத்தில் அல்ல, கடவுளின் பராமரிப்பில். இந்த இரண்டு காசுகளும் கடவுள் எனக்குத்தந்தது. அதைக்கடவுளுக்கே காணிக்கையாக்குகிறேன் என்று,...

இல்லாதவர்களுக்கு நமது பங்களிப்பு

இயேசு போதித்த உவமைகளில், இன்றைய உவமை தான் நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஓர் உவமை. வழிபாட்டு ஆண்டின் தொடக்கம் திருவருகைக்காலம். வழிபாட்டின் ஆண்டின் கடைசி வாரம் என்பதால், நமது இறுதிக்காலம் பற்றி வாசகம் நமக்குத்தரப்பட்டிருக்கிறது. வாசகத்தின் மையக்கருத்து, மனித தேவைகளுக்கு நாம் எப்படி பங்களிக்கிறோம்? என்கிற கேள்விதான். இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது பெரிய, பெரிய காரியங்களை அல்ல. நாம் செய்யக்கூடிய, செய்ய முடிகின்ற சாதாரண காரியங்கள் தான். இன்றைய உவமையில் இயேசுவின் வலதுபக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பதும் தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய காரியங்கள் இவ்வளவு மகத்துவம் மிக்கவை என்பதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார். இந்த நற்செய்தியைக்கேட்டு மனம்மாற்றம் அடைந்தவர்கள் இரண்டு பெரிய புனிதர்கள். புனித பிரான்சிஸ் அசிசி மற்றும் புனித மார்ட்டின். இரண்டுபேருமே செல்வந்தர்களாக, அதிகாரம் மிகுந்தவர்களாக இருந்தபோதிலும், இயேசுவின் வார்த்தை அவர்களைத்தொட்டு அவர்களின் வாழ்வை மாற்றியது. கடவுள் நாம்...