ஆண்டவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்
திருப்பாடல் 25: 4 – 5, 6 – 7, 8 – 9 ”ஆண்டவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்” கடவுள் எப்படிப்பட்டவர்? என்பது பற்றி யூதர்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். கடவுளை நீதிபதியாக, தண்டிக்கிறவராக, கடுமையானவராக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். பாவம் செய்தவர்கள் நிச்சயம் தண்டனையைப் பெறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருந்த யூதர்கள், கடவுளின் மற்றொரு பக்கத்தை சரியாக கணிக்கத் தவறிவிட்டனர் என்றே சொல்லலாம். கடவுளைப் பற்றிய பார்வையின் மறுபக்கத்தை, இன்றைய திருப்பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் பாவிகளுக்கு நல்வழி காட்டுகிறவராக சித்தரிக்கப்படுகிறார். கடவுள் பாவிகள் தண்டனை பெற வேண்டும் என்று நினைப்பவரல்ல, மாறாக, அவர்கள் திருந்தி நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறவர். நாம் செய்கிற பாவங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால், அந்த பாவங்களுக்காக மனம் வருந்துகிறபோது, மன்னிப்பும் உண்டு என்பதை, இந்த வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஆக, பாவம் என்பதற்கு மாற்றாக,...