ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்
எரேமியா 31: 10, 11 – 12b, 13 ”ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்” இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக நெபுகத்நேசர் மன்னரால் நாடு கடத்தப்பட்டனர். அது கடவுள் கொடுத்த தண்டனையாகவே அவர்கள் பார்த்தார்கள். தாங்கள் கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் புறக்கணித்ததற்காக பெற்றுக்கொண்ட தண்டனை தான் இது என்று எண்ணிக்கொண்டார்கள். அவர்களுக்கு வேற்றுநாட்டில் இருப்பது மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுத்தாலும், கடவுளுக்கு எதிராக தாங்கள் செய்த பாவத்தையும், நன்றி மறந்த நிலையையும் நினைத்துப்பார்த்தபோது, இந்த தண்டனைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்று, தங்களையே சமாதானப்படுத்திக் கொண்டார்கள். இது தான் அவர்களின் மனமாற்றம். என்றைக்கு நாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறோமோ அது மனமாற்றத்தின் தொடக்கமாக அமைகிறது. இந்த நிலையில் கடவுள் அவர்களை மன்னித்து, அவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கக்கூடிய ஆசீர்வாதங்களை இறைவாக்கினர் வாயிலாக அறிவிக்கின்றார். கடவுள் தன் மக்களை ஆயர் மந்தையைக் காப்பது போல, காத்து வழிநடத்துவதாக இறைவாக்கினர் பாடுகிறார். அவர் மீண்டும்...