கனிவோடு கண்டிப்பது கடமையே!
மத்தேயு 14:1-12 நம்மோடு வாழும் ஒருசிலர் தவறான வழிகளில் நடக்கும் போது அவர்களுக்கு ஆழமான ஆன்மீக அறிவுரை வழங்கி அவர்களை ஆண்டவரின் அருகில் கொண்டு வர உதவி செய்ய வேண்டியது அவர் அருகில் இருக்கும் நம் கடமை. அறிவுரை சொல்லும் போது ஒருவேளை கேட்காமல் போனால் கனிவோடும் மிகுந்த அக்கறையோடும் கண்டிப்பது மிகவும் அவசியம். இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் கனிவாக கண்டிப்பை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. திருமுழுக்கு யோவான் தன் சகோதரனின் மனைவியை ஏரோது வைத்திருப்பது முறையல்ல என அவனை கனிவோடு கண்டிக்கிறார். திருமுழுக்கு யோவானின் இந்த கண்டிப்பு இரண்டு அவசியமான காரணங்களுக்காக.1) ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்கை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வருங்கால தலைமுறையினருக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் 2) தவறு என்றால் அது யார் செய்தாலும் அது தவறுதான் என்பதை அழுத்தமாக அறிவிக்கவும் இந்த இரண்டு காரணங்களை அவர்...