Tagged: தேவ செய்தி

உங்கள் பெயரை சிறப்பாக்கி விட்டீர்களா?

மத்தேயு 16:13-23 நமக்கு நாம் பெற்றிருக்கின்ற பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த பெயரை மிகவும் சிறப்பாக மாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நமது பெயர் புகழ்பெற்றதாய், பிரபலமானதாய் மாற வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டியது நம் தலையாய கடமை. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு என்ற பெயரை ஆண்டவர் இயேசு கிறிஸ்து உச்சரிக்கிறார். அதன் சிறப்புத்தன்மைகளை எடுத்துரைக்கிறார். பேதுரு என்றால் பாறை. யாரும் அசைக்க முடியாது. உறுதியானது திருச்சபை அதன் மேல் கட்டப்படும் பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா விண்ணரசின் திறவுகோல்கள் தரப்படும் மண்ணுலகில் தடைசெய்வது விண்ணுலகில் தடைசெய்யப்படும். மண்ணுலகில் அனுமதிப்பது விண்ணுலகில் அனுமதிக்கப்படும் பேதுரு என்ற பெயரைப் பற்றி இயேசு பெருமையாக பேசுகிறார். அவரிடம் மிக உயரிய பொறுப்பினை வழங்குகின்றார். பலவீனங்கள் அவரிடம் இருந்தன. அவற்றையெல்லாம் அவர் உடைத்துப்போடடார். தன் பெயரை சிறப்பாக்கினார். பேதுருவின் கடின உழைப்பு, தாழ்ச்சி, பொறுமை, தியாகம் இவைகள்...

கடவுளின் வரத்திற்காக காத்திருப்பது தவறா?

மத்தேயு 15:21-28 கடவுள் நல்லவர். நம்பிக்கையோடு நாம் கேட்ட அனைத்தையும் நமக்கு தரக்கூடியவர். ஒருசில நேரங்களில் நாம் கேட்ட மன்றாடடுக்கள் அனைத்தும் மிக விரைவில் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நாம் காத்திருந்து தான் பெற வேண்டியிருக்கும். நம் அன்புக் கடவுள் நம்மை அதிகமாகவே அன்பு செய்கிறார். அவர் நமக்கு எதையும் தராமல் மறுப்பதில்லை. மாறாக வாரி வழங்கும் வள்ளல் அவர். ”பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என்ற இந்த இறைவார்த்தைகள் அவரின் அதிகப்படியான அன்பை எடுத்துக்காட்டுகின்றன. இதை உணராமல் நாம் பல வேளைகளில் அவசரப்படுகிறோம். நான் கேட்ட வரத்தை கடவுள் இன்னும் தரவில்லையே என்று மிகவே அவசரப்படுகிறோம். அப்படி அவரசப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. கானானியப் பெண் பேய் பிடித்திருந்த தன் மகள் குணம் பெற...

கடைசி நேரத்தில் கத்துவது சரியா?

மத்தேயு 14:22-36 ”அனுதினமும் ஆண்டவரை வணங்க வேண்டும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நொடியிலும் கடவுளைத் தேட வேண்டும்” என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இதைத்தான் நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும், இறையடியார்களும் நமக்கு கற்றுத்தருகிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல் என்பது, ”கடவுளோடு நீ பயணித்தால் பரிசுத்தமாவாய், பாதுகாப்பு கிடைக்கும், பயங்கள் பறந்து போகும், உன் பாதை தெளிவாகும்” என்பதாகும். இவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து கற்ற நாம், கடவுளை அனுதினமும் தேடுகிறோமா? கடவுளோடு தினமும் பேசுகிறோமா? என்பது கேள்விக்குறி. கடைசி நேரத்தில் தான் கடவுளை தேடுகிறோம், கடைசி நேத்தில் தான் கத்துகிறோம், கதறுகிறோம். அதனால் பலன் ஏதும் உண்டோ? கடைசி நேரத்தில் கடைவுளை தேடுவோருக்கு, கடவுளை நோக்கி கதறுவோருக்கு இன்றைய நற்செய்தி வாசகம் மிகச் சிறந்த உதவியாக வருகிறது. பேதுருவுக்கு கடலில் நடக்கின்ற வல்லமையை ஆண்டவர் இயேசு அருளினார். கொஞ்ச தூரம் சென்ற பிறகு அவர் கடவுளை மறந்து விட்டார். தன்னுடைய வல்லமையால் அவர் நடப்பதாக...

ஆண்டவரின் தோற்றமாற்ற விழா

மாற்றத்ததை ரசித்து ருசித்து பார்க்கலாமே! மாற்கு 9:2-10 இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்ற விழாவினைக் கொண்டாடுகின்றோம். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வு இது. தம் சீடர்களில் மிகவும் நெருக்கமான மூவரை மட்டும் அழைத்துக்கொண்டு மலையேறும் இயேசு அங்கே செபிக்கிறார். செபிக்கும்போதே அவரது தோற்றம் மாறுகிறது. அவரது மனித சாயல் மறைந்து, இறைச் சாயல் வெளிப்படுகிறது. அவரது ஆடை வெண்ணிறத்தில் ஜொலிக்கிறது. விண்ணகக் காட்சியாக அது மாறுகிறது. பழைய ஏற்பாட்டின் இரு பெரும் தூண்களான மோசேயும், எலியாவும் தோன்றி அவருடன் உரையாடுகிறார்கள். ஒரு மேகம் வந்து அவர்களைச் சூழ்கிறது. “இவரே என் மைந்தர்” என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலிக்கிறது. இதுதான் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு. உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? என்பது கோல்கேட் விளம்பரம். உங்க வாழ்க்கையில மாற்றம் இருக்கா? இது இன்றைய நற்செய்தி வாசகத்தின் விளம்பரம். பழைய வாழ்க்கையில் படுத்து சுகம் கண்டுக்கொண்டிருக்கிற...

ஆன்மீகத்தேடல்

இந்த உலகத்திலே வாழக்கூடிய மனிதர்களுக்கு இரண்டு வகையான பசி இருக்கிறது. முதலாவதாக, உடல் பசி. இரண்டாவதாக ஆன்மீகப்பசி. உணவு உடல் பசியைப் போக்கிவிடும். ஆனால், அதே உணவால் ஆன்மீகப்பசியைப் போக்க முடியாது. அதனால் தான், உடல் பசியைப்போக்க எவ்வளவு ஆடம்பரம் இருந்தாலும், பணத்தில் கொழித்தாலும், ஆன்மீகப்பசியைப் போக்க முடியாததாக, பலபேருக்கு இருக்கிறது. அவர்களால் பணத்தால் ஆன்மீகப்பசியைப் போக்க முடியாது. கி.பி. 60 ம் ஆண்டில், உரோமை சமுதாயம் ஆடம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஏராளமான விருந்துகளும், கேளிக்கைகளும் நிறைந்த சமுதாயமாக அது காணப்பட்டது. அதற்காக பெருந்தொகையை மக்கள் செலவிட்டனர். அவர்கள் செல்வத்தில் கொழித்ததால், பணத்தை வாரி இறைத்தனர். இத்தகையப்பிண்ணனியில், மக்களும் உணவின் மீது அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருந்தனர். அத்தகைய மனப்போக்கை இயேசு கண்டிக்கிறார். உண்மையின் மீது, நேர்மையின் மீது, இறையரசை இந்த மண்ணில் கொண்டு வர பசி உள்ளவர்களாக வாழ வேண்டும் என்று, அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இன்றைய...