Tagged: தேவ செய்தி

நச்சரிப்பு நல்லவராக்கட்டும்!

லூக்கா 18:1-8 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். தீயவர்கள் தீமையில் வாழ்வது நல்லதல்ல. அத்தீயவரை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டியது அருகிலிருக்கும் ஒரு நல்லவரின் பொறுப்பு. இன்றைய நற்செய்தி வாசகம் நேர்மையற்றவராக இருந்த நடுவரை நல்லவராக மாற்றிய கைம்பெண்ணைப் பற்றிக் கூறுகிறது. நம்மையும் இந்த சிறப்பு பணியைச் செய்ய அழைக்கிறது. இந்த பணிக்கு அவசியமானது இரண்டு. 1. கவனித்தல் ஒருவர் தீமை செய்யும் போது அவரை திருத்தும் நல்லெண்ணம் கொண்ட ஒருவர் தீமை செய்பவரை நன்கு கூா்ந்து கவனிக்க வேண்டும். எந்த இடத்தில் அவரின் பலவீனம் இருக்கிறது என்பதை கவனமாகக் கண்டறிய வேண்டும். அவரின் வாழ்வில் உதவி செய்ய வேண்டும் என்ற பெருந்தன்மை இதற்கு மிகவும்...

உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்

லூக்கா 17:26-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் வாழும் நாட்களில் நம்முடைய தண்டனைத்தீர்ப்பை பெரும்பாலும் மனதில் கொள்வதில்லை. கடைசியில் என்ன நிகழும் என்பதை தெளிவாக தெரிந்தவர்கள் வாழ்க்கையை விழிப்பாக நகர்த்திச் செல்வார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அழைப்புக் கொடுக்கிறது. எதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தண்டனைத் தீர்ப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான இரண்டு முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். 1. நம்பிக்கை காலம் செல்ல செல்ல கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த செயலையும் திருப்தியாக செய்வதில்லை. வாழ்க்கையில் ஒரு பிடிப்பு, உற்சாகம் இல்லாமல் அவர்கள் அலைவது உண்டு. நம்பிக்கை இருப்பவர்கள் இறைவனை இறுக்கமாக பற்றிக்கொண்டு அவருக்கு...

இன்றைக்கு இயேசுவைப் போற்றினீர்களா?

லூக்கா 17:11-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! காலையில் முதலில் கண்விழிக்கும் போது நாம் கடவுள் திருமுன்னிலையில் கண்விழிக்க வேண்டும். அப்படி செய்வது அந்த நாளை சக்திமிக்கதாக மாற்றுகிறது. எழுந்ததும் கடவுளே உமக்கு நன்றி என்று சொல்வது மிகச் சிறந்தது. அதன்பிறகு தொடா்ந்து நம் செயல்களில் அவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு செயல்பாடுகளை செய்து அவரைப் போற்ற வேண்டும். அந்த இரண்டு செயல்பாடுகளை இன்றிலிருந்து செய்வது மிகவும் நல்லது. 1. திருப்பாடல்கள் இசைத்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் நாம் திருப்பாடல்களை இசைத்து ஆண்டவரைப் போற்ற...

நம்பிக்கை வைப்போம்

நமது நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? எது ஆழமான நம்பிக்கை? எது உண்மையான நம்பிக்கை? நாம் நம்பிக்கையாளர்களாக இருந்தால் எப்படி வாழ்வோம்? என்பதை, நமக்கு கண்கூடாக காட்டுவது தான், இன்றைய நற்செய்தி. நம்பிக்கையாளர்களாக வாழ்வதற்கு, நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை நல்ல முறையில் அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த உறவைப் பற்றிய தெளிவான புரிதல் நமக்கு இருக்க வேண்டும். அந்த புரிதல் நமக்குள்ளாக இருக்கிறபோது, அந்த நம்பிக்கையைச் சிறப்பான விதத்தில் நாம் வாழ்ந்து காட்ட முடியும். கடவுளுக்கும், நமக்குமான உறவு என்ன? என்பதில் தான், அடிப்படைச்சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கல் முழுமையாக, சரியான புரிதலோடு தீர்க்கப்பட்டால், அது எளிதானதாக மாறிவிடும். இன்றைய நற்செய்தி, கடவுளுக்கும் மனிதருக்குமான உறவை, தலைவர், பணியாளர் எடுத்துக்காட்டுக்களை வைத்து நமக்கு விளக்குகிறது. இங்கே, பணியாளர் என்பவர், கேள்வி கேட்பவராக இல்லை. பணியாளர் தலைவரை முழுமையாகப் பற்றிப்பிடிப்பவராக, அவருக்கு பணிவிடை செய்கிறவராக சித்தரிக்கப்படுகிறார். எவ்வளவு பணிப்பளு இருந்தாலும், பணியாளருடைய...

காணிக்கை கொடுங்கள்! நல்லா இருப்பீர்கள்!

மாற்கு 12:38-44 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 32ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஒரு ஊரில் ஜோசப் என்னும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளிடத்தில் ஆழமான பக்திகொண்டிருந்தார். அதற்கேற்றார்போல் கடவுளுடைய கட்டளைகளை தவறாது கடைப்பிடித்து வந்தார், தன்னிடம் இருப்பதை முடிந்தவரை ஏழைகளுக்கும் இறைபணிக்கும் கொடுத்துவந்தார். இந்த ஜோசப்பின் வீட்டுக்குப் பக்கத்தில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் யாருக்கும் ஒரு பைசாகூட கொடுக்காதவர். இப்படிப்பட்டவருடைய வீட்டுக்கு வந்த ஓர் இறையடியார் அவரிடத்தில், “நீ சேர்த்து வைத்த செல்வம் யாவும் உன் அண்டை வீட்டானாகிய ஜோசப்பைத் தான் போய் சேரும்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார். இது அந்த பணக்காரருக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியது. இத்தனை ஆண்டுகளும் நாம் சேர்த்துவைத்த செல்வம், யாரோ ஒருவருக்குப்...