மூத்தவனா? இளையவனா?
லூக் 15 : 1-3, 11-32 “உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் உன் எதிரி யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் கூற கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த இரண்டையும் மாற்றி, “நீ வணங்கும் கடவுள் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்கிறது ஊதாரி மகன் நற்செய்தி. ‘மொத்த நற்செய்தி நூல்களின் சாரம்’ என்று இந்த உவமையைக் குறிப்பிடலாம். சில விவிலிய அறிஞர்கள் இப்பகுதியினை, ‘விவிலியத்திற்குள் ஒரு விவிலியம்’ என்கிறார்கள். பிற மதத்தினர் கடவுளை நீதியோடு தண்டிக்கக் கூடியவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நாம் கடவுளை நீதியோடு அன்பு செய்கிறவராகப் பார்க்கிறோம். இங்கு மூத்தமகன் கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து வாழ்ந்த யூதர்களையும், சொத்துக்களை எல்லாம் இழந்த இளையமகன் பிற இனத்தவர்களையும் பாவிகளையும் குறிக்கின்றனர். இந்த உவமையில் சிறப்பானது இறுதியில்தான் உள்ளது. அது என்னவென்றால் மூத்தமகன் வீட்டிற்குள்ளே சென்றானா? இல்லையா? என்பது தான். இதனை ஆண்டவர் இயேசு...