இறைவன் மீதான நம்பிக்கை
2 அரசர்கள் 19: 9 – 11, 14 – 21, 31 – 35, 36 அசீரிய மன்னன் சனகெரிபு, செதேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அவன் கடிதம் எழுதுகிறபோது, எத்தியோப்பிய மன்னன் திராக்கா, அவனுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். இந்த திராக்கா பிறப்பால் ஒரு எத்தியோப்பியன். தொடக்கத்தில் நபதாவில் தன்னுடைய ஆட்சியைத் தொடங்கிய அவன், மெல்ல மெல்ல எகிப்து முழுமைக்குமாக தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். பல போர்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். பல வெற்றிகளையும் பெற்றான். குறிப்பாக, அசீரியர்களுக்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெற்றான். கிரேக்கர்களால் மிகச்சிறந்த போர்வீரனாக அறியப்படுகிறான். கி.மு.699 ல், அவன் இன்னும் எகிப்தின் அரசனாகவில்லை. எத்தியோப்பியாவின் அரசனாகவே இருந்தான். ஆனால்,எகிப்தை தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே வைத்திருந்தான். அது அசீரிய மன்னன் சனகெரிபின் தாக்குதலுக்கு உட்பட்டதால், அதனைக் காப்பாற்றுவதற்காக, அசீரியர்களுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். அதுதான், இந்த பகுதியில்...