Tagged: தேவ செய்தி

பரிசேயர் பரம்பரை

செவ்வாய் மாற்கு 7: 1- 13 பரிசேயர் பரம்பரை எது சுத்தம்? எது தீட்டு? எருசலேம் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் ஒன்றுகூடி, இயேசுவில் குற்றம் காண முயல்கின்றனர். உணவருந்தும் முன் சீடர்களில் சிலர் கை கழுவவில்லை. இச்சடங்கு ஒரு சமயச்சடங்கு, இதை மீறினால் குற்றம், தீட்டு என பரிசேயர் கருதினார்கள். (காண்க லேவியர் 11-15) ஆனால் இயேசு இதனை மிகவும் கண்டிக்கிறார். காரணம் இவர்கள் தன் சீடர்களிடம் மரபுகள் பற்றி கேள்வி கேட்டதற்காக அல்ல. ஆனால் மரபுகளை மட்டும் பிடித்துக் கொண்டு இறைவார்த்தையையும் கடவுளின் கட்டளைகளையும் புறக்கணித்து விட்டீர்களே என்று கடிந்துகொண்டு “கொர்பான்” பற்றி பேசுகிறார். நமக்கும் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்பதைவிட கைகளைத் தூய்மையாக வைத்திருப்பது எளிதல்லவா. பரிசேயர்களை விட்டு விடுவோம், இன்று நாமும் நம் கிறித்தவ விசுவாசத்தில் பலமுறை நமக்கு தேவையானதை, எளிதானவை, எல்லார்க்கும் எது கவர்ச்சிக்கரமாக இருக்கின்றதோ அதை மட்டும்தான் கடைப்பிடிக்கிறோம். அவைகளை மட்டுமே உயர்த்திப் பிடிக்கிறோம். இதுதான்...

அறிதலின் வழி அழியா வாழ்வு

மாற்கு 6: 53 – 56 பிறரை அறிந்து கொள்வதும், பிறரால் அறிந்து கொள்ளப்படுவதும் அறிதலின் இரண்டு நிலைகள் என்று உளவியல் சிந்தனையாளர் சிக்மண்ட் ப்ராய்டு கூறுவார். இவையிரண்டில் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு எது முக்கியம் என்று கேட்டோமென்றால், அனைவரும் பிறர் என்னை அறிந்து செயல்பட வேண்டும் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் நிறைகுறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள். ஆனால் நாம் அறிந்து கொண்டு வாழ்வது கடினம். அதனால் தான் ஆபிரகாம் லிங்கன் வக்கீலாகத் தன் தொழிலை ஆரம்பித்த போது “உறவு வாழ்வைப் பொறுத்த அளவில் நான் தோல்வியைத் தான் தழுவப் போகிறேன். ஏனென்றால் யாரும் என்னை விரும்ப போவது கிடையாது” என்று அவ்வப்போது சொல்லிக் கொள்வாராம். ஆனால் அதே ஆபிரகாம் லிங்கன் பிற்காலத்தில் மற்றவர்களை அறிந்து செயல்படக்கூடிய கலையில் நிபுணத்துவம் (Master in the art of knowing) என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்து நின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மக்கள்...

இருளில் ஒளியென மிளிர்வர்

திருப்பாடல் 112: 4 – 5, 6 – 7, 8 – 9 யார் இருளில் ஒளியென மிளிர்வர்? திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்: நீங்கள் கடவுளுக்கு பயந்து வாழ்கிறபோது, இருளில் ஒளியாக மிளிர்வீர்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களில் பெரும்பாலானோர் ”பத்தோடு ஒன்று பதினொன்று” ரக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு முக்கியமான காரணம், அப்படி வாழவில்லை என்றால், இந்த உலகத்தை விட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதால் தான். இந்த உலகம் தனக்கென ஒரு சிலவற்றை மதிப்பீடுகள் என்ற பெயரில் வைத்திருக்கிறது. ஆனால், அவை கடவுள் பார்வையில் அநீதியானவை. இந்த உலக மதிப்பீடுகளை வாழ்கிறவர்கள், நிச்சயம் கடவுள் பயம் இல்லாதவர்கள். அதனால் தான், அவர்களால் துணிவோடு மற்றவர்களின் உயிரை எடுக்க முடிகிறது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் காணமுடிகிறது. மற்றவர்களின் பொருளைச் சுரண்ட முடிகிறது. இப்படியாக, கடவுள் பயம் இல்லாத உள்ளத்தில்,...

தனிமையில் தன்னிலை உணர…

மாற்கு 6:30-34 உடலினை உறுதி செய்ய ஆயிரம் வலிகள் இருக்கின்றன. ஆனால் உள்ளத்தை, ஆன்மாவினை வலிமையாக்க தனிமையினால் மட்டுமே முடியும். தனிமை என்பது தன்னிலே இனிமைக் காண்பது. தனிமையிலே தன்னிலையை உணர்வது. இயேசு இன்றைய நற்செய்தியில் மக்களிடம் பணி செய்துவிட்டு வந்த தன் சீடர்களிடம் தனிமையில் சென்று ஒய்வெடுக்க சொல்கிறார். அந்த ஒய்வு எடுத்தலினை தனிமையாயிருக்க யாருமே இல்லாத ஒரு பாலை வனத்துக்கு சென்று ஒய்வு எடுக்க சொல்கிறார். தனிமையில் மட்டுமே நம்மை நாமே சீர்; தூக்கி பார்க்க முடியும், ஆராய முடியும். உண்மையிலே சொல்ல வேண்டுமென்றால் தனிமை நமக்கு பல விடயங்களை கற்று தருகிறது. இந்த தனிமையில் நாம் ஏறெடுக்கின்ற இந்த உள்ளொளிப் பயணம் துறவறத்துக்கு மட்டுமல்ல. இல்லறத்தை நல்லறமாக்க மிகவும் தேவைப்படுகின்றது. மேலும் இன்றையய நற்செய்தி நல்ல தலைவன் என்பவர் எப்படி இருக்க வேண்டுமென்றும் நம் இயேசு நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார். சீடர்களைத் நாடி வந்தவர்களை அவர்...

படைகளின் ஆண்டவர் இவர்

திருப்பாடல் 24: 7, 8, 9, 10 படைகளின் ஆண்டவர் என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டு நூலில் ஏறக்குறைய 261 முறை வருகிறது. 1சாமுவேல் 1: 3 ல், முதன்முறையாக இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. விண்ணகத்தில் இருக்கிற படைகளுக்கு தலைவராக ஆண்டவர் இருக்கிறார் என்பதுதான் இதனுடைய பொருளாகும். இஸ்ரயேல் மக்களின் படைகளுக்கும் கடவுள் தான் தலைவர் என்பதையும் மறைமுகமாகக் குறிக்கக்கூடிய சொற்களாகவும் இவற்றைப் பார்க்கலாம். தாவீது அரசர், படைகளின் ஆண்டவர் என்று சொல்கிறபோது, இந்த விண்ணகத்திற்கு மட்டுமல்லாது, மண்ணகத்திற்கும், இங்கிருக்கிற படைகளுக்கும் ஆண்டவர் தான் தலைவராக இருக்கிற என்கிற பொருளில், இங்கே எழுதுகிறார். ஆக, கடவுள் தான் அனைத்திற்கும் அதிபதி என்பதை, இந்த வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. படைகளின் தலைவராக இருக்கிறவர் தன்னுடை சேனையை வழிநடத்தி, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டும். விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்கும் அதிபதியாக இருக்கக்கூடிய கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்திற்கு அனுப்புகிறார். பாவத்திலிருந்து...