Tagged: தேவ செய்தி

நம்மை உயிர் வாழச்செய்த இறைவன் போற்றி

திருப்பாடல் 66: 1 – 3a, 5&8, 16 – 17 செபம் என்பது விண்ணப்பங்களையும் மன்றாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வதாக இருக்கக்கூடாது. மாறாக, அது புகழ்ச்சியின் செபமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல் தான், இன்றைய திருப்பாடல். நம்முடைய செபம் என்று சொல்லப்படுவது அடுக்கடுக்கான விண்ணப்பங்கள் தான். விண்ணப்பங்களையும், மன்றாட்டுக்களையும் தாண்டி, நம்மால் சிந்திக்க முடியவில்லை. அதற்குள்ளாகவே நம்முடய செபத்தை அமைத்துக் கொள்வதில் நாம் நிறைவு அடைகிறோம். உண்மையான செபம் புகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, நம்முடைய செபம் அமைய வேண்டும் என்பது இங்கே நமக்கு விடுக்கப்படுகிற செய்தி. இஸ்ரயேல் மக்கள் செபத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். ஒரு நாளில் பல வேளைகளில் செபித்தனர். அதனை கடமையாகவும் எண்ணினர். அவர்களுடைய செபம் புகழ்ச்சியை அடித்தளமாகக் கொண்ட செபங்களாக இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனென்றால், அவர்கள் இறைவனிடமிருந்து பெறுவதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் ஏற்கெனவே நிறைய பெற்றிருந்தனர். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு...

முகமலர்ச்சியோடு கொடுப்போம்

2கொரிந்தியர் 9: 6 – 10 கொடுத்தல் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான பண்பாகும். எனவே தான், தாய்த்திருச்சபை இறைமக்களின் பகிர்வை அதிகமாக எதிர்பார்க்கிறது. அவர்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைப்பும்விடுக்கிறது. குறிப்பாக, திருச்சபையின் முக்கியமான விழாக்களிலும், முக்கியமான காலங்களிலும், கொடுத்தலை அதிகமாக வலியுறுத்திச் சொல்கிறது. கொரிந்து நகர மக்களுக்கு, கொடுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்கிற செய்தியை, தூய பவுலடியார் வழங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். நாம் கொடுக்கிறபோது, முகமலர்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்று தூய பவுலடியார் கூறுகிறார். நாம் கொடுப்பது கட்டாயத்தினால் இருக்கக்கூடாது. அல்லது இதனை நான் கொடுத்து தான் ஆக வேண்டுமா? என்கிற இரண்டுவிதமான மனநிலை கொண்டும் கொடுக்கக் கூடாது. இறைவன் எனக்கு தந்திருக்கிறார். இறைவனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பெற்றுக்கொண்ட இந்த கொடையை, நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும்....

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20 ஆண்டவர் யார்? ஆண்டவர் எப்படிப்பட்டவர்? என்பதை, இந்த திருப்பாடலானது நமக்கு விளக்கிச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்றுவதற்கான காரணத்தை இது விளக்குவதாகவும் இருக்கிறது. இஸ்ரயேல் மக்களை ஒட்டுமொத்தமாக இணைந்து, கடவுளைப் புகழ்ந்து பாடச்சொல்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் நாட்டின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆசீர் அளிக்கிறார். கேட்டதால் கொடுக்கவில்லை. மாறாக, அவராகவே ஆசீர்வாதத்தைத் தருகிறார். இஸ்ரயேல் மக்களை எல்லாவிதத்திலும் வழிநடத்தக்கூடிய தலைவராக, அரசராக, ஆயராக இறைவன் இருக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்கென்று இந்த உலகத்தில் அரசர்கள் இருந்தாலும், அவர்களை வழிநடத்துகிறவர் ஆண்டவர் ஒருவரே. அவர் மக்களுக்கு ஒழுங்குமுறைகளையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறார். இவற்றை அவர் மற்றவர்களுக்குச் செய்யவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் செய்கிறார். எப்படியாவது இஸ்ரயேல் மக்களை உருவாக்கி, இந்த உலகத்தார் நடுவில் பெருமைப்படுத்தி, அவர்கள் வழியாக இந்த உலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது...

நற்கருணையால் ஒரே குடையின் கீழ் வருவோம்

யோவான் 6:41-51 கிறிஸ்தவப் பெண் ஒருவர் நற்கருணையின்மீது நம்பிக்கை இல்லாதவராக இருந்தார். குறிப்பாக இயேசுவின் வார்த்தைகளான ‘எனது சதையை உண்டு, எனது ரத்தத்தைக் குடிப்போர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்’ என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உடலையும் ரத்தத்தையும் எப்படி உண்பது… அப்படி உண்பது நர மாமிசம் சாப்பிடுவதைப் போன்றது ஆகாதா?’ என்று பலவாறாக யோசித்து, மிகவும் குழப்பத்தில் இருந்தார். ஒருநாள் தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் அந்தப் பெண் பயணம் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானார். விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி மயக்கம் போட்டு விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது, அவருடைய உடலில் ரத்தம் ஏற ஏற அவர் தெளிவுபெற்றுக் கண்திறந்தார். அப்போது அவர் அங்கே நடப்பவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார். `யாரோ ஒருவருடைய ரத்தம் தனக்கு வாழ்வு கொடுக்கும்போது,...

ஆண்டவர் என் கற்பாறை

திருப்பாடல் 18: 1 – 2a, 2bc – 3, 46 – 50 இறைவனை பலவிதமான உருவகங்களில் இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கற்பாறை, கோட்டை, மீட்பர், மலை, கேடயம், அரண் என்று இந்த உருவகம் நீண்டு கொண்டே செல்கிறது. உருவகத்தின் மூலமாக ஆசிரியர் சொல்லக்கூடிய செய்தி என்ன? மேற்சொன்ன உருவகங்கள் அனைத்துமே, கடவுளைப் பற்றிச்சொல்லக்கூடிய காரியம் ஒன்றே ஒன்று தான். கடவுள் பாதுகாப்பும், புகலிடமுமாய் இருக்கிறார் என்பதுதான் அது. இறைவன் இஸ்ரயேல் மக்களைப் பாதுகாத்து வந்த தருணங்களை இந்த பாடலானது எடுத்துரைக்கிறது. இஸ்ரயேல் மக்களை மட்டுமல்ல, யாரையெல்லாம் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துவதற்காக இறைவன் தேர்ந்தெடுத்திருந்தாரோ, அவர்கள் அனைவரையும் ஆண்டவர் காத்து வந்திருக்கிறார். குறிப்பாக, தாம் திருப்பொழிவு செய்த அனைவரோடும் ஆண்டவர் உடனிருந்திருக்கிறார். அவர்கள் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கிறார். எதிரி நாட்டினரை வெற்றி கொள்ள முடியாது என்கிற நிலை இருந்தபோதிலும், ஆண்டவர் அவர்களை அற்புதமாக வழிநடத்திய, பாதுகாப்பு...