Tagged: இன்றைய வசனம் தமிழில்
மத்தேயு 6 :8 “நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்”. நம்மை, நம் தேவையை, நம் குறைகளை, நம்மைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிவார். “நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும்”( 2 அரசர்கள் 19 :27) இதுதான் நம் தெய்வம். “இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார்.” அந்த பெண் எதுவும் கேட்கவில்லை.கேட்பதற்கு முன் அவளது தேவையை இயேசு அறிவார். இந்த நோயிலும் வேதனையிலும் பதினெட்டு ஆண்டுகள் கடும் பாடுகள்பட்டபோதிலும் இயேசு போதிப்பதைக் கேட்க தொழுகைக்கூடம் வந்திருக்கும் அப்பெண்ணின் மனதையும் தெய்வ பக்தியையும் அவளது விசுவாச வாழ்வையும் அவர் அறிவார். எனவே தம் கையை அவள்மீது வைக்கிறார்.குணப்படுத்துகிறார். நம்மையும் நம் இயேசு அறிவார். நம் தேவைகளை அறிவார். நாம் கேட்பதற்கு முன் நமக்கு தருவார். ஒரு சிலவற்றை அப்பெண்...
Like this:
Like Loading...
பார்வையற்ற மனிதன் பர்த்திமேயு ஒரு விவிலியக் கதாநாயகன். அவர் இயேசுவிடமிருந்து பார்வை பெற்ற பாணியே ஒரு வித்தியாசமான பாணிதான். அவருடைய தனித்தன்மை பின்வரும் வழிகளில் வெளிப்படுகிறது: 1. பார்வையற்ற அவர் நம்பிக்கை இழந்து, விரக்தியுடன் வாழவில்லை. நம்பிக்கை நிறைந்த ஒரு மனிதராக இருந்தார். எனவேதான், இயேசு அவ்வழியே போகிறார் என்று அறிந்ததும், கத்தி வேண்டினார். 2. பிற மனிதர்கள் அவரைப் பேசாதிருக்குமாறு அதட்டியும்கூட, என்மீது இரங்கும் என்று இன்னும் உரக்கக் கத்தினார். 3. பின்னர், தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார் என்று எழுதியுள்ளார் நற்செய்தியாளர். 4. இயேசு அவருடைய விருப்பத்தை வினவியபோது, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்று தம் விருப்பத்தை அறிக்கையிட்டார். 5. இறுதியாக, இயேசு நீர் போகலாம் என்று அவரைப் பார்வையுடன் அனுப்பியபோது, அவர் இயேசுவைப் பின்பற்றி, அவருடன் வழி நடந்தார் என்று முடிகிறது இக்கதாநாயகனின் கதை. பர்த்திமேயுவிடமிருந்து இந்த ஐந்து பாடங்களையும் நாம்...
Like this:
Like Loading...
இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த போது மக்கள் மனம் மாறி நற்செய்தியை நம்பவேண்டும் என்று கேட்டார். உள்ளத்தில் மாற்றம் ஏற்படும்போது மனித சிந்தனையில் மாற்றம் தோன்றும்; சிந்தனை மாறும்போது நம் ஆழ்ந்த நம்பிக்கைகள் புதிய நிலை அடையும்; நம்பிக்கைகள் உருமாற்றம் பெறும்போது நம் செயல்கள் அவற்றிற்கு ஏற்ப அமையும். எனவே, மனம் மாறுங்கள் என்று இயேசு விடுத்த அழைப்பு மனித வாழ்க்கையில் பேரளவிலான ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று இயேசு விரும்பியதைக் குறிக்கின்றது. மாற்றம் என்பது எப்போதுமே நலமாக அமையும் என்பதற்கில்லை. சிலர் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக மாறக் கூடும். ஆனால் இயேசு எதிர்பார்த்த மாற்றம் அதுவன்று. இயேசு யார் என்பதை மக்கள் முழுமையாக உணராமல், இயேசுவின் வாழ்வில் கடவுள் ஒரு மாபெரும் புதுமையை நிகழ்த்துகிறார் என்பதை அறியாமல் இருந்த வேளையில்தான் இயேசு அவர்கள் தங்களுடைய மன நிலையை மாற்றிக்கொண்டு, கடவுள் தாமே இயேசுவின் வழியாக மக்களுக்கு மீட்புப் பற்றிய...
Like this:
Like Loading...
இயேசு இறையாட்சி பற்றிப் போதித்த வேளையில் அவர் வழியாகக் கடவுள் பேசுகின்றார் என்ற உண்மையைச் சிலர் ஏற்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை. இயற்கையில் தோன்றுகின்ற அடையாளங்கள் வழியாகப் பல உண்மைகளை அறியக் கற்றுக்கொண்ட மனிதர் கடவுளிடமிருந்து வருகின்ற அடையாளங்களை ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று இயேசு கேட்டார். வானம் சிவந்தால் கால நிலை நன்றாக உள்ளது எனவும், காற்று மந்தாரமாக இருந்தால் இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும் எனவும் (காண்க: மத்தேயு 16:2-3) அறிந்துகொள்ள மனிதருக்கு இயலும் என்றால் கடவுளாட்சி பற்றிய அடையாளங்களின் பொருளை அவர்கள் அறியத் தவறியது ஏன்? தம்மை மனிதருக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள் பல அடையாளங்கள் வழியாகத் தம் உடனிருப்பையும் வல்லமையையும் நமக்கு அறிவிக்கின்றார். கடவுளின் வெளிப்பாடு இன்றைய உலகிலும் தொடர்கிறது. இந்த உண்மையை 2ஆம் வத்திக்கான் சங்கம் எடுத்துரைக்கிறது. இயேசுவின் நற்செய்தியை ஒவ்வொரு தலைமுறையினரும் நன்முறையில் புரிந்து செயல்பட வேண்டும் என்றால் ”காலத்தின் குறிகளை” நாம் கண்டுகொண்டு...
Like this:
Like Loading...
நெருப்பு பல விதங்களில் நமக்குப் பயன்படுகிறது. உணவு சமைப்பதற்கு நெருப்பு உதவுகிறது. குளிர் காலத்தில் நெருப்பின் அருகே அமர்ந்து குளிர்காய்வது இதமான அனுபவம். அழுக்குகளைச் சுட்டெரித்து அழிப்பதற்கும் நெருப்பு பயன்படுகிறது. அதே நேரத்தில் நெருப்பு அழிவுக்கும் காரணமாகலாம். கலவரங்கள் ஏற்படும்போது வீடுகளுக்கும் ஊர்களுக்கும் தீவைத்து அழிக்கின்ற செயல்கள் இப்போதும் நடந்துவருவது ஒரு கசப்பான அனுபவம். இயற்கையாகவோ மனிதரின் கவனக்குறைவாலோ காடுகளில் தீ எரிந்து பெரும் அழிவு ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு ஆக்கவும் அழிக்கவும் பயன்படுகின்ற தீயை மூட்டிவிட இயேசு வந்தார் என்றால் அதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இயேசுவின் உள்ளத்தில் ஒரு தீ எரிந்துகொண்டிருந்தது. அதுதான் கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் தணியாத ஆர்வம். இந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட இயேசு இவ்வுலகத்தில் மனித உள்ளங்களில் ஒரு தீயை மூட்டிட வந்தார். கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணரவேண்டும் என்னும் ஆர்வம்தான் இயேசுவின் போதனைக்கும் செயல்பாட்டுக்கும் உந்துசக்தியாக அமைந்தது....
Like this:
Like Loading...