Tagged: இன்றைய வசனம் தமிழில்
‘நான் போகும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று இயேசு சொல்கிறார். இயேசு சொன்னதின் பொருள்: மகிமையோடு அவர் தந்தையாகிய கடவுளிடம் திரும்புகிற இடத்தை. ஆனால், அவருடைய எதிரிகள் புரிந்துகொண்டது: இயேசு நரகத்திற்கு போகப்போகிறார் என்று. ஏனெனில் தற்கொலை செய்வோர் அனைவரும் நரகத்திற்குச்செல்வார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே, இயேசு தற்கொலை செய்துகொண்டு நரகத்திற்குப்போகப்போகிறார். நம்மால் அங்கே செல்ல முடியாது என்பதை இயேசு சொல்வதாக, யூதர்கள் நினைத்தனர். இயேசு சொன்னது ஒரே செய்திதான். ஆனால், அது புரிந்துகொள்ளப்பட்ட விதம் வேறு, வேறானது. இங்கே புரிதலில் தவறு இருக்கிறது. இந்த நற்செய்திப்பகுதியில், யூதர்களின் தவறான புரிதலுக்கு காரணம் என்ன? எது சரியான புரிதல்? என்பதற்கான பதிலை நாம் பார்க்கலாம். ஒரு புத்தகம் வாசிக்கிறோம். அந்தப்புத்தகத்தை சரியாகப்புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த புத்தக ஆசிரியரின் எண்ண ஓட்டத்தோடு இணைந்து நாம் வாசிக்க வேண்டும். நமது எண்ண ஓட்டத்தில் நாம் வாசித்தால், அதனை சரியாகப் புரிந்துகொள்ள...
Like this:
Like Loading...
இயேசுவுக்கும், யூதச்சங்கத்தினருக்கும் நடைபெறும் இந்த வாக்குவாதம் யெருசலேம் ஆலயத்தின் கருவூலப்பகுதியில் நடைபெறுகிறது. ஆலயக்கருவூலப்பகுதி ஆலயத்தின் பெண்கள் முற்றத்தில் அமைந்திருந்தது. யெருசலேம் ஆலயத்தின் முதல் முற்றம் புறவினத்தார்க்கு உள்ள முற்றம். இரண்டாம் முற்றம் பெண்களுக்கானது. பெண்கள் முற்றத்தைச்சுற்றி அமைந்த சுவற்றில் 13 இடங்களில் காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவான வகையில் ‘எக்காளம்’ போன்ற ஒரு அமைப்பை வடிவமைத்திருந்தனர். ஒவ்வொரு காணிக்கைப்பெட்டியிலும் போடும் பணமும், குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. முதல் இரண்டு காணிக்கைப்பெட்டிகளில் ஒவ்வொரு யூதரும் செலுத்த வேண்டிய ஆலய வரிக்கான பணமாகும். 3 வது மற்றும் 4வது பெட்டிகளில், தூய்மைப்படுத்தும் சடங்கிற்காக காணிக்கை செலுத்தப்படும் இரண்டு மாடப்புறாக்கள் வாங்குகிற பணம் செலுத்தப்பட்டது. 5வது பெட்டியில், பலிசெலுத்துவதற்கு வாங்கப்படும் விறகுகளை வாங்குவதற்குப் பயன்பட்டது. 6வது பெட்டியில் சாம்பிராணி வாங்குவதற்கான காணிக்கை போடப்பட்டது. ஏழாவது பெட்டியில், பலிசெலுத்தப்பயன்படும் தங்கப்பாத்திரங்களை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. ஏனைய 6 காணிக்கைப்பெட்டிகளில், தங்களுடைய விருப்பக்காணிக்கைகளை மக்கள் போடுவது வழக்கமாக இருந்தது. எனவே, இந்த...
Like this:
Like Loading...
இயேசு தனது போதனையில் நோயாளிகளுக்காக, பாவிகளுக்காக தான் வந்திருப்பதாக அடிக்கடி கூறுகிறார். இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் ஒருவரை அவரிடம் கொண்டு வருகிறார்கள். வந்திருக்கிற அனைவர் முகத்திலும் ஒருவிதமான அருவருப்பு காணப்படுகிறது. அந்த அருவருப்பின் பின்புலத்தில் ஒருவிதமான பெருமிதமும் காணப்படுகிறது. சட்டத்திற்கு எதிராகச் சென்ற பெண்ணை கையும், களவுமாக பிடித்துவிட்ட கர்வம், அவர்களது கண்களில் தெரிகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சி மூலமாக இயேசு நமக்கு அருமையான செய்தியை தருகிறார். எடுத்த எடுப்பிலேயே, தவறு செய்தவர்களை நாம் பார்க்கிறபோது, வெறுப்புணர்வோடு, கோப உணர்வோடு நாம் பார்க்கிறோம். ஆனால், அவர்களை முதலில் பரிதாப உணர்வோடு பார்ப்பதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். ஒரு மருத்துவர் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னிடம் மருத்துவத்திற்காக வருகிறபோது, கோபப்படுவதில்லை. அவருடைய எண்ணமெல்லாம், நோயை தீர்ப்பதிலும், முடிந்தவரை நோயாளிக்கு ஆறுதலாக இருப்பதிலும் இருக்கிறது. அதேபோலத்தான், தவறு செய்தவர்களையும் நாம் அணுக வேண்டும். தவறு செய்கிற சூழ்நிலை, பிண்ணனி, அணுகுமுறை, தவறு...
Like this:
Like Loading...
தலைமைக்குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் இயேசுவைப்பிடிக்காமல் திரும்பி வந்தனர். அவரது போதனையைக் கேட்டு அவர்களே மலைத்துப்போயினர். இதைக்கேட்ட பரிசேயர்கள் அவர்கள் மீது கோபமடைந்தனர். அப்போது நிக்கதேம், இயேசுவுக்காகப் பரிந்து பேசுகிறார். தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திக்கொள்ள, சட்டத்தைக் கையிலெடுக்கிறார். ”பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம்” (விடுதலைப்பயணம் 23: 1). இயேசுவைப்பற்றி அவர்கள் சொல்வது தவறு என்பது நிக்கதேமுக்கு தெரிந்திருந்தது. அதை எதிர்த்துக் கேட்கவும் செய்கிறார். ஆனாலும், அவர் பயப்படுகிறார். பட்டும் படாமலும் பேசி, தனக்கு ஆதரவு இல்லையென்று தெரிந்தவுடன், அவர் வாய்மூடி மெளனியாகி விடுகிறார். இன்றைக்கு பொதுநன்மைக்காய் உழைக்கிற மனிதர்கள் நம் மத்தியில் பலர் இருந்தாலும், எவற்றையும் எதிர்கொள்ள அவர்கள் துணிவு கொண்டிருந்தாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு நமது ஆதரவு தெரிவிக்கக்கூட நாம் தயங்கிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் மீது அவதூறுகள் வீசப்படுகிறபோது, அவர்கள் அநியாயமாகத்தண்டிக்கப்படுகிறபோது, தட்டிக்கேட்காமல், நமக்கு ஏன் வீண் வம்பு என ஒதுங்குவதற்கு முயல்கிறோம்....
Like this:
Like Loading...
இயேசு யூதர்களுக்கு மத்தியில் போதித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய போதனையில் காணப்பட்ட இரண்டு செய்திகள், யூதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல் செய்தி: இயேசு கடவுளிடமிருந்து வந்ததாகச் சொன்னது. இரண்டாவது செய்தி: யூதர்களுக்கு கடவுள் யார்? என்பது தெரியவில்லை என்பது. இயேசுவின் இந்த இரண்டு செய்திகளுமே, யூதர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல, எரிச்சலையும், கோபத்தையும் கொண்டு வந்தது. எதற்காக யூதர்கள் கோபப்பட வேண்டும்? அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. யூதர்கள் தாங்கள் மட்டும் தான், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தாங்கள் மட்டும் தான் கடவுளை அறிந்தவர்கள் என்ற, கர்வம் கொண்டிருந்தார்கள். பிற இனத்தவர்களை மிகவும் இழிவாகக் கருதினார்கள். அப்படிப்பட்ட யூதர்களைப்பார்த்து, கடவுளைப்பற்றி ஒன்றும் தெரியாது, என்று சொன்னால் நிச்சயம் அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இயேசுவின் இந்த போதனை, அவர் மீது குற்றம் சுமத்துவதற்கு, அவருடைய எதிரிகளுக்கு மிகவும் எளிதாய்ப் போனது. இதுநாள் வரை ஓய்வுநாள் ஒழுங்குகளை மீறுகிறவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது. இப்போது, கடவுளுக்கு...
Like this:
Like Loading...